ஒத்தூதலை ஏற்பதும் நம் கடனே(னோ)?


-சங்கர சுப்பிரமணியன்




இசையில் திளைப்பவர் இணைந்திருப்பாரே

இணைந்து ஊதினால் இசையது சிறப்பாகும்
நாதசுவரத்தை ஒருவர் முதன்மையாய் ஊதிட
ஒத்து ஊதற்கு ஒருவர் துணையாய் இருப்பார்

ஒத்தூதுவார் தனியாய் ஊதினால் நயமிராது
ஒத்தூதுவார் இல்லையெனிலும் சிறக்காது
ஒத்தூதலின் சிறப்பென்ன என்று கேட்டால்
ஒத்தூதல் கறியில் கறிவேப்பிலை போலாம்

துணையின் மதிப்பு துணையில் விளங்கிடும்
ஒத்தொலி மிகுந்தால் மொத்தமும் பழுதாகும்
பதமாய் ஒலிக்க இசையிலும் துள்ளல் மிகும்
ஒத்தை தனியாய் ஊதிட சிறப்பு சேர்ந்திடா

போர்களத்தில் வீரன் நேரில் பொருதுவான்
வீரமற்றவன் வீரன் பின்நின்றே உதவுவான்
படையின் பொருளில் அவனும் வீரனாவான்
படையினர் அறிவார் அவன் வீரமென்ன என

பாட்டிலும் ஒரு கூட்டம் கூட்டமாய் பாடிடும்
ஆட்டத்திலும் சிலர் துணை நின்று ஆடுவர்
நடிப்பிலும் துணைநடிகரும் இணைவதால்
துடிப்பாய் ஒத்தூதலை ஏற்பதும் நம் கடனே!


No comments: