வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது காணி உரித்துப் பதிவுகள்


 .

அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி உரித்து பதிவுக்கான மண்ணின் மகிமை (பிம்சவிய) வேலைத் திட்டம் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாணக் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு.
நில அளவைத் திணைக்களம், காணி நிர்ணய திணைக்களம், காணி ஆணையா ளர் நாயகத் திணைக்களம், பதிவாளர் நாய கத் திணைக்களம் என்பன இணைந்து மண்ணின் மகிமை வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.நில அளவைத் திணைக்களத்தினால் இலவசமாக நில அளவை செய்யப்பட்டு காணியின் உரித்து நிர்ணயம் செய்யப்பட்டு காணிக்கான உரித்துச் சான்றிதழ் பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொருவரும் தத்தமது காணிக்கான உரிமை கோரும் விண்ணப்பத்தை கிராம சேவையாளர்களிடமிருந்து இலவசமாக எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்காது பெற்றுக் கொள்ள முடியும்.
வெளி நாடுகளில் உள்ளவர்கள் www.bimsaviya.gov.lk என்ற இணையத்தில் தமது விண்ணப்பங்களைப் பெற்றுத் தமது பிரதேச செயலருக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும். அத்துடன் வெளி நாட்டிலுள்ளவர்கள் தமது உறவினர் மூல மாகவும் கிராம சேவையாளர்களிடம் சமர்ப் பிக்கலாம். இதற்கு உரித்துத் தத்துவம் (Attorney power) தேவையில்லை.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் முன்னோடியாக ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டன. யாழ் மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலகம், கிளிநொச்சியில் கரைச்சி உதவி அரச அதிபர் பணிமனை, முல்லைத் தீவில் கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர் பணிமனை, மன்னாரில் முசலி பிரதேச செயலகம், வவுனியாவில் வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பணிமனை ஆகியவற்றிலேயே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்குறிப்பிட்ட ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் தமது விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவை தவிர்ந்த வட மாகாணத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் நவம்பர் மாதம் 20 ஆம் திக திக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

nantri:pon

No comments: