ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் தேசிய இனப்பிரச்சினை பல தசாப்தகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் பல காரணம் தமிழ்க் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் கருத்து முரண் பாடுகளும் என்ற யதார்த்தத்தை ஒருபோதும் மறந்துபோகக்கூடாது.


இன்றும் கூட தமிழ்க்கட்சிகள் ஒன்றையொன்று குறைகூறுவதிலும் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் காலத்தை கடத்துகின்றனவே தவிர உருப்படியாக எதனையும் செய்வதாகத் தெரியவில்லை என்பதே தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக இருந்துவருகின்றது.



தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தமுடியாது என்பதிலும் எந்தவொரு தீர்வுமுயற்சிகளிலும் ஒருமுகமான கருத்தையோ திட்டத்தினையோ அவர்கள் முன்வைக்கப்போவதில்லை என்பதிலும் தென்பகுதி அரசியல் கட்சிகள் ஒருவித நம்பிக்கையை கொண்டிருப்பதை காணமுடிகின்றது. தமிழ்க்கட்சிகளின் இவ்வாறான ஏட்டிக்குப்போட்டியான போக்குகளும் அவர்களின் எண்ணக் கருவுக்கு உரட்டுவதாகவே அமைந்துள்ளன. அதுமாத்திரமன்றி, தமிழ்க்கட்சிகளின் இவ்வாறõன போக்குகள் காரணமாக தமிழ்ப் பிரதிநிதித்துவம் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருவதையும் கூடவே அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை நாட்டில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுக்கள் 20 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை தாக்கல்செய்யப்படவுள்ளன. இந்நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் தமிழ்க் கட்சிகளிடையே கூட்டணி அமைப்பது குறித்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் இருந்துவருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல். எப். (சுரேஷ் அணி), ரெலோ ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து விலகியிருந்தது. அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட் டமைப்பில் தற்போது மூன்று கட்சிகளே அங்கம் வகிப்பதாக கொள்ளலாம்.

இவர்களுடன் இணைந்து ஒற்றுமையõக ஓரணியில் இருந்து போட்டியிடுவதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகித்துவரும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி), தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு மற்றும் சிறி ரெலோ ஆகிய ஐந்து கட்சிகள் முன்வந்துள்ளன.

இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டி யிடுவது தொடர்பில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்சியை மற்றுமொரு கட்சி ஏற்றுக்கொள்வதில் உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும், கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்ப நாபா அணி), தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுக்களை அடுத்து கொள்கையளவில் இணக்கம் கணப்பட்டுள்ளதாகவும் தெவிக்கப்படு கின்றது.

அத்துடன், இக்கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலில் வீட்டுச்சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவதென கொள்கையளவில் இணங்கியதாகவும் கூறப்படுகின்றது.

இருந்தபோதிலும் கடந்த காலத்தில் இந்தக் கட்சிகள் கடைப்பிடித்த கொள்கைகள், போக்குகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இதர உறுப்பினர்கள் மத்தியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுவதாகவும் தெவிக்கப்படுகின்றது. குறிப்பாக கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை மீள இணைத்துக்கொள்வது மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அபிலாஷைகளுக்கு முற்றிலும் மாறான போக்கை கடந்த காலங்களில் கடைப்பிடித்தமை தொடர்பில் இவ்வாறான முரண்பாடுகள் எழ காரணம் எனவும் கூறப்படுகின்றது.

எவ்வாறு இருந்தபோதிலும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இணைந்து போட்டியிடவுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி மாவட்டம் உட்பட கூட்டமைப்பு போட்டியிடும் சகல சபைகளிலும் இணைந்து ஓரணியில் போட்டியிடுவதற்கõன இணக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களின் விருப்பத்தின் படி வாக்குகளை சிதறடிக்காத வகையில் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது.

அதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இந்த தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என புளொட் அமைப்பு தெவித்துள்ளது.

இதுகுறித்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான ஜி.. லிங்கநாதன் கருத்து வெளியிடுகையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாங்கள் இணைந்து போட்டியிடுவதாகவும் வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பிலும் இரு கட்சிகளின் தெரிவிலும் ஒருமித்த கருத்தே நிலவுவதால் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு இல்லாது போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு புளொட் அமைப்பு மேற்கொண்ட முடிவு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த காலத்தில் இடம் பெற்ற கசப்பõன விடயங்களை மீண்டும் சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துவதை தவிர்த்து மறப்போம்; மன்னிப்போம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ்மக்களுக்கு பலம் வாய்ந்ததும் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடியதுமான ஓர் அரசியல் சக்தி உருவாகக் கூடியதாக இருக்கும்.

அதனை உணர்ந்து, “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை மனதிற்கொண்டு எதிர்காலத்திலேனும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். இன்றேல், தமிழ் மக்களினதோ தமிழ் அரசியல் கட்சிகளினதோ தலைவிதியை எவராலும் நிர்ணயிக்க முடியாத நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும் என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.


நன்றி வீரகேசரி

No comments: