ஆன்மீகம்

.
ஆழ்வார்கள்

வாசகர்கள் எல்லோரையும்  இந்த வாரம் மீண்டும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில வாரங்களாக பாகவதர்களின் அவதார சிறப்பை பார்த்து வருகிறோம்.  அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் தென்னாட்டில் அவதரித்த "12 ஆழ்வார்களை பற்றி காண்போம்.
கிருஷ்ணாவதாரம்  முடிந்து கலி யுகம் தொடங்கும் போது, உலகம் இருளில் மூழ்க தொடங்கி வேதங்களின்  உண்மையான சாரம் மறைய தொடங்கியது. வேத வியாசர் இயற்றிய "ஸ்ரீமத் பாகவதத்தை” புரிந்து கொள்ளவும், வேதங்களின் சாரத்தையும், அந்த பகவானின் பெருமையை , மறுபடியும் பரப்பவும் பாகவதர்கதளான “ பன்னிரு
ஆழ்வார்கள் “ திரு அவதாரம் செய்தனர்.


இவர்களது திரு அவதாரம் ஸ்ரீமத் பாகவதம்  மற்றும் நாரதீய புராணத்திலும் காணிக்க  பட்டு உள்ளது.
கிரிததிஸு ப்ரஜா ராஜன்
களவ்  இச்சாந்தி  சம்பவம்
கலௌ கலௌ பவிஷ்யந்தி
நாராயண-பராயண:
க்வசித் கவ்சின் மஹா-ராஜா
திரவிடேஷூ க புரிஷ:
தமிரபரணி  நதி யாத்ர
கிருத மாலா பயஸ்விநி
காவேரி ச மஹா-புண்ணிய
ப்ரட்டிசி  ச  மஹா-நதி
ஏ பிபந்தி ஜலம் தசம்
மனுஜா மணுஜேசுவர
பிராயோ பக்த பகவதி
வசுதேவ 'மாலஸய      --    பாகவதம் [11.5.38 - 40]
அங்கிர முனிவர் கூறுகிறார் - கலி யுகத்தில் விஷ்ணுவின் தூய பக்தர் பலர் ஆவதரிப்ததால்  சத்திய யுகம் மற்றும் வேறு யுகங்களில் இருந்தவர்கள் கலி  யுகத்தில் ஆவதரிக்க ஆசை படுவார்கள்.  இந்த தூய விஷ்ணு பக்தர்கள் பலர் திராவிட தேசத்தில் அவதரித்து அந்த பகவானின் நாமத்தை தங்கள் பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்வார்கள்.
ஆழ்வார்கள் யார்?
ஆழ்வார் என்றால் "ஆழ்ந்து இருப்பவர்" என்று பொருள். எப்போதும் பகவத் சிந்தனையில் ஆழ்ந்து மற்றவர்களையும் ஆழ்த்துபவர்கள் ஆழ்வார்கள். இந்த ஆழ்வார்கள் ஆவதரித்தத்தின் காரணமே நம் போன்ற ஜீ வாத்மாக்களை  பர மாத்மாவை நோக்கி அழைத்து செல்வதற்கே.  
இவர்கள் பூலோகத்தில் எல்லா வித மனிதர்கள் மத்தியிலும் ஜாதி மத  பாகுபாடு இன்றி, ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அவதரித்து பகவானின் நாமம்களை வாயார இனிமையான தமிழ் பாடல்களாக பாடி கொடுத்து, எல்லோரையும் பக்தில் மூழ்க வைத்தனர்.
இவர்கள் பாடிய 4000 திவ்ய பிரபந்தம் திராவிட(தமிழ்) வேதம் என்று கருதபடுகிறது. இந்த  பாசுரங்கள் பக்தர்களின் மனத்தையும், பகவானிடம் சரணாகதி அடைவதன் முக்கியத்துவதையும் பற்றியும், வேதத்தின் சாரத்தையும் கொஞ்சும் எளிய தமிழில் எல்லோரும் அனுபவிக்கும் வகையில் அமைந்து உள்ளது.
ஆழ்வார்கள் நிரம்ப சக்தி படைத்தவர்கள் ஆனால் மனிதர்கள். இவர்கள் பகவான் மஹா விஷ்ணுவின் வைகுண்ட வாசிக ளான  சங்கம் ,சக்கரம், கதம், கட்கம், வனமாலை போன்ற  நித்திய சூரிகளின் ஆவதரமே.
1. பொய்கை ஆழ்வார் - 4202 பி.சி - இவர் பகவானின் பாஞ்சஜனியத்தின் (சங்கு) அவதாரம்.
2. பூதத்தாழ்வர்        - 4202 பி.சி - இவர் பகவானின் கௌமொதகியின் (கதை) அவதாரம்.
3. பேயாழ்வார்       - 4202 பி.சி - இவர் பகவானின்  நந்தகியின் (வாள்)அவதாரம்.
4. திருமழிசை ஆழ்வார்   - 4202 பி.சி - இவர் பகவானின் சுதர்சன சக்கரத்தின்  அவதாரம்.
5 மதுரகவி ஆழ்வார்   -  4202 பி.சி - இவர் பகவானின் வினதேயா (தெய்வீக பறவை)   அவதாரம்.
6. நம்மாழ்வார்        - 3102  பி.சி - இவர் பகவானின் சேனாபதியான விஷ்வக்சேனர் அவதாரம்.
7. குலசேகர ஆழ்வார் - 3075 பி.சி - இவர் பகவானின் கௌஸ்துப மணி மாலையின் அவதாரம். 
  8. பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) - 3056  பி.சி - இவர் பகவானின் கரு ட  வாஹனத்தின் அவதாரம்.
9 ஆண்டாள்  (கோதா தேவி)    - இவர் பகவானின் துணைவியான பூதேவியின் திரு அவதாரம் ஆவார்.
10. தொண்டர்அடிபொடி ஆழ்வார் (. ) - 2814 பி.சி - இவர் பகவானின் மாலையான வானமாலையின் அவதாரம் ஆவார்.
11. திருப்பா ணாழ்வார் - 2760 பி.சி - இவர் பகவானின் ஸ்ரீ வத்ஸ முத்திரையின் அவதாரம் ஆவார்.
12. திருமங்கை ஆழ்வார் - 2706 பி.சி - இவர் பகவானின் சார்ங்கம் என்னும் வில்லின்  அவதாரம் ஆவார்.
இனி அடுத்த வாரம் முதலாழ்வார்களான பொய்கை, பூதம், பேய் ஆழ்வார்களை பற்றி விளக்கமாக காண்போம். அது வரை நாமும் அவர்கள் காட்டிய வழியில் பகவன் நாமம்களை வாயார பாடி மனதார மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
ஆண்டாள்


1 comment:

Anonymous said...

It is too good, nowadays people does not know the history. This newsletter is a recap, and it is a chance for the youngsters to learn. Aandal, you are a good spiritual person and thanks for sharing the details. Can't wait to read your next newsletter.