தமிழ் சினிமா

பவானி

சினேகாவின் ஆக்ஷன் படம். விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐ.பி.எஸ். சிறிய மாற்றத்துடன் ரீமேக் ஆகியுள்ளது. உள்ளூர் அரசியல் தாதா கோட்டா சீனிவாசராவ். இவர் அமைச்சர் ஜி.ஆர்.வக்கீல் ராஜ்கபூர், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் ஆகியோரை கைக்குள் போட்டு, கடத்தல், இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தல் என அராஜகம் செய்தார். அவ்வூருக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி சினேகா மாற்றலாகி வருகிறார். கோட்டாவின் சமூக விரோத செயலை எதிர்க்கிறார். அவரது ஆட்களையும் கைது செய்கிறார். இதனால் இருவருக்கும் மோதல் முற்றுகிறது. சினேகாவை தீர்த்து கட்ட ஆட்களை ஏவுகிறார். மாணவர் போராட்டத்தில் தனித்து சிக்கிய சினேகாவை அடித்து நொறுக்குகின்றனர். ஆஸ்பத்திரியில் பிழைத்து கொள்கிறார்.




ஆனாலும் உடல் தகுதி இழந்ததாக பதவி இழக்கிறார். பிறகு கோட்டாவுக்கு உதவுவது போல் நடித்து அவர் கட்சியில் இணைந்து எப்படி பழி வாங்குகிறார் என்பது கிளைமாக்ஸ்... அழகான சினேகா முகத்தில் விறைப்பு, இறுக்கம் காட்டி அடி-தடி வீராங்கணையாக ரவுத்திரம் செய்கிறார். கோட்டா ஊருக்கு பதவி ஏற்க வரும் போது இளம் பெண்ணை துரத்தி வரும் ரவுடிகளை தாவி குவித்து நொறுக்குவது அனல். வில்லன்களை அடித்து சட்டையை பிடித்து இழுத்து ஜெயிலுக்குள் தள்ளுவதில் மிடுக்கு. கிளை மாக்சில் வதம் செய்வதில் ஆக்ரோஷம். அநீதிகளை சாடுபவராக வரும் சம்பத்தின் போராளித்தனம் அழுத்தம். அவர் பிளாஷ்பேக் கதை உருக்கம். கோட்டா சீனிவாசராவ் வில்லத்தனம் மிரட்டல். ஆரியன் குட்டி தாதாவாக சண்டித்தனம் செய்கிறார்.

இளவரசு, டெல்லி கணேஷ், ஜி.ஆர்.வலுவான பாத்திரங்கள். போலீஸ் ஏட்டாக வரும் விவேக்கும் அவரை ஏடாகூடமாக விபத்துக்குள்ளாக்கும் செல்முருகனும் சிரிக்க வைக்கின்றனர். காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கிச்சா. சினேகா அரசியல் கட்சி யில் இணைந்து பழிவாங்கும் சீன்களில் அழுத்தம் இல்லை. மாற்றி யோசித்து இருக்கலாம். தனக்கு கீழ் பணியில் உள்ள ரவுடி பொன்னம்பலத்திடம் சினேகா அமைதி காட்டுவ தும் சறுக்கல். தினா இசை, பூபதி ஒளிப்பதிவு பக்கபலம்.

நன்றி தினக்குரல்


No comments: