அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் நடாத்திய இலக்கியப் பேருரை மிகவும் சிறப்பாய் அரங்கேறியிருந்தது. 11.09.10 அன்று மாலை ஹோம்புஷ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருவியாய்க் கொட்டியது இலக்கிய நயம். கம்பன் கழக வழக்கப்படி, மங்கள விளக்கேற்றல், மங்கள ஆரத்தி, கடவுள் வாழ்த்தோடு ஆரம்பித்த இவ்விழாவில்,
தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த புகழ் பூத்த பேச்சாளர் ‘தமிழருவி’ மணியன் ஐயா அவர்கள் ‘கம்பனில் பண்பாடு’ என்ற உரை பொருளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் சிறப்பாய்ப் பேசியிருந்தார். அருமையான ஒரு சபை அமைந்தது சந்தோஷத்திற்குரிய விடயம். சபை கலையாது- அமைதி காத்து இலக்கிய நயத்தைச் சுவைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மணியன் ஐயாவினுடைய பேச்சினை இரசித்த பலரும் சிட்னியில் இலக்கிய நிகழ்விற்கான வரட்சியைத் தற்காலிகமாகப் போக்கும் முகமாக இந்நிகழ்வு அமைந்திருந்ததாக நிகழ்வின் முடிவில் பேசிக்கொண்டனர். உண்மையிலேயே இந்நிகழ்வு மட்டுமல்ல, சிட்னியில் சென்ற வாரமே ‘தமிழருவி’ வாரமாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது.
பல மேடைகளில் தமிழின் முக்கியத்துவம,; ஈழத்தமிழரின் தாயகத்திற்கான தாகம், திருக்குறளின் பெருமை, மற்றும் பல செவ்வீக்களென ‘தமிழருவி’ மணியன் ஐயா அவர்கள் பல பேச்சுக்களை சென்ற வாரம் வழங்கியிருந்தார். ஈற்றில் கம்பன் வாழ்த்தோடு விழா சுபமானது. தமிழ் முரசின் தொடர்ச்சியான ஆதரவிற்கு கம்பன் கழகத்தினர் என்றும் நன்றியுடையவர் ஆவர்.
“கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்”
2 comments:
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கிறார்களா? அல்லது சைவ சமயத்தில் இராமர் வழிபாட்டைப் புகுத்துகிறார்களா?
கம்பன் கழகத்தினர் இதுவரை எதைத்தான் செய்தார்கள்? இந்தியாவிலிருந்து வந்தவரைப் பேசச் சொல்வது எல்லோராலும் முடியும், ஆனால் எதைத்தான் பயனாகச் செய்துள்ளார்கள்?
Post a Comment