உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

பாகிஸ்தான் ஸிம்பாப்வேயை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைவு

கண்டி பல்லேகல மைதானத்தில்  பாகிஸ்தான்- ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி காலிறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

Asad Shafiq's unbeaten 78 steered Pakistan to victory in Pallekele, confirming their spot in the quarter-finalsகண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 39.4 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

ஸிம்பாப்வே அணியின் டைலர் 4 ஓட்டங்களுக்கும் சக்காபுவா ஓட்டம் எதுவும் பெறாமலும், தைபு 19 ஓட்டங்களையும் சிபண்டா 5 ஓட்டங்களையும் லம்ப் 16 ஓட்டங்களையும் உடயோ 18 ஓட்டங்களையும் அணித் தலைவர் சிகம்புரா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

சிம்பாப்வே அணியில் எர்வின் மாத்திரம் 82 பந்துகளை எதிர்கொண்டு 5 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்று அரைச் சதத்தைக் கடந்தார். அவர் மட்டுமே அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த ஓரளவுக்கு அடித்தளமிட்டார்.


பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக உமர்குல் 3 விக்கெட்டையும், ரஷாக், றியாஸ், அப்ரிடி, ஹாபிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைப் பதம் பார்த்தனர்.

இதேவேளை போட்டி மழை பெய்ததால் பாகிஸ்தான் அணிக்கு 38 ஓவர்களில் 162 ஓட்டங்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Ray Price celebrates the wicket of Ahmed Shehzadஇதற்கு அமைவாக பாகிஸ்தான் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஹபிஸ், செஷாட் ஆகியோர் களமிறங்கினர். செஷாட் 8 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை 17 ஆகும்.

ஹபிஸ¤டன் இணைந்து கொண்ட அஷாட் சபீக் இருவரும் நல்லதொரு இணைப்பாட்டத்தைக் கொடுத்து பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.

இருவரும் நிதானமாக ஆடி 2வது விக்கெட்டுக்காக 99 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஹபிஸ் 65 பந்துகளை எதிர்கொண்டு 6 பெளண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதே போல் மறுமுனையில் நின்ற சபீக் 97 பந்துகளை எதிர்கொண்டு 78 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

பின்னர் வந்த அணித் தலைவர் அப்ரிடி 3 ஓட்டத்துடனும் யூனுஸ்கான் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் சிம்பாப்வேயின் பிரைஸ் 2 விக்கெட்டையும் உடசேயா 1 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இதேவேளை இப்போட்டியில் உமர் அக்மல் காயம் காரணமாக விளையாட வில்லை. அவருக்குப் பதிலாக சபீக் களமிறக்கப்பட்டார்.

போட்டியின் ஆட்டநாயகனாக உமர்குல் தெரிவானர்.

பங்களாதேஷ் அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி
பங்களாதேஷ் அணியின் இம்ருல் கைஸின் அபார ஆட்டத்தின் மூலம் பங்களாதேஷ் அணி 06 விக்கெட்டுகள் மற்றும் 52 பந்துகள் மீதமிருக்க வெற்றியீட்டியது. பங்களாதேஷ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களைப் பெற்றது.

Imrul Kayes reaches 50பங்களாதேஷ் 161 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால், இம்ருல் கைஸ் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் 4 பந்துகளை எதிர்கொண்டு எதுவித ஓட்டமும் பெறாமல் புக்காரியின் பந்தில் போல்ட் ஆனார். அப்போது பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கை பூச்சியமாகும்.

பின்னர் கைஸ¤டன் ஜோடி சேர்ந்த சித்தீக் இருவரும் சிறப்பான முறையில் ஆடி பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இருவரும் இணைந்து 2வது விக்கெட் இணைப்பாட்டமாக 92 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதேவேளை கைஸ¤டன் இணைந்து விளையாடிய சித்திக் 53 பந்துகளை எதிர்கொண்டு 4 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்து சென்றார். இம்ருல்கைஸ் 113 பந்துகளை எதிர்கொண்டு 05 பெளண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

நபீஸ் 37 ஓட்டங்களையும் ஹசன் 1 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்தனர். ரஹீம் 11 ஓட்டங்களை ஆட்டமிலக்காமல் பெற்றார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நிதானமான முறையில் அடித்து ஆடினர்.

பொர்ரன், புக்காரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கூப்பர் இரண்டு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இம்ரூல் கைஸ் தெரிவானார்.

பங்களாதேஷ் அணி இப்போட்டியில் வெற்றியீட்டினாலும் அவ்வணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகவில்லை.

Mudassar Bukhari celebrates Tamim Iqbal's wicketபங்களாதேஷ் அணி தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் வென்றால் அவ்வணி காலிறுதிக்குள் நுழையும்.

இல்லாத பட்சத்தில் இங்கிலாந்து அணி காலிறுதிக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் பங்களாதேஷ் அணியைவிட கூடுதலாக இருப்பதால் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவு அணியை வென்றாலும் பங்களாதேஷ் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியை வைத்து காலிறுதி வாய்ப்பு தீர்மானிக்கப்படும். சிட்ட கொங்கில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 160 ஓட்டங்களுக்கு நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பூவா தலையா வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஸ்வார்ஸின்ஸ்கி (28), பாரெசி (10) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் வந்த புகாரி (6), கூப்பர் (29) ஆகியோர் பங்களாதேஷ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினர்.

ரயான் டென் டஸ்காத் மட்டும் தாக்குப்பிடித்து அரைச் சதம் எடுத்தார். இவர் 71 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடங்கும்.பின்னர் வந்த கெர்வெஸி (18), குரூத் (4), போர்ரென் (3), பர்மன், பீட்டர் சீலர், அடீல் ராஜா ஆகியோர் டக்அவுட் ஆனார்கள்.

46.2 ஓவர்களில் நெதர்லாந்து அணி 160 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை யும் இழந்தது.

பங்களாதேஷ் தரப்பில் அப்துர் ரசாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சகிபுல் ஹஸன், ஹுஸைன், சுரவாடி ஷ¤வோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

தென்னாபிரிக்க அணி 131 ஓட்டங்களால் வெற்றி


JP Duminy played a well-paced innings before holing out on 99தென்னாபிரிக்க அணியின் ஜே.பி. டுமினியின்  ஆட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க அணி 131 ஓட்டங்களால் வெற்றியீட்டி காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது.

உலகக் கிண்ணப் போட்டி யின் குழு பி பிரிவில் தென்னாபிரிக்க - அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி கொல்கத்தாவில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணித்தலைவர் தனது அணி களத்தடுப்பில் இடுபடும் என்பதற்கு அமைவாக தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக அம்லா, ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.

தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அம்லா தனக்கு உரிய பாணியில் அடித்து ஆட முனை கையில் 18 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் அணித்தலைவருடன் ஜோடி சேர்ந்தார் வோன்விக். ஸ்மித் 7 ஓட்டங்களைப் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார். பின்னர் கலிஸ் வோன்விக்குடன் இணைந்து ஓரளவுக்கு ஓட்டங்களைக் குவித்தனர்.

வோன்விக் 41 பந்துகளை எதிர்கொண்டு 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 84 ஆகும். கலிஸ¤டன் ஜோடி சேர்ந்த டுமினி இருவரும் தங்களுக்கு உரிய முறையில் ஆடிக் கொண்டிருந்த போது கலிஸ் 19 ஓட்டங்களுக்கு ரன் அவுட்டானார். பின்னர் டுமினியுடன் இணைந்த பிளிசஸ் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்க அணி 115 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் இக்கட்டான நிலையில் இருந்தது அவ்வணி. பின்னர் டுமினி, இங்ராம் ஆகியோரின் 6 வது விக்கெட் இணைப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க அணி 204 ஓட்டங்களைக் கடந்தது அவ்வணி. இங்ராம் அதிரடியாக ஆடி 46 ஓட்டங்களைப் பெற்று அரைச்சதம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.

William Porterfield pulls to the fine leg boundary பின்னர் தென்னாபிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்ட டுமினி 103 பந்துகளை எதிர்கொண்டு 6 பெளண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கலாக 99 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். அவரால் இவ் உலகக் கிண்ணப்போட்டியில் சதம் பெறும் வாய்ப்பு கைநழுவிப்போனது.

இதேவேளை அவர் ஒரு நாள் போட்டியில் 13 வது அரைச் சதத்தைப் பெற்றார்.

பின்னர் ஜெகன் போத்தா ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றார்.

தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் அயர்லாந்து அணி சார்பாக ரன்கின், ஜோன்சன், மூனி, டெக்ரெல், ஸ்ரீலிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைப் பதம் பார்த்தனர்.

இதேவேளை அயர்லாந்து அணி 273 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக போட்டர்பீல்ட், ஸ்ரீலிங் ஆகியோர் களமிறங் கினர்.

அயர்லாந்து வீரர்கள் தென்னாபிரிக்க அணியின் பந்துகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

போட்டர் பீல்ட் 6 ஓட்டங்களு க்கும், ஸ்ரீலிங் 10 ஓட்டங்களுக் கும் ஜோசி 12 ஓட்டங்களுக்கும் என்.ஓ. பிரைன் 10 ஓட்டங்களுக் கும் வில்சன் 31 ஓட்டங்களுக்கும் அயர்லாந்தின் அதிரடி மன்னன் பிரைன் 19 ஓட்டங்களுக்கும் குஷேக் 7 ஓட்டங்களுக்கும் ஜோன்சன் 12 ஓட்டங்களுக்கும் மூனி 14 ஓட்டங்களுக்கும் டெக்ரல் 16 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து சென்றனர்.

ஈற்றில் அயர்லாந்து அணி 33.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று 131 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் பீட்டர்சன் 3 விக்கெட்டையும், மோர்கல் 3 விக்கெட்டையும், கலிஸ் 2 விக்கெட்டையும், போத்தா, டுமினி தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக டுமினி தெரிவானார்.

நியூஸ்லாந்தை இலகுவாக வென்றது இலங்கை


மும்மையில்  வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நியூஸிலாந்து அணியுடனான உலக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 112 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

குமார் சங்காரவின் அபார துடுப்பாட்டமும் முத்தையா முரளிதரனின் அபார பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.

குழு 'ஏ' இல் இவ்விரு அணிகளினதும் கடைசிப் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்கவும் திலகரட்ன தில்ஷானும் தலா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

எனினும் அணித்தலைவர் குமார் சங்ககார 111 ஓட்டங்களையும் உபதலைவர் மஹேல ஜயவர்தன 66 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்தியூஸ் 35 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி வீரர்களில் இம் மூவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்யை பெறவில்லை. முத்தையா முரளிதரன் 3 பந்துகளில் 7 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 35 ஓவர்களில் 153 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அணித்தலைவர் ரோஸ் டெய்லர் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்ட பாகிஸ்தான்

அவுஸ்திரேலிய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 வெற்றியீட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி 1999 ஆம் ஆண்டின் பின்னர் உலகக் கிண்ணப் போட்டியொன்றில் பெற்ற முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியஅணி 46.4 ஓவர்களில் 176 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 1992 ஆம் ஆண்டின் பின்னர் உலகக் கிண்ணப் போட்டியொன்றில் அவுஸ்திரேலியா பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.


பிரட் ஹடின் 42 ஓட்டங்களைப்பெற்றார்.பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் உமர் குல் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அப்துல் ரஸாக் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆஷாத் ஷபிக் 49 ஓட்டங்களையும் பெற்றனர். உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் பிரெட் லீ 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

உமர் அக்மல் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

இவ்வெற்றியின் மூலம் குழு 'ஏ' இல் பாகிஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்குழுவில் இலங்கை அணி 9 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும் அவுஸ்திரேலியா 9 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையும்பெற்றுள்ளன.

நியூஸிலாந்து 8 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் உள்ளது.


80 ஓட்டங்களால் இந்தியா வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 42-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி வீரர் ஷேவாக் காயம் காரணமாக இப் போட்டியில் இடம் பெற வில்லை. அவறுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெற்றார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக சச்சினும், காம்பீரும் களம் இறங்கினர். முதல் ஓவரை ராம்பால் வீசினார் சச்சின் எதிர் கொண்டார். முதல் பந்து பவுண்சராக மாறி பவுண்டரி கோடை தொட்டது. இதில் 1 பந்தில் 4 ரன் கிடைத்தது.

சச்சின் 2 ரன் எடுத்திருந்தபோது முதல் ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். ராம்பால் பந்து வீச்சில் தெண்டுல்கர் எதிர் கொண்ட பந்து விக்கெட் கீப்பர் தாமசிடம் சென்றது. அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. எனினும் தெண்டுல்கர் பெவிலியன் திரும்பினார். சச்சின் தெண்டுல்கர் சதம் அடித்து (ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இரண்டையும் சேர்த்து) 100-வது சதத்தை எட்டி சாதனை படைப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அவர் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

பின்னர் வந்த கோக்லி நிதானமா விளையாடி வந்தார். 4 ஓவர் வரை இந்தியா 1 விக்கெட் இழந்து 22 ரன்கள் எடுத்திருந்தது. நிதானமாக விளையாடி வந்த காம்பீர் ராம்பால் வீசிய 9-வது ஓவரில் ரூசிலிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். அவர் 26 ரன்கள் எடுத்தார்.

அடுத்தாக வந்த யுவராஜ் சிங் கோக்லியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தாக்கு பிடித்து விளையாடியது. 17 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து 89 ரன் எடுத்து விளையாடி வந்தது. யுவராஜ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 21-வது ஓவரில் யுவராஜ் இமாலய சிக்சர் ஒன்றை அடித்து ரகிகர்களுக்கு விருந்து படைத்தார். அவரை தொடர்ந்து கோக்லி 50 ரன்னை தொட்டார்.

பொறுப்புடன் விளையாடிய கொக்லி ராம்பால் வீசிய 33- வது ஓவரில் போல்டு ஆனார். அவர் 59 ரன்கள் எடுத்தார் இதில் 5 பவுண்டரிகளும் அடங்கும். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 173 ரன்களாக இருந்தது. அதன் பின் வந்த கேப்டன் டோனி யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். பொறுப்புடன் விளையாடி யுவராஜ் சதம் அடித்தார்.

42-வது ஓவரில் டோனி 22 ரன் அடித்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். பொறுப்புடன் விளையாடிய யுவராஜ் போலர்ட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அவர் 113 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இறுதியாக 49.1 ஓவரில் இந்திய அணி 268 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் அதிக பட்சமாக ராம்பால் 5 விக்கெட்டை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனால் 80 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்மித் 81 ரன்களும் சர்வான் 39 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்தியா "பி" பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தது. இதனால் காலிறுதியில் "ஏ" பிரிவில் மூன்றாம் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவுடன் மோ‌தவுள்ளது.

No comments: