சைவ மன்றம் நடாத்திய சைவ சமய அறிவுத்திறன் தேர்வு 2010

.

சைவ மன்றம் நடாத்திய  சைவ சமய அறிவுத்திறன் தேர்வு 2010.

சென்ற வாரமும் இந்தவாரமும் சிட்னி முருகன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. வயதுக்கேற்ப ஜந்து பிரிவுகளாக போட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. வர்ணம் தீட்டுதல் திருக்குறள் மனனம் திருமுறைப்பாடல் திருமுறை ஒப்புவித்தல் கவிதை மனனம் சைவ சமய அறிவு போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் பல குழந்தைகள் பங்குபற்றியது குறிப்பிடத் தக்கது. சைவ மன்ற கலாச்சார குழுவினர் இந்த போட்டி நிகழ்ச்சியை திட்டமிட்டு மிக நேர்த்தியாக நடாத்தியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு 06.06 2010 பிற்பகல் 4.15 மணிக்கு இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

09.05.2010 அன்று கவிதைப்போட்டி இடம் பெற்றது இதில் பாரதியாரின் பல கவிதைகள் மாணவர்களுக்கு போட்டிக்காக கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களை கீழே காணலாம்.


                               போட்டியாளர்களில் ஒரு பிரிவினரும் பெற்றோர்களும்

                                    போட்டியாளர்களில் இன்னோர் பகுதியினர்
                 
                                                        போட்டி நடத்துனர்களில் இருவர்

1 comment:

Kirukkan said...

சைவ மன்றத்தினரின் இந்த செயல்பாட்டினை பாராட்டிதான் ஆக வேண்டும் .

மத்தியஸ்தினராக வந்திருந்தோர் அவதானித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், அதாவது ஆரம்ப பிரிவில் 40 மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தினர்,கீழ்பிரிவில் 20 மேற்பட்ட மாணவர்கள் ,மேற்பிரிவில் 10 மேற்பட்ட மாணவர்ககும் அதி மேற்பிரிவில் 2 அல்லது 3 மாணவர்கள் தான் பங்கு பற்றியிருந்தனர்.
பல வருடங்களாக இது நடந்து கொண்டுதானிருக்குது

சிட்னியின் சைவமக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் பொழுது இது சரியான குறைந்த எண்ணிக்கை.

ஆரம்பபிரிவில் பங்குபற்றிய மாணவர்களை மேற்பிரிவுவரை கொண்டு வருவதற்கு சைவமன்றத்தினரும்,மத்தியஸ்த்தம் வகிக்கும் மத்தியஸ்தர்களும் நடவடிக்கை எடுத்தார்கள் என்றால் மிகவும் நல்லது