உலகச்செய்திகள்

.
எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ளவர்களில் முதன்முறையாக ஒரு தாயார் 3 குழந்தைகளுடன் விடுவிப்பு

எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ள 492 இலங்கையர்களில் முதன்முறையாக தமிழ் தாயார் ஒருவரும் அவரது 3 குழந்தைகளும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அப் பெண்மணி யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.மேற்படி கப்பலில் பயணம் செய்தவர்களில் பலர் தங்களை உறுதி செய்யும் வகையில், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு போன்ற ஆதாரங்களைத் தம்முடன் வைத்திருக்கின்றனர்.

எனினும் அவற்றின் நம்பகத்தன்மையை தம்மால் உறுதி செய்யமுடியவில்லையென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரி ரொன் யமாயுச்சி தெரிவிக்கின்றார்.

இக்கப்பல் கடந்த மாதம் 12 ஆம் திகதி கனடாவைச் சென்றடைந்தது.

இக்கப்பல் பயணமானது விடுதலைபுலி உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வரும் மனித கடத்தல் நடவடிக்கையாக இருக்கலாமென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டொவ்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments: