இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் கல்வி நிதியம். அவுஸ்திரேலியாவில் தகவல் அமர்வுக்கூட்டம்

.
 இலங்கையில் கடந்த ஆண்டு வன்னியில் நடந்த போரில் பெற்றவர்களை இழந்த தமிழ் மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்கு உதவும்வகையில் தகவல் அமர்வுக்கூட்டமும் குறிப்பிட்ட மாணவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மாணவர்களுக்கு அன்பர்களின் ஆதரவைக்கோரும் நிகழ்வும், அவுஸ்திரேலியாவில் கடந்த 22 வருடகாலமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியா மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இந்நிகழ்வும் நிதியத்தின் 22 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் நடைபெறும்.

 வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  முன்னாள் போராளிச்சிறார்கள், இறுதியாக நடந்த க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாரானபோது அவர்களின் கல்விசார்ந்த பணிகளுக்காக பெரிதும் உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம், முகாம் அதிகரிகளுடன் தொடர்புகொண்டு  அவர்களை விடுவித்துமுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட மாணவர்கள்; பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகள் தொடங்கப்பட்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்விநலன் சார்ந்த பணிகளுக்கு மனிதாபிமான ஆதரவும் உதவியும் கோரப்படுகிறது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு www.csefund.org இணையத்தை பார்வையிடலாம்


ny.KUfG+gjp (epjpr;nrayhsu;- ,yq;if khztu; fy;tp epjpak;- mT];jpNuypah)

No comments: