.
ஒருவர் சிவனைக் குறித்து நீறாவாய், நெருப்பாவாய், கூறாவாய்
கொழுந்தாவாய், நட்டமாவாய், நஞ்சாவாய் என ஒரு வெண்பாப் பாட
வேண்டும் என்று கேடடுக் கொண்டபோது பாடியது
நீறுஆவாய் நெற்றி நெருப்பு ஆவாய் அங்கம்இரு
கூறுஆவாய் மேனி கொளுத்துவாய் - மாறாத
நட்டம்ஆ வாய்சோறு நஞ்சுஆவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பாய் இனி.
முருகன் குறத்தியை மணந்தான் என்று சிவன் முதலானோர்
வருந்தியதற்கு வேடிக்கையாகப் பாடியது
மருகுஇருக்கும் வேளூரின் வலித்தமகன்
குறமகளை மணந்தான் என்று
உருகிஅரன் நஞ்சுஉண்டான்; உமையவளும்
தவம்புரிந்தாள் உயர்மால் மேனி
கருகிமிக மண்தின்றான்; கமலன்முகம்
நால்ஆனான்;கடவு ளோர்கள்
இருவிழியும் இமையாமல் இரவுபகல்
உறங்காமல் இருக்கின் றாரே!
கயிற்றாற்றில் உள்ள பெருமானைத் தூக்கும்படி காளமேகப்
புலவரை வருத்திச்சுமத்தியபோது பாடியது
பாவைமணம் கமழுகின்ற கயிற்றாற்றுப்
பெருமாளே! பழிகா ரா! கேள்
வேளைஎன்றால் இவ்வேளை பதினாறு
நாழிகைக்கு மேல்ஆ யிற்று! என்
தோளைமுறித் ததும்அன்றி நம்பியா
னையும்கூடச் சுமக்கச் செய் தாய்!
நாளைஇனி யார்சுமப்பார்? எந்நாளும்
உன்கோயில் நாசம் தானே!

No comments:
Post a Comment