தீலீபனின் கனவு

.


சுற்றி நின்று
நாம் அழுதோம்
தீ நூரவில்லை
தீலீபன் வைத்த தீ
இன்னும் அணையவில்லை

ஆங்காங்கே எரிகிறது
ஆரும் கேட்கவில்லை
ஆகாயம் கூட இப்படி
அழுததில்லை



கண்டங்கள் தாண்டி
தீ முண்ட போதும்
கனதியான யாரும்
கண்டுகொள்ளவில்லை

தீலீபனின் கனவு
தீராமல் போச்சு-கொடும்
தீ மூண்டு ஈழம்
எரிந்து சாம்பலாச்சு

பாரதமும் எம்மை
பழி தீர்க்கல்லாச்சு-இதை
பாராமல் உலகம்-ஏன்
நின்று போச்சு-தீலீபா

மூவெட்டு ஆண்டுகள்
உருண்டோடிப் போச்சு
முள்ளிவாய்க்காலா-தமிழன்
முற்றுப் புள்ளி ஆச்சு.

கவிஞர் ஆவூரான்.

No comments: