அண்ணே றைற் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரனின் நாவலுக்கு பரிசு


.

தமிழகத்தில் உள்ள அமுதன் அடிகள் இலக்கிய விருது தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டுக்கான விருதை இவருடைய கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்னும் நாவல் பெற்றுள்ளது. இது குறித்து பிரபல வானொலி, மேடை அறிவிப்பாளர் எஸ்.கே. ராஜன் அலைகளுக்கு அனுப்பியுள்ள விபரங்கள்.

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய நாவல் –
கரையைத்தேடும் கட்டுமரங்கள்- தமிழகத்தில் சிறந்த இலக்கியப்பரிசு பெற்றதுஉலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்து}க்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நு}ல் சென்றடைய ஆவன செய்தால் , நிச்சயம் இந்த நு}ல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும்.
பி.எச். அப்துல் ஹமீட் (‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் – நாவலுக்கான முன்னுரையில்)
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின் மேற்குறித்த வார்த்தைகள் நிஜமாகியிருக்கின்றன. 2002ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப்படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு ‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு” வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளையினர், முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நு}லுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.
கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைத்துள்ளது.
பெப்ரவரி மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ற் அரங்கில் நடைபெறும் விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களால் இவ்விருது வழங்கப்பட்டது..
இந்திய ருபாய 15 ஆயிரம் உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்
தோப்பில் முகமது மீரான் (1996)
வல்லிக்கண்ணன் (1997)
இந்திரா பார்த்தசாரதி (1998)
நாஞ்சில் நாடன் (1999)
பூமணி (2000)
இமயம் (2001)
மேலாண்மை பொன்னுசாமி (2002)
பாமா (2003)
பெருமாள் முருகன் (2004)
எஸ்.வி. ராஜதுரை (2005)
கவிஞர் சல்மா (2006)
ஜோ டி குரூஸ் (2007)
ஆகியோர் இந்த விருதைப்பெற்றிருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் நடைபெறும் “அமுதன் அடிகள் அஙக்கட்டளை” இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்;கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் அண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் அண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகள் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

No comments: