சிட்னி முருகன் ஆலயத் திருவிழா- தீர்த்தம்


அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது.  பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமை இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா  மக்கள் வெள்ளம் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி தீர்த்தமாடும்  அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.















4 comments:

kirrukan said...

தொடர்ந்து சிட்னி முருகனின் திருவிழா படங்களை தந்தமைக்கு டமிழ்முரசுக்கு நன்றிகள்.

அடாது மழை பெய்யினும் விடாது பக்தி பெருக்கு எடுக்கும் என்பதுக்கு சிட்னி வாழ் பக்த கோடிகள் சாட்சி...


தீர்த்த தண்ணி தலையில் பட வேண்டும் என்பதற்க்காக நான் பக்தர்களுடன் முன்டியடித்துகொண்டிருந்தேன்.....உடனே முருகன் இயற்கையான தீர்த்தை(மழை பெய்யத்தொடங்கினது)அளித்தார் எல்லோரும் எடுத்தோம் ஒட்டம்....புதூசா வாங்கின பட்டு வேஸ்டி,குருத்தா பழுதா போயிடும் என்ற நல்லெண்ணம்தான்.....

திருநந்தகுமார் said...

சிட்னி முருகன் பெருவிழாக்காலப் புகைப்படங்கள் அருமையாக இருந்தன. தொகுப்புக்கும் நினைவூட்டலுக்கும் நன்றிகள்.

கொடிமரம் இல்லாத ஆலயங்களில் நடைபெறும் விழாக்களை அலங்காரத் திருவிழாக்கள் என்று அழைப்பது வழக்கம். கொடியேற்றத்துடன் நடைபெறும் விழாக்களை திருவிழா என்றே அழைப்பது வழக்கம். வடமொழியில் மஹோற்சவம் என்பதற்கு தமிழில் பெருவிழா என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

kirrukan said...

[quote]திருநந்தகுமார் said...
. வடமொழியில் மஹோற்சவம் என்பதற்கு தமிழில் பெருவிழா என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்[/quote]
பெரியவருடன் (முருகன்)கதைக்கவே வட மொழி தேவைப்படுகிறது ஜயா..... இப்ப எதுவும் வட மொழியில் செய்தால் தான் மதிப்பு முக்கியமாக புலம்பெயர் தமிழர்களிடையே.....வணக்கம் சொல்லாமல் சாய்ராம் சொல்லுறம்

Pakthan said...

கோயில் திருவிழாவும் முடிஞ்சதுதான் முடிஞ்சுது வாழ்க்கை சரியான போறிங்கா இருக்கு நாலுபேர கண்டு நாலுவிடயத்த கதைக்கமுடியாமல் கிடக்கு. நாதஸ்வர கச்சேரியும் கேட்டு பிரசாதமும் சாப்பிட்டு நாலு கதையும் கதைச்சுப்போட்டு தண்ணீர்ப்பந்தல்ல கோப்பியும் குடிச்சுப்போட்டு வாறபோது இருந்த சந்தோசம். முருகன் நீண்ட காலம் வாழவேணும் திருவிழாவும் நடக்கவேணும். இதைத்தான் சொல்லுறது கலாச்சார விழா எண்டு. கோயில் உருவாக்கப்பட்டதே இதுக்காகத்தானே இது விளங்காத சிலர் அங்க நிண்டுகொண்டு அங்க போகாத இங்க போகாத ஓடாத நடக்காத எண்டு சண்டித்தனம் பண்ணுறத பாக்கதான் கவலையா கிடக்கு. புதினம் தெரியுமே முன்னுக்கு நிண்டு சாமி காவுறதுக்கு சண்ட பிடிச்சாங்களாம் வழமையா முன்னுக்கு மட்டும் நிண்டு காவுறவன விடலாம்தானே ஈ ஈ ஈ ஈ.......