அம்மா

.

அன்னையர் தின வாழ்த்துக்களோடு  அம்மா



அ - உயிர் எழுத்து

ம் - மெய் எழுத்து

மா - உயிர்மெய் எழுத்து

”தாயை வேறெந்த மொழியில் விளக்கினாலும் வராத பொருள், தமிழில் விளக்கினால் வரும். தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கின்றாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய்(உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்து பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் உலவவிடுகின்றாள். இந்த உண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவானது ’அம்மா’!

பூ அரும்பாகி, மலராகி, கனியாய்க் கனிவது போல, பெண்ணுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என மூன்று நிலைகள் உண்டு. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும். மலையில் உள்ள கல்லை யாரும் மதித்து வணங்குவதில்லை. அது சிற்பியின் கை பட்டு சிலையாகும்போது அதற்கு ஒரு மரியாதை பிறக்கிறது. அந்தச்சிலை கோயிலின் கருவறைக்குள் வைக்கப்படும் போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. கன்னிப்பெண் ஒரு கல்லைப் போன்றவள். இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாக செதுக்கப்படுகின்றாள். தாயாகும்போது குடும்பக்கோவிலின் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகின்றாள்.”
- தமிழருவி மணியனின் “தாய்மை” என்ற கட்டுரையில் இருந்து


- அனுப்பியவர் அநாமிகன்

1 comment:

karuppy said...

Hello

I heard the same thing from Suhi Sivam as well.I really want to know about Akka and Anna. Are they giving "uyir" and "mei" to anyone?
If any one can give me the explanation, I will be happy.