மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி - டிரம்ப் கடும் விமர்சனம்
'காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்" முன்னாள் பாதுகாப்பு ஊழியர் பிபிசிக்கு தகவல்
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு
இஸ்ரேல் 60 நாள் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது- டிரம்ப்
அமெரிக்கா தாக்கிய போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் கட்டுமான பணிகள் - செய்மதிபடங்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவிப்பு
மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி - டிரம்ப் கடும் விமர்சனம்
07 Jul, 2025 | 02:41 PM
அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலன்மஸ்க்கின் புதிய அரசியல் கட்சியை அபத்தமானது என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மஸ்க் தவறான பாதைக்கு திரும்பிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக கட்சிக்கும் குடியரசுகட்சிக்கும் சவாலாக விளங்கும் என எலன்மஸ்க் கருதும் அவரது புதிய கட்சியை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூன்றாவது கட்சியொன்றை ஆரம்பிப்பது அபத்தமானது என நான் கருதுகின்றேன்,அமெரிக்கா எப்போதும் இரண்டு கட்சி நாடாகவே இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மூன்றாவது கட்சியை ஆரம்பிப்பது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் என கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மஸ்க் தவறான பாதையில் செல்வது குறித்து நான் கவலையடைந்துள்ளேன் குறிப்பாக கடந்த ஐந்து வாரங்களாக அவர் முற்றாக தவறான பாதையில் செல்வது குறித்து கவலையடைந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
'காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்" முன்னாள் பாதுகாப்பு ஊழியர் பிபிசிக்கு தகவல்
Published By: Rajeeban
04 Jul, 2025 | 01:46 PM
காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை தான் பார்த்ததாக முன்னாள் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்கிய குழு ஒன்று அந்த இடத்தை விட்டு மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால் ஒரு காவலர் இயந்திர துப்பாக்கியால் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர் ஒருவர் நிலத்தில் விழுந்தார் அசையாமல் தரையில் விழுந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ஒப்பந்ததாரர் 'அடடா நீங்கள் ஒன்றைப் பெற்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறினார். பின்னர் அவர்கள் அதைப் பற்றி சிரித்தனர்என அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு தகவல்வழங்கிய நபர் காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் நான்கு இடங்களில் பணியாற்றியவர் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது கட்டுப்பாடு எதுவும் இல்லை என தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்களிற்கு அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவிலலை என பிபிசிக்கு தெரிவித்துள்ள அந்த நபர் அச்சுறுத்தலான நிலைமை காணப்பட்டால் முதலில் சுடுங்கள் பின்னர் கேள்வி கேளுங்கள் என குழுத்தலைவர் ஒருவர் தனது குழுவிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.நாங்கள் காசாவில் பணிபுரிகின்றோம் இங்கு விதிமுறைகள் இல்லை நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது போன் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் அந்த இடத்திலிருந்து விலகி சென்றாலோஆபத்தான நோக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலே நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோம் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தோம் நாங்கள் தவறிழைத்துள்ளோம் அலட்சியமாக இருந்துள்ளோம் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தளத்திலும் அந்தப் பகுதியில் நடக்கும் நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் கண்காணித்து வருவதாகவும் அங்கு யாரும் காயமடையவில்லை அல்லது சுடப்படவில்லை என்றுஎன மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் காசா மனிதாபிமான பவுண்டேசன் தெரிவிப்பது "முற்றிலும் நிர்வாணப் பொய்".என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
குழுத் தலைவர்கள் காசா மக்களை ஜொம்பிகூட்டங்கள் "" என்று குறிப்பிட்டனர் இந்த மக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை மறைமுகமாகக் கூறினர்" என்று கூறினார். என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனியர்கள் பலமுறை கடுமையாக காயமடைந்ததாகத் தோன்றிய பல சந்தர்ப்பங்களை தான் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் பெப்பர் ஸ்பிரே தாக்குதலிற்குள்ளானார்.ஸ்டன் கையெறி குண்டின் உலோகப் பகுதியால் பெண் ஒருவர் தாக்கப்பட்டார்.அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த உலோகத் துண்டு அவரது தலையில் நேரடியாகத் தாக்கியது அவர் அசையாமல் தரையில் விழுந்தார். "அவள் இறந்துவிட்டாளா என்று எனக்குத் தெரியவில்லை. அவள் மயக்கமடைந்து முற்றிலும் முற்றிலும் எழ முடியாத நிலையில் காணப்பட்டாள் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு
03 Jul, 2025 | 11:39 AM
பங்களாதேஷ்ல் பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய தையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இதையடுத்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஹசீனா ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐசிடி-யின் தலைவர் நீதிபதி முகமது குலாம் முர்துசா மஜும்தார் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கியது. வங்கதேசத்திலிருந்து தப்பிய பிறகு ஹசீனாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இஸ்ரேல் 60 நாள் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது- டிரம்ப்
02 Jul, 2025 | 10:21 AM
இஸ்ரேல் 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உத்தேச யுத்த நிறுத்த காலத்தில் நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிகவும் கடுமையாக பாடுபட்ட எகிப்தும் கத்தாரும் இந்த யுத்த நிறுத்த யோசனையை ஹமாசிடம் கையளிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கின்றேன் இல்லாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முற்றிலும் தயாராகவுள்ளது என ஐக்கியநாடுகளிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இந்த யுத்தநிறுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
இஸ்ரேலிய பிரதமர் காசாவில் மோதல்களை முடிவிற்கு கொண்டுவர முயல்கின்றார் என தெரிவித்துள்ள டிரம்ப் இது தொடர்பில் அடுத்த வாரம் உடன்பாடு ஏற்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
அமெரிக்கா தாக்கிய போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் கட்டுமான பணிகள் - செய்மதிபடங்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவிப்பு
30 Jun, 2025 | 03:48 PM
அமெரிக்காவின் தாக்குதலிற்கு இலக்காகிய ஈரானின் போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுவதை செய்மதிகள் காண்பித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மக்சார் தொழில்நுட்பத்தின் செய்மதி படங்கள் கட்டுமானப்பணிகள் தீவிரமாக இடம்பெறுவதை காண்பித்துள்ளன என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலிற்கு உள்ளான போர்டோ அணுஉலையின் அருகில் அகழ்வு இயந்திரமும் கிரேன்களும் இருப்பதை செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.புல்டோசர் லொறி போன்றவையும் காணப்படுகின்றன.
இந்த செய்மதி படங்களை ஆய்வு செய்துள்ள அணுவாயுத நிபுணர் டேவிட் அல்பிரைட்டின் குண்டுவீச்சினால் ஏற்பட்ட பள்ளங்களை நிரப்புதல்,பொறியியல் சேதமதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் ,கதிரியக்க மாதிரிகளை ஆய்வு செய்தல் ஆகியவை இடம்பெறலாம் என தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றாக சேதப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள ஐநாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தின் மூலம் ரபேல் க்ரோஸி ஈரானின் அணுசக்தி திட்டம் பல தசாப்தகால பின்னடைவை சந்தித்துள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்திற்கு எதிரான கருத்தினை வெளியிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment