உறவியல் -2 - மஷூக் ரஹ்மான்

.
                                                                                                  மஷூக் ரஹ்மான் 

என்ன முதல் ஈக்வேஷன் பேலன்ஸ் ஆயிடுச்சா?


…ம்! சந்தோஷம்.

அனுபவம்னா என்ன?
நம் கண்ணில் படாத காலம் தன் சுவடாக நம் மனதில் பதிப்பது! – டெஃபனிஷன் ஓ.கே?

அனுபவத்தைப் பெறுவது எப்படி? பெரும் வயது வாழ்ந்துவிட்டவர்களிடம் இந்த அனுபவச் சுவடு அதிகமிருக்கும். மூலதனத்தை வீட்டுல வெச்சிட்டு வெளியில வியாபாரம் செய்ய முடியுமா?

தனி நபராக நாம் எடுக்கும் முடிவுகள் நம் மனதிற்கு சரியா தவறா என்று பார்ப்பதைப் போல அந்த முடிவு நம் குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்று பார்ப்பதும் மிக அவசியம். ஒரு விஷயத்தை ஒரே கண்ணோட்டத்தில் நாம் யோசிக்கும் வேளையில் அதைப் பகிர்வதன் மூலம் பன்முகப் பரிமாணங் கொண்ட தீர்வுகளைக் காண முடியும். அப்படிப் பகிர்வதற்கு நம் குடும்பத்தினரே சரியான தேர்வு

குறிப்பாக டீனேஜ் வயதில் உணர்ச்சி வயப்படுவது அதிகம் இருக்கும.; அதனால் அப்போ எடுக்கக்கூடிய முடிவுகளில் குடும்பத்தாரின் ஆலோசனை மிகவும் முக்கியம். நம் பெற்றோர், சகோதர சகோதரிகளைவிட நல்ல நண்பர்கள் யாராக இருக்க முடியும்?

தம் மகனோ, மகளோ இந்தப் பருவத்தை அடைந்திருக்கும் வேளையில் பெற்றோரின் பொறுப்பு பன்மடங்காகிறது. அவர்களுக்கு நல்ல நண்பர்களாயிருப்பதன் மூலம் அவர்களை சீராக வழி நடத்த முடியும் என்று இன்று பலரும் நம்பிப் பின்பற்றுகின்றனர். எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படையாக விவாதிக்க நினைக்கும் பெற்றவர்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை தான். இருந்தாலும் டீன் பருவத்தில் தன்மான உணர்ச்சியும் ஈகோவும் பின்னிப் பிணைந்து நிற்கும். அதைச் சீண்டிவிடாமல் விவாதிப்பது நல்லது. உங்கள் வாக்குத் திறமையால் அந்த இரண்டு குணங்களுமே தப்பு என்று புரியவைக்க முடிந்தால்இ இன்னும் சிறப்பு. மேற் சொன்ன ஒழுங்குமுறை பிள்ளைகளுக்கும் பொருந்தும். பெற்றோரின் மனம் புண்படாதபடிக்கு நம் கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது. கூடுமான வரை ஒருவர் மற்றவரின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்வதும் அவசியம். பதிலில்லா கேள்விகள்தான் கருத்து வேறுபாட்டையும்இ தவறாய் புரிந்து கொள்வதையும் உண்டாக்கும்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு இயக்கப் பாதையில் ஒரு லட்சியத்துடனே இயங்கி வருகின்றது. அதில் ஒரு அங்கமாக இருக்கும் நாம் அதன் இயக்கத்திற்கு பலம் சேர்ப்பவர்களாகவும் பிறர் தேவைகளை அறிந்து செயல் படுபவர்களாகவும் இருப்பது
மிக மிக அவசியம் இல்லையா!

உறவியல் ஈக்வேஷன் : கருத்தைச் சொல்வதில் கனிவிருந்தால்
மனத்தை வெல்வது எளிதுNo comments: