மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
26. ஆன்மிகச் சிங்கங்கள்


நீங்கள் இரும்புத் தசைகளும், உருக்கு நரம்புகளும் கொண்டவர்களாய்த் திகழ வேண்டும். உங்களின் ஒழுக்க உறுதியே தேவையான நம்பிக்கையினை பற்றுறுதியை – உங்களிடம் உருவாக்கும் அது எதிரிகளை எல்லாம் வெற்றி கொள்ளும். வாழ்க்கை என்ற பயிருக்குத் தைரியம் எனப்படும் எஞ்சாமையும், உறுதியான நம்பிக்கையுந்தான் மிகச் சிறந்த எருவாகும்;: மிகச்சிறந்த பூச்சிக்கொல்லி மருந்துங்கூட! ஆன்மீகக் களத்தில் ‘அரிமா’வாக (சிங்கங்களாக) திகழுங்கள்! வெற்றியின் மேல் முழுநம்பிக்கை வைத்துப் புலன்களாகிய காடுகளில் அஞ்சாது நடமாடுங்கள்! நீங்கள் நாயகர்களாக வேண்டும்: சுன்னஙகளாக வேண்டாம்! அதாவது ‘ஹீரொ’ ஆகவேண்டாம்: மானவன் என்பவன் மாதவன் ஆவான்: அதாவது மனிதன் என்பவன் கடவுள் ஆவான். அவன் அழிவுறாத, என்றும் உள்ள ஆன்மா ஆவான்!


27. கற்றவன் யார்
நான் இங்கே ஏராளமான மாணவர்கள் இருப்பதனைப் பார்க்கின்றேன். நல்லது, அவர்கள் எதற்காகப் படிக்கின்றார்கள்? எதனைப் படிக்கின்றார்கள்? அவர்களின் இலக்கு யாது? அவர்கள் நன்றாகப் படித்திருக்கின்றார்கள் என்று எப்படி முடிவு செய்வது? அவர்கள் பெற இருக்கின்ற சம்பளத்தை வைத்து முடிவு செய்வதா? அவர்கள் பெறுகின்ற பதவியின் நிலையை வைத்து முடிவு செய்வதா? இல்லை… இல்லவே இல்லை! கல்வி என்பது கட்டாயம் விவேகம் மற்றும் விநயத்தை வளர்க்க வேண்டும். படித்த, கல்வி கற்ற மனிதன் என்பவன், ‘கணநேரமே உள்ளது எது? பெருஞ்சிறப்பு வாய்ந்தது எது? நிலைபேறுடையது எது? உயிர்ப்புடையது எது? என்பதனை வேறுபடுத்தி அறியுந்திறன் அவன் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். அவன் நல்லதையும், பொன்னானவற்றையுமே கட்டாயம் கண்டறிய வேண்டும்!

28. பாரதம்
‘பாரதம்’ என்பதன் பொருள்: ‘ப’ அல்லது ‘பகவான்’ எனப்படும் தலைவராம் இறைவன் பால், ‘ரதி’ அல்லது ‘பற்று’ வைத்திருப்போர் வாழுகின்ற நிலம் என்பதாம்!

29. கற்றுக்கொண்டே இருங்கள்!
‘சிக்ஷனா’ என்பது ஒரு செயல்முறை! அது ஆசிரியரும், கல்வி பெறுவவோரும் கூட்டுறவாய் இணைதல் ஆகும். இருவருக்கும் அது மகிழ்ச்சியான அனுபவம், ஒரு பயனுள்ள இதயஞ்சார்ந்த நிகழ்வு. ‘சஷணா’ என்பது கணம் அல்லது நொடி எனப் பொருள்படும். எனவே, நீங்கள் அனைவரும் உங்கள் பள்ளி வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் கட்டாயமாக ஒரு நல்ல பாடத்தினைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பமாகும். எடுத்துக்காட்டாக, ஆசிரியர்வகுப்பறையினுள் நுழையும்போது, மாணவர்கள் அவரை வணங்குதல் வேண்டும்: அது ‘பணிவு’ என்பதில் உள்ள ஒரு பாடம் ஆகும்: மேலும் அது வயதிற்கும் புலமைக்கும் மதிப்பளிக்கக் கற்றுக் கொள்ளல், நன்றி செலுத்த அறிந்து கொள்ளல் போன்ற பாடங்களும் ஆகும். ஆசிரியருங்கூட தம்மிடம் நம்பிக்கை வைத்து அவரின் பேணுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்ட மாணவர்க்கு அவரின் உள்ளார்ந்த நேர்மையான செயலின் மூலமும், தன்னலமற்ற சேவையின் மூலமும் அந்த வணக்கத்திற்குத் தகுதியுடையவராகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். மாணவன் என்றும் அச்சத்தின் காரணமாக ஆசிரியரை மதிக்கக்கூடாது! அன்பினால் நெகிழ்ந்து அவன் அவரை மதிக்க வேண்டும்!

30. பெண்கல்வி
பெண்கள் தாம் இந்த நாட்டின் இல்லங்களை (ஹோம்) உருவாக்குபவர்கள். எனவே, இந்தப் பெண்கள் பள்ளியானது ஓர் அடிப்படை நிறுவனம் ஆகும். இந்த நகருக்கு (வேங்கடகிரி, இந்தியா) இது மிகவும் தேவையான ஓன்று. பெண்கள் இந்த நாட்டில் மிகவும் போற்றப்படுகின்றனர். இல்லத்தின் திருமகள் (கிருஹலட்சுமி) என்றும், தர்மபத்தினி என்றும், கடவுளை நோக்கிச் செல்லும் புனிதப் பயணத்தின் துணைவி என்றும், ‘தன்னை அறிதல்’ என்பதில் துணையாக நிற்பவள் என்றும், வீட்டின் தலைவி, இல்லத்தரசி என்றும் பலவாறாகப் பெண்ணானவள் மரியாதையுடன் மதிக்கப்படுகின்றாள். ஒரு நாட்டில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக, புனிதம் நிறைந்தவர்களாக இருப்பின், அந்த நாட்டின் ஆண்களும் கடும் உழைப்பாளிகளாக, கண்ணியம்மிக்கவராக, மகிழ்ச்சியானவராக இருப்பார், தியாகையர் பாடினார்: மிகமிக வலிமை வாய்ந்த நாயகர்கள் கூட (ஹீரோஸ்) ‘காந்த தாசா’ களாக உள்ளனர் என்று! அதாவது, பெண்களின் விருப்பத்திற்கேற்ப ஆடுபவர்களாக உள்ளனர் என்பது இதன் பொருளாம். எனவே பெண் என்பவள், தனிநபர் நிலையிலும், சமூக மேம்பாட்டிலும் மிகமுக்கியமான பங்கை, முடிவைத் தீர்மானிக்கின்ற பங்கினைப் பெற்றுள்ளாள். எனவே, இந்தப் பெண்களின் மீது அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனி போன்ற நாடுகளின் ‘நிலஇயல்’ (ஜியாக்ராஃபிகல்) பற்றிய மிக நுட்பமான விபரங்களைப் படித்தறிய வேண்டும் என்ற சுமையை நான் ஏற்க மாட்டேன். மாறாக, அவர்கள் மனஅமைதி, சமூக நல்லிணக்கம், சேவை, பொருளாதார மனநிறைவு பற்;றிய உத்திகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றே நான் விரும்புவேன்! அவர்கள் பொய்மை பேசிட அச்சப்படல் வேண்டும்: ஒழுக்கத்தில் இருந்து வழுக்கிவிடாமல் இருக்க அஞ்சவேண்டும்! அதாவது பொய்மை, ஒழுக்கக்கேடு பற்றி அஞ்சிட வேண்டும்: கடவுளை பற்றிய அச்சத்தை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும் இதுதான் மிகமுக்கியமானது!

1 comment:

Sivamjothi said...

Thanks baba for blessing sagakalvi book..

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி