கவிதைகள்


நான் நலம் - நன்றி (ஆங்கில கவிதையின் தமிழாக்கம் நா .மகேசன் )

முளங் காலில் முடக்குவாதம்
முடக்கவே இல்லை என்னை
விளங் காத மூச்சிழுப்பு
விடவில்லை நான் பேசப்பேச
நாடிதளர நல்லிரத்தம் நீராக
நானிருக்கும் நிலை சிறப்பே
தேடிக் கிடைக்காத சுகமெனக்கு
தெரியாதோ எனக்கொன்றும் இல்லையென்று.



படுத்தால் உறக்கம் பலஇரவில்லை
பகலென்று எழுந்தவுடன் பக்குவமாயிருக்கு
தொடுத்து ஞாபகம் தூர்ந்துபோகிறது
தொட்டதுக்கும் தலைசுற்றித் தொலைக்கிறது
பாதத்தில் பக்குவம் செய்யாது
பாதையில் நடக்க முடியாது
தோதப்பா எந்தனது சுகமெனக்கு
தெரியாதோ எனக்கொன்றும் இல்லையென்று.

இக்கதையை நான் விரிக்க
இருக்குதே ஒருநீதி உண்மையிலே
முதுமை நிலைகாணும் எங்களை
முகத்துதிக்கு நலம்கேட்கும் மக்களுக்கு
அதுக்குப் பல்லிளித்துப் பகட்டுநகைசெய்து
அறைவேன் “நான்நலம் நன்றி”
அவரேன் அறிய வேண்டும்
அடியேன் அவல நிலை.

இளமை  எப்படிக் கழிந்ததென்றால்
எழுகிறேன் செல்கிறேன் என்பதுபின்
எழுந்தேன் சென்றேன் என்றது
இறந்தகாலம் ஆவது போலத்தான்
ஆனாலும் நானெழுந்த இடங்களை
அஹா நினைக்க அரும்பும்நகைதான்
அதுசொல்ல அஞ்சவில்லை நானும்
அதுவும் ஓரொரு காலந்தான்.

முதுமை பொன்மயம் என்றுபலர்
முன்செல்லக் கேட்டேன் நான்
ஆனாலும் படுக்கையிலே படுத்துநான்
அயருமுன் சிந்தனை ஓடையிலே
காதுலாச்சியிலே கண்கழற்றி மேசையிலே
கட்டுப் பல்லுந்தான் கோப்யையிலே
ஏதுண்டு கழற்றிநான் எடுத்துவைப்பதற்று
என்துயிலும் எழுந்து வருமுன்னே.

காலைஎழுந்து கவனம் சரிசெய்தேன்
கையிலெடுத்தேன் காலைப் பத்திரிகை
பார்க்கின்றேன் காலமானார் பகுதி;
பார்க்க முடியவில்லை என்பெயரை
சாகவில்லை நான் இன்னும்
சட்டென் றெழுந்தேன் சாப்பிட்டேன்
மீண்டும் படுக்கையிலே மெல்லப்படுத்தேன்
மீதியென்ன உண்டு மீழாத்துயில்வரையே.

No comments: