மரண அறிவித்தல்

.
                                  திருமதி செல்லம்மா நாகரத்தினம்.




                                                             மறைவு -  19.01.2011  


சங்கரத்தை வட்டுக் கோட்டையைப் பிறப்பிடமாகவும் கன்பரா – சிட்னியில் வசித்து வந்தவருமான திருமதி செல்லம்மா நாகரத்தினம் அவர்கள் 19.01.2011 புதன் கிழமை இரவு சிட்னியில் காலமானார்
அன்னார் சங்கரத்தை தபால் அதிபரான காலம்சென்ற நாகரத்தினத்தின் அன்பு மனைவியும், காலம் சென்ற கந்தையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்ற விசுவலிங்கம் (மலேசியா), சங்கரத்தையைச் சேர்ந்த காலம் சென்ற பாலசுப்பிரமணியம்,  கந்தசாமி ஆகியோரின் அருமைச் சகோதரியும் இரத்தினவேல் (கன்பரா), சர்வேஸ்வரன் (சிட்னி), பாலேஸ்வரன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.  வான்மதி, சுவீற்ரி, ரேணுகா, நகுலேஸ்வரன் (சிட்னி), சங்கீதா,  சிவகுமார் (மலேசியா) விஜயகுமார் (மலேசியா),  சித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்.



 நிருபா, ஹருணி, கஜன், திவ்யா, ஷாரணி, சுஹாசினி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும். காலம் சென்றவர்களான மகேஸ்வரி,  தேவநாயகி மற்றும் நாகேஸ்வரி (சங்கரத்தை) ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23.01.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிமுதல் 7 மணிவரை கன்பராவில் Belconnon இல் உள்ள William Cole Funeral Parlour  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு
ஈமைக்கிரிகைகள் கன்பராவில் 24.01.2011 திங்கட்கிழமை மதியம் 12 மணிமுதல் 4 மணிவரை 18 ,Feathertop St, Palmerston, Canberra வில் நடைபெற்று,  பின்னர் தகனக்கிரிகைகள் Mitchel இல் உள்ள Norwood Park Cremetorium மயானத்தில் 4.30 மணிக்கு நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
தகவல் ரட்ணவேல் 0422 057 175
                சர்வேஸ்வரன் 0405 132 581
                பாலேஸ்வரன் 0407 216 090

No comments: