அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கைக்கு புத்துயிரளிக்க அவுஸ்திரேலியா திட்டம்

.
Tuesday, 13 September 2011

கன்பேரா: மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பும் உடன்படிக்கைக்கு புத்துயிரளிக்க தமது அரசு திட்டமிட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.

அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையிலான குடியேற்ற சட்ட மூலச் சீர்த்திருத்தங்களுக்கு தனது தொழிற்கட்சியின் ஆதரவை பெற்றுள்ள நிலையிலேயே கிலார்ட் இவ்வாறு கூறியுள்ளார்.

மலேசியாவுக்கு 800 அகதிகளை அனுப்பும் திட்டம் சட்டத்திற்கு முரணானதென அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இம்மாத முற்பகுதியில் தீர்ப்பளித்திருந்தது.

இதனால் இங்கு புகலிடக் கோரிக்கையளார்களை கட்டுப்படுத்தும் அரசின் திட்டம் வெற்றியளிக்கவில்லை.

படகு அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்கப்படமாட்டதென்பதனைக் கூறும் வகையிலேயே இந்த உடன்படிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அகதிகளை பராமரிப்பதற்குரிய போதுமான வசதிகள் மலேசியாவில் இல்லையென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கையை மீண்டும் அமுல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளதாக உள்ளதாக கிலார்ட் கூறியுள்ளார்.

ஆனால், பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படும் சட்டதிருத்தங்கள் மிகவும் பரந்தவையாக இருப்பதுடன் அவை மூன்றாவது நாடொன்றிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி அவர்களின் சட்ட விசாரணைகளை செயற்படுத்துவதற்கு அரசிற்கு அங்கீகாரம் வழங்குமெனவும் அவர் தெரிவித்தார்.

பி.பி.சி.
நன்றி தினக்குரல்


No comments: