அண்மைய செய்திகள்
ட மற்றும் P வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரங்களது வடிவினை மாற்றி அமைக்க போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.
தற்போதைய அனுமதிப் பத்திரங்களில் வயது ஒரு இடத்தில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள படியால் வயது குறைந்தவர்கள் அதனை மாற்றுவதன் மூலம் மதுக் கடைகளுக்கு சென்று மது அருந்தக்கூடியதாக உள்ளது. புதிய வடிவமைப்பில் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களில் அவர்களது படத்தைச் சுற்றி அவர்கள் வயது குறைந்தவர்கள் என்ற குறிப்பு இடப்பட உள்ளது. இப் புதிய அனுமதிப் பத்திரங்கள் எதிர் வரும் ஜுலை மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இம் மாற்றம் வயது குறைந்தவர்களிடையே காணப்படும் மதுப்பழக்கத்தைக் குறைக்க உதவும் என முதல்வர் கிறிஸ்டினா கெனலி கருத்துத் தெரிவித்துள்ளார்.
000000000000000000000000
கோதுமை விளையும் பகுதிகளில் உள்ள தொடரூந்து சேவையில் ஒரு பகுதியை மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் பேரவைத் தலைவர் இப் பாதைகளை மூடும் திட்டத்தினை மறு பரிசீலனை செய்யக் கோரி மூவாயியம் கையொப்பங்கள் அடங்கிய மகஜரை கிராம அபிவிருத்தி அமைச்சர் Brendon Grylls இடம் கையளித்துள்ளார். இம் மகஜரில் இப் பாதைகளை மூடுவது 60 ஆயிரம் பார ஊர்திகள் பயன் படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் எனவும் இதனால் விவசாயிகள் மாத்திரமன்றி பாதைகளை பயன் படுத்தும் ஏனையவர்களும் சிரமங்களை எதிர் கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment