அவுஸ்திரேலியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கான புலமைப்பரிசில்

.

விக்ரோறிய மாநில அரசின் பல்லினக்கலாச்சாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க விக்ரோறிய மாநிலஅரசினால் இந்த ஆண்டின் (2010)ஆரம்பத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கான டிப்ளோமா புலமைப்பரிசில் அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே.




தரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குமுகமாக விக்ரோறிய மாநில அரசினால் தமிழ்ச் சமூகத்திற்கு அவுஸ்திரேலியாவில் முதல் முதலாக வழங்கப்பட்ட டிப்ளோமா புலமைப்பரிசிலுக்கான பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்கான வகுப்புகள் மெல்பேர்ண் RMIT பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களுமாக 15 தமிழர்களையும், மற்றும் இதே பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருக்கும் மற்றைய இனத்தவரையும் வாழ்த்தும் வைபவம், விக்ரோறிய மாநில அரசினால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கடந்த April 28ஆம் தேதி விக்ரோறியப் பாராளுமன்றத்தின் ராணி மண்டபத்தில்(Queens Hall)நடைபெற்றது. பல்லினக்கலாச்சார அமைச்சர் கெளரவ ஜேம்ஸ் மேர்ளினோ, மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்கினார் பல்லினக்கலாச்சாரசபைத் தலைவர் திரு. ஜோர்ஜ் லிகாகிஸ் விக்ரோறியப் பல்லினக்கலாச்சாரச்சபையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு N.R  விக்கிரமசிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குடிவரவுத்திணைக்கள மாநில நிர்வாகத்தினர். RMIT  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

No comments: