மக்களாட்சி வதைப்படலம் - நாஞ்சில்நாடான்

 .மக்களின் ஆட்சி யெனும்
புன்மைத்தாய புகலுள
இரந்தும் உயிர்வாழும்
ஏழையர் தம் வாக்குள
செம்மொழித் தமிழெனும்
கிழிந்த செருப்புள
கொய்த பாவம் தின்றுயர்ந்த
சிந்தையிற் கூனுள குற்ற மகவுள
நாவெலாம் திகட்டாத தேனுள
கருத்தெலாம் கருநீல விடமுள
நோயுளவெனில் நோற்ற சுவர்க்கத்துச்
செவிலியர் மனையுள
கருங்கடல் கடந்த வைப்பின்
கனத்த பணமுள
வானவர் உலகத்து அமர வாழ்வுள
கோலக் கடலோர வெண்கலச் சிலையுள!
மாற்று ஏதுள!
கருப்புக் கொடியுள பேரணியுள ஒருவேளை
உண்ணா நோன்புள
வெள்ளித் திரையின் வீரம் பலவுள
நாளை வரும் தேர்வுள
மாற்றார்க்கான தனித்த அறுவடைக்
காலம் தானுள
மக்களின் ஆட்சியெனும்
புன்மைத்தாய புகலுள
குறையுண்டாகுமோ? 
     

No comments: