தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள்




அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கலை பண்பாட்டு கழகத்தின் தியாகி தீலீபன் மெல்பேண், சிட்னி நினைவு அஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல் வணக்கம்!

அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, Preston Town Hall, 284 Gower street, Preston (Melway Ref: 18 G12) இலும், சிட்னியில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை Homebush Boys High School மண்டபத்திலும் - தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிட்னி, மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். அந்நிகழ்வு பற்றிய அறிவித்தல்கள்(Pdf, Jpg) இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து இவ்வறிவித்தலை உங்கள் ஊடகங்களினுாடாக வெளியீட்டு தகுந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ் உறவுகளிற்கும் தெரியப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

சிட்னி தியாகதீபம் திலீபன் கலை மாலை நிகழ்வில் திலீபனுக்கு அஞ்சலி, சிந்தனையைத் தூண்டும் இளையோரும் பங்குகொள்ளும் பட்டிமன்றம், என்பனவற்றுடன், இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கேட்டுத் தன்னுடலை எரிதழலாக்கிக் காவியமான செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளன.

மெல்பேண் நிகழ்வில் தியாகதீபம் திலீபனுக்கு மலர்வணக்கம், எழுச்சி நடனங்கள், வில்லுப்பாட்டு, தாயக எழுச்சிகானங்கள், சிறப்புரை போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நன்றி.

No comments: