இவ்வாரச் செய்திகள்

.
                                                                        செய்தித் தொகுப்பு - கரு

வீட்டு விலை 20வீதம் ஏற்றம்
நிலம் தோண்டும் இயந்திரத்துடன் புதையிரதவண்டி மோதியால் ஒருவர் பலி
எட்டு ஆண்டுகளில் வட்டி வீத ஏற்றமும் இறக்கமும்
மெல்பேன் நகரில் நடைபெற்ற இரயில் விபத்து

வீட்டு விலை 20வீதம் ஏற்றம்
 
அவுஸ்திரேலியாவில் கடந்த வருடத்தில் மட்டும் வீட்டு விலை 20 வீதத்தால் உயர்ந்துள்ளது.வீட்டு விலை ஒரு வருடத்துக்குள் கீழே குறிப்பிட்டவாறு உயர்ந்துள்ளது.

சிட்னி              21%
மெல்பேண்   28%
பிறிஸ்பன்    12%
அடிலேட்       11%
பேர்த்               15%
ஹோபாட்     14%
டார்வின்         17%
கன்பெரா        21%
சராசரி            20%

முதல் வீடு வாங்குவதற்குரிய அரசாங்கத்தின் சலுகைப் பணம் நிற்பாட்டிய பின்னரும் இந்த வருட ஆரம்பப் பகுதியில்; இருந்து வீட்டு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

2009 டிசம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை சிட்னியில் வீட்டு விலை 5 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதே காலப்பகுதியில் மெல்பேண் நகரில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் சிட்னி மாநகரில் 21 வீதத்தாலும் மெல்மேண் நகரில் 28 வீதத்தாலும் உயர்ந்துள்ளது. எல்லா மாநகரங்களிலும் வீட்டு விலை சராசரியாக 20 வீதத்தால் உயர்ந்துள்ளது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நிலம் தோண்டும்  இயந்திரத்துடன் புதையிரதவண்டி மோதியால் ஒருவர் பலி

60 பிரயாணிகளைக் கொண்டு சென்ற புகையிரத வண்டி நியூ சவுத் வேல்ஸ் மேற்கு மத்திய பகுதியில் Bathurst  என்ற இடத்தில் ஒரு புகையிரத பாதையை சீரமைக்கும் தோண்டியெடுக்கும் இயந்திரத்துடன் மோதியதால் ஒருவர் கொல்லப்படட்டார். சென்ற புதன்கிழமை காலை 11.30 மணியளவில் சிட்னியிலிருந்து Dabo என்ற இடத்திற்கு போகும் போதே இந்த விபத்து; நடைபெற்றது.

இந்த புகையிரதவண்டி தண்டவாளத்தை விட்டு இறங்கவில்லை அத்துடன் முதல் பெட்டிக்கு பெரிய சேதமும் ஏற்படவில்லை.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மெல்பேன் நகரில் நடைபெற்ற இரயில் விபத்து



சென்ற செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் கிரைஹிமேன் புகையிரத நிலயத்திற்கு 500 மீற்றர் தெற்கில் பிரயாணிகளை ஏற்றவந்த புகையிரதம் சிவப்பு வெளிச்சத்துக்கு நிற்பாட்டியிருந்த பொதிகள் ஏற்றி வந்தபுகையிரதத்தை பிற்பக்கமாக வந்து மோதியது. இதனால் பிரயாணிகள் அதிர்ச்சியடைந்து காணப்பட்டார்கள்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எட்டு ஆண்டுகளில் வட்டி வீத ஏற்றமும் இறக்கமும்


கடந்த எட்டு வருடங்களாக வட்டி வீதம் எப்படி ஏறியும் இறங்கியும் இருகின்றது  என்பதை  கீழே காணலாம். சென்ற செவ்வாய்க்கிழமை வட்டி வீதத்தை  0.25 வீதத்தால் றிசேர்வ் பாங் ஏற்றியிருந்தது.

04/05/2010 +0.25% 4.5%

06/04/2010 +0.25% 4.25%
02/03/2010 +0.25% 4.0%
01/12/2009 +0.25% 3.75%
03/11/2009 +0.25% 3.5%
06/10/2009 +0.25% 3.25%
07/04/2009 +0.25% 3.0%
03/02/2009 -1.0% 3.25%
02/12/2008 -1.0% 4.25%
04/11/2008 -0.75% 5.25%
07/10/2008 -1.0% 6.0%
02/09/2008 -0.25% 7.0%
04/03/2008 +0.25% 7.25%
05/02/2008 +0.25% 7.0%
07/11/2007 +0.25% 6.75%
08/08/2007 +0.25% 6.5%
08/11/2006 +0.25% 6.25%
02/08/2006 +0.25% 6.0%
03/05/2006 +0.25% 5.75%
02/03/2005 +0.25% 5.5%
03/12/2003 +0.25% 5.25%
05/11/2003 +0.25% 5.0%
05/06/2002 +0.25% 4.75%
08/05/2002 +0.25% 4.5%
05/12/2001 +0.25% 4.25%

1 comment:

Nanthan said...

இது பயன் மிக்க ஒரு தகவல்.
சர்வதேச நிதி நெருக்கடி ஆரம்பிக்கு முன்னதாக வட்டி வீதம் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு அண்மையாக வட்டிவீதம் எட்டியுள்ளது. எனினும் அதனை மீறிச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. 2001-2003 காலப்பகுதிக்கு மீண்டும் வட்டிவீதம் திரும்புவதற்கு சாத்தியங்கள் மிகக்குறைவு போன்றே தோன்றுகிறது.
நந்தன்