சினிமாவிலும் , அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த
எம் ஜி ஆர் தனது விசுவாசியான ஆர் . எம் . வீரப்பனுக்கு கடைசியாக நடித்துக் கொடுத்த படம் இதயக்கனி. பல தயாரிப்பாளர்கள் எம் ஜி ஆரின் கால்ஷீட்டுக்கு தவமாய் தவம் கிடக்க குறுகிய காலத்துக்குள் இந்தப் படத்தை வீரப்பனுக்கு நடித்துக் கொடுத்து விட்டார் எம் . ஜி. ஆர்.
எஸ்டேட் உரிமையாளரான மோகன் ஏழைப் பங்காளன். தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனில் தீவிர அக்கறை கொண்டவன். அவனிடம் எதிர்பாராத விதத்தில் அடைக்கலம் புகும் லக்ஷ்மியை திருமணம் செய்து வாழ்வு கொடுக்கிறான். இவர்கள் இல்லறம் தொடங்கும் முன்பே மோகனுக்கு உத்தியோகத்துக்கு திரும்பும் படி அழைப்பு வருகிறது. அப்போதுதான் அவன் மனைவி உட்பட , நமக்கும்தான், அவன் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்று தெரிய வருகிறது.
வேலைக்கு திரும்பும் மோகனிடம் அதிகாரி ஒரு பைலை நீட்டுகிறார்.
அதில் அவன் மனைவி லஷ்மி படமும் கொலைக்கு குற்றவாளி என்று சேர்க்கப்பட்டுள்ளது. கட்டிய மனைவியையே சந்தேகிக்கும் நிலை. ஆனால் மோகன் தன் கடமையை நிறைவேற்ற துணிகிறான். அதில் அவன் எதிர் நோக்கும் சவால்கள்தான் மீதி படம். எம் ஜி ஆரின் சினிமா, அரசியல் இமேஜ் அறிந்து அதனை வலுப்படுத்தும் விதத்தில் படத்தின் திரை கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இரட்டை வேடம் இல்லா விட்டாலும் கூட இரு வேறு கெட் அப்பில் தோன்றி கலக்குகிறார் எம் ஜி ஆர். இரண்டிலும் மேக்கப்பும் பிரமாதம். அதே போல் சண்டைக் காட்சிகளிலும் பின்னி எடுக்கிறார் வாத்தியார். அது மட்டுமன்றி கற்பழிப்பு காட்சியிலும் எம் ஜி ஆர் இதில் நடித்திருக்கிறார்.

படத்தின் ஹீரோயின் தோரஹா புகழ் ராதா சலுஜா . அப்பாவி லஷ்மியாக வந்து அனுதாபத்தை பெறுபவர் பிறகு பார்த்தால் கவர்ச்சியாகவும் வருகிறார். அதிலும் இதழே இதழே தேன் வேண்டும் பாடல் ஐயையோ! படத்தில் ஆர் .எஸ் . மனோகர் வில்லன் என்றால் அவருக்கு மேலாக இன்னொரு வில்லியும் உண்டு. அந்த வேடம் ராஜசுலோச்சனாவுக்கு. அவரும் தன் பங்குக்கு மது அருந்துகிறார் , சிகரெட் புகைக்கிறார் , நாயகனை மண்ணோடு மண்ணாக புதைக்கப் பார்க்கிறார் . நடக்குமா.
இந்தப் படத்தில் எம் ஜி ஆருக்கு போட்டியாக தேங்காய் சீனிவாசனும் மாறுபட்ட கெட் அப்பில் வருகிறார், சபாஷ். வெண்ணிற ஆடை நிர்மலா இரண்டு காட்சிகளில் வந்து டான்ஸ் ஆடி விட்டு போய் விடுகிறார். காமெடிக்கு ஐசரி வேலன் , உசிலை மணி . மர்ம மனிதன் பி எஸ் வீரப்பா . எம் ஜி ஆர் புகழ் பாட எஸ் வி சுப்பையா. தாய்ப் பாசத்துக்கு பண்டரிபாய். எம் ஜி ஆருடன் மோத ஜஸ்டின் . போதாதா !
இவர்களுடன் எஸ். வி . ராமதாஸ். கே. கண்ணன், சண்முகசுந்தரம், ஆலம் , திருச்சி சௌந்ரராஜன் சிவசூரியன், கரிகோல் ராஜு, வெங்கடாசலம், வி.கோபாலகிருஷ்ணன், திருப்பதிசாமி, சண்முகசுந்தரி என்று எம் ஜி ஆரின் அபிமானம் பெற்ற பலரும் இருக்கிறார்கள்.
படத்துக்கான உரையாடல்களை எஸ். ஜெகதீசன் எழுதினார்.
வசனங்களில் ஆங்காங்கே அரசியல் வாடையடித்தாலும் ரசிக்கும் படி அவரது வசனங்கள் அமைந்தன. சும்மா பேச ஆரம்பிச்சு நான் அம்மா ஆயிட்டா என்று ராதா சலுஜா கொஞ்சும் குரலில் சொல்லும் போது தியேட்டரே அதிர்ந்தது ! படத்தின் ஒளிப்பதிவு , குறிப்பாக வெளிப்புறப் படப்பிடிப்பு கண்களை கொள்ளை கொள்கின்றன. எம் .பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எக்சலன்ட் .

எம் .எஸ் .விசுவநாதன் இசை சத்யா மூவிஸ் படங்களை பொறுத்த வரை ஸ்பெஷல். இந்தப் படத்திலும் அது தொடர்ந்தது. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ, ஒன்று அறியாத பெண்ணோ. நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற பாடல்கள் அன்றும் இன்றும் பேமஸ் !
1964ம் ஆண்டு சத்யா மூவிஸ் தயாரித்த படமான தெய்வத் தாய்
படத்தின் மூலம் எம் ஜி ஆரின் அம்மாவானவர் பண்டரிபாய், இந்த சத்யா மூவிஸ் படத்துடன் அது முடிவுக்கு வந்தது. அதே போல் சத்யா மூவிஸின் எல்லா படங்களிலும் இடம் பெறும் அசோகன் இப் படத்தில் நடிக்கவில்லை.
படத்தின் மூலம் எம் ஜி ஆரின் அம்மாவானவர் பண்டரிபாய், இந்த சத்யா மூவிஸ் படத்துடன் அது முடிவுக்கு வந்தது. அதே போல் சத்யா மூவிஸின் எல்லா படங்களிலும் இடம் பெறும் அசோகன் இப் படத்தில் நடிக்கவில்லை.
எட்டாண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எம் ஜி ஆர் படத்தில் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் வீரப்பாவுக்கு இப் படத்தில் கிடைத்தது.

No comments:
Post a Comment