.
13/9/2011
13/9/2011
நடப்பு ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தை அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் வென்றார்.
பிரேசில் நாட்டில் சா பாவ்லோ நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இறுதிச் சுற்றில் சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைம், அங்கோலா, ஆஸ்திரேலியா , பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 10 நாட்டு அழகிகள் தேர்வாகினர்.
இவர்களில் அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் உட்பட 5 அழகிகள் பட்டத்துக்குரிய சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் லைலா லோபஸ் வெற்றி பெற்று உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி நவரத்தே, அவருக்கு மகுடம் சூட்டி வைத்தார். உக்ரைன் அழகி ஒலிசியா இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரேசில் அழகி மக்காடோ மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் 89 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதற்கு முன்னர் 2006-ல் 86 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி இணையம்
No comments:
Post a Comment