பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - யசோதா - விழா வர்ணனை தொடருகிறது ------

 பாரதி இளமுருகனார்  அவர்கள் இயற்றிய - 80 சிறுவர் பாடல்கள்


அடங்கிய இரு தொகுப்புகளைக் கொண்ட -செந்தமிழ்ப் பூக்கள் நூல்களை வெளியிட்டு வைத்த செஞ்சொற் செல்வர் பிரம்மசிறீ வீரமணி ஐயர் அவர்களைப்பற்றிப் பேச முன்னர் நவநீதகிருஷ்ண பாரதியார் அவர்களைப் பற்றியும் சில செய்திகளைப் பகிர்ந்தார்.

. இறைவணக்கத்துடன் தனதுரையை இப்படி  ஆரம்பித்தார்"சான்றோருக்;கு விழா எடுக்கின்ற பெருமைக்குரிய வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் ஐயா அவர்களே! சபையில் இருக்கின்ற சான்றோர் பெருமக்களே! எல்லோருக்கும் எனது பணிவன்பான வணக்கம். ஆண்டுதோறும் சான்றோர் பெருமக்களுக்கு விழா எடுத்துத் தமிழுக்குத் தொண்டு செய்துவருபவர்களைத் தமிழர்கள் மறக்கக்கூடாதென்று பெருமைப்படுத்திக் கொண்டிருப்பவர் பாரதி ஐயா அவர்கள்! நாவலர் பெருமான் சி. வை தாமோதரம்பிள்ளை போன்ற பல பெரியவர்களை ஆண்டுதோறும் நினைவு கொண்டவர்கள். இந்த ஆண்டு நவநீதகிருஷ்ண பாரதியாரை  நினைவுகொண்டார்கள். உண்மையிலே ஈழநாடு வரப்பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் நவநீதகிருஷ்ண பாரதியார்.. அவரைப்பற்றிக் கலையரசி சின்னையா அம்மையார் அவர்கள் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்கள். நான் இராமநாதன் கல்லுரியிலே கற்ற ஒரு பழைய மாணவன். ஆரம்பக் கல்வியை இராமநாதன் கல்லூரியிலே   கற்றவன். பரமேசுவராக் கல்லுரியினுடைய நூற்றாண்டு விழாத்தொடர்பாக - நீண்ட நாள்களாக அதற்கு ஒரு மலர் வெளியிட வேண்டுமென்று பல பெரியவர்கள் விரும்பினார்கள்.

இளஞ்சேய் அவர்கள் கலையரசி அவர்களது ; தம்பி. இலண்டனில் இருக்கின்றார். அவர் என்னோடு தொடர்பு கொண்டு மலரை வெளியிட்டோம். அப்பொழுது இந்த நவநீதகிருஷ்ண பாரதியாரைப்பற்றி இராமநாதன் கல்லூரி  - பரமேசுவராக் கல்லூரிகளில் இருந்த சான்றோர்கள்  எல்லாம் தேடி அந்தப் புத்தகம் வெளிவந்தது. சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களை முழுமையாக இன்னும் பலர் விளங்கிக்கொள்ளவில்லை. அவருடைய   அரசியலைப்பற்றித்தான் பலர் சொல்லுவார்கள். இரண்டு பாடசாலகள் கட்டினார்கள் என்று சுருக்கமாக  முடித்துவிடுவார்கள்.

சேர்பொன். இராமநாதன் என்னென்ன நல்லதைக் கண்டாரோ அதை எல்லாம் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார்கள். தஞ்சாவ+ர்த் தமிழ் விழாவுக்குத் தலைமை தாங்குவதற்குச் சேர் பொன்னம்பலம் இராமநாதனை அழைத்தார்கள். அங்கே சில இளைஞர்கள் பேசினார்கள். அந்த இளைஞர்களில் ஒருவர்தான் நவநீதகிருஷ்ண பாரதியார். இவர்களிலே இன்னொருவர்;தான் சுப்பையா நடேசன் என்று பிற்காலத்திலே இலங்கையிலே இராமநாதனின் மருகனாக இருந்தவர். இதேபோல இந்தியாவிலே சிறப்பான அறிஞர்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்தார்கள். சமஸ்கிருதத்திலே மிகப்பெரிய பாண்டித்தியம் உடைய இராமையா ஐயர் கீரிமலையிலே கடைசிக் காலத்திலே வசித்தவர். . இதுபோலப் பலர்  யாழ்ப்பாணத்துக்கு வந்து ஆண்டுக்கணக்காக அருந்தமிழை வளர்த்தார்கள். அவர்களிலே ஒருவர் சுந்தரராஜ ஐயங்கார். மிகப் பெரிய மேதை. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டிக்கு இராமநாதன் கல்லூரியிலே தமிழ்; படிப்பித்தவர்களிலே ஒருவர்தான் சுந்தரராஜ ஐயங்கார். இராமாயணத்தை அவரைப்போலப் படிப்பிப்பதற்கு ஒருவரும் இல்லை என்று அம்மா சொல்லுவார். அே;த போலத்தான் பொன்னம்பலம் இராமநாதனுடைய மருகர்தான்    இராமநாதன் மியூசிக் அகெடமியைத் தொடங்கி மகாராசபுரம்     சந்தானம் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை இவர்களை - நான் கண்ணாலே கண்டேன் - மிகப்பெரிய மிருதங்க வித்துவான்- இப்படிப் பலபேர்களைக் கொண்டுவந்து சேர்த்ததனாலேதான் யாழ்ப்பாணத்திலே இன்றைக்கு இசைப் பல்கலைக் கழகம் உருவானது.

இசைப் பல்கலைக் கழகத்துக்கு   வித்திட்டவர்; இராமநாதருடைய மருகர் நடேசபிள்ளை.  மிகச் சிறிய வயதிலே   தஞ்சைத் தமிழ் விழாவிலே கண்டு உ. வே சாமிநாத ஐயர்  மூலமாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்து சேர்த்த நவநீதகிருஷ்ண பாரதியாரை அம்மா அவர்கள் சிறப்பாகக் பேசினார்கள். அவரைப்பற்றி நீங்களும் கொஞ்சம் பேசவேண்டும் என்று பாரதியார் கேட்டார். 

அவர் இவ்வளவு   பேசிய பிறகு நான் நவநீதகிருஷ்ணபாரதியைப் பற்றிப் பேச முடியாது  என்றாலும் ஒரு செய்தியைச் சொல்கின்றேன். என்னுடைய தந்தை  திருநெல்வேலி  சைவாசாரிய கலாசாலையிலே  48ஆம் ஆண்டு - அந்தக் காலப்;பகுதியிலே  படித்தவர்.  பரமேசுவராவிலே  நடந்த தமிழ் விழாவிலே எல்லோருடைய உரையையும் கேட்டவர்;கள.அந்த விழா நடக்கிறபொழுது பெரிய மின்சார வசதி யாழ்ப்பாணத்திலே இல்லை ஆசிரிய பாடசாலை மாணவர்கள்  இந்த காஸ்  லாம்பைக் கையிலே  வாழைமடல் வைத்துப் பிடித்துக்கொணடு இருந்;தார்கள். விழா நடககிறது. அப்படி ஒரு காலம். அந்த விழாவிலேதான் ரா. பி. சேதுப்பிள்ளை தொடக்கம் பல பெரியவர்கள் பேசுகிறபோது  -- யாழ்ப்பாணத்திலே ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டிருந்த பெரியவர் சுந்தரராஜ ஐயங்கார் - இவர்களெல்லாம் யாழ்ப்பாணத்திலே இருந்து பேசினார்கள் என்று - யாழ்ப்பாணத்துப் பரமேசுவராக்கல்லுரி தமிழ் விழாவைப் பற்றிப் பலர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வயதுபோனவர்கள். இனிச் சொல்ல ஆட்களே இல்லை. அவருடைய காலம் கடந்துவிட்டது. இந்த நவநீதகிருஷ்ண பாரதியாரிடத்திலே படித்தவர்கள்  இரண்டு பேர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஒருவர் மாவிட்டபுரம் பண்டிதர் சச்சிதானந்தம் மற்றவர் அளவெட்டியைச் சேர்ந்த பண்டிதர் நாகலிங்கம்.  இப்ப பண்டிதர் நாகலிங்கத்தினுடைய மகன்தாகன் வடக்கு மாகாண ஆளுநராக இருக்கின்ற வேதநாயகம். பண்டிதர் இராமலிங்கம் வெளியிட்ட இரண்டு முக்கியமான நூல்கள். தொல்காப்பியத்தினுடைய சொல்லதிகாரம் - பொருளதிகாரத்துக்கான விளக்க உரைகள். இரண்டு புத்தக  வெளியீட்டிலேயும் நான் பேசியிருக்கிறேன்.

 

பண்டிதர் சச்சிதானந்தத்தினுடைய  மஞ்சு காவியம் என்று சொல்லப்படுகின்ற நூலை மறு பதிப்புச் செய்வதற்கு இங்கிலாந்திலிருந்து அவருடைய மாணவர் ஒருவரிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்து  மஞ்சு காவியத்தை மீழ்பதிப்புச் செய்யும் பணியிலே  ஈடுபட்டவன் என்ற வகையிலே இந்த இரண்டு பேர்களுடன் அதிகம் பழகியிருக்கிறேன். இந்த இரண்டு பேர்களும் பண்டிதர் நவநீதகிருஷ்ண பாரதியாரைப்பற்றி பெருமையாகச் சொல்லுவார்கள். இன்னும் ஒரு விடயத்தைச் சொல்லி முடிக்கிறேன் அவர்களைப் பற்றி;;;. பரமேசுவராக் கல்லூரியிலே மதுரை பண்டிதர் தேர்வுக்கு விளம்பரம் போட்டிருந்தார்கள். நேர்முகப் பரீட்;சைக்கு நுற்றுக் கணக்கான தமிழ் ஆசிரியர்கள் காத்திருந்தார்கள்

நவநீதகி ருஷ்ண பாரதியார் என்னசெய்தார் என்றால் நேர்முகப் பரீட்சைக்கு வந்தவர்களிடம் ஒரு வெண்கட்டியைக் கொடுத்து நீராய் ஒரு செய்யுள் எழுதும் பார்ப்பம்! - ஒரு வெண்பா எழுதும் பார்ப்;பம்! -  பிறகு நீர் படித்து இரசித்த ஒரு செய்யுளைச் சொல்லி அதற்;கு விளக்கம் சொல்லும் பார்ப்பம்!. எத்தனை பேர் விட்டிட்டு ஓடியிருப்பினம்! அதற்குள் நின்று பிடித்தவர்கள்தான் பெரும் பண்டிதர்கள் ஆனார்கள். நவநீதகிருஷ்ண பாரதியார் நடத்திய நேர்முகப் பரீட்சையைப்பற்றிப் பண்டிதர் நாகலிங்கம் சொன்னார் - ஒவ்வொவருக்கும் நேர்முகப் பரீட்சை- ஒவ்வொருவருக்கும் ஒரு மணத்தியாலம் என்று. அப்ப அவர் வந்த பிறகு இவர் போய்க் கேட்பார் என்ன கேட்டார் என்று!   கந்தபுராணத்திலே ஒரு பாட்டுச் சொல்லும்  என்பார் என்று சொல்ல - இவர் கந்தபுராணத்தை ஆயத்தம் பண்ணிக் கொண்டு போக அவர் பெரிய புராணத்திலே ஒரு பாட்டுச் சொல்லும் என்பார். முதற் போனவர்களைக் கேட்ட கேள்வியிலிருந்து இன்னொரு கேள்வி - இன்னொரு கேள்வி -- அப்படிக் கலக்கித் தமிழ் அறி;ஞர்களைக் கடைந்து எடுத்த ஒரு பெருமகன்தான் நவநீதகிருஷ்ண பாரதியார்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டுபேர் திருவாசகத்துக்கு உரை எழுதினார்கள். ஒன்று   நவநீதகிருஷ்ண பாரதியார்.  இவர் சொல்லச் சொல்லப் பக்கத்திலிருந்து எழுதியவர் பண்டிதர் நாகலிங்கம். இன்னொருவர் அருளம்பலவர் என்பவர். காரைநகரைச் சேர்ந்தவர். திருவாசகத்துக்கு உரை எழுதியவர்.

கலையரசி அம்மா சொன்னா திருவாசகத்துக்கு உரை எழுதினாற் பயம் பயம் என்று! உண்மையாய் 64 வயதிலே நவநீதகிருஷ்ண பாரதியார்  ஐயா போயிற்றார். எனக்குப் பயமாய்இருந்தது. திருவாசகத்தைக் கல்லிலே பொழிந்துவிட்டார் ஆக்களெல்லாம் சொல்லப் போறார்கள் போகப்பேகிறார் என்று!

திருவாசகத்துக்கு உரை என்ன என்று கேட்டவருக்குச்  சிவபெருமானையே காட்;டிவிட்டுப் போனவர் மாணிக்கவாசகர்.

அந்தத் திருவாசகத்துக்கு ஒரு தெளிந்த உரையை -உயிர் போனாலும் பரவாயில்லை என்று -மாவிட்டபுரத்திலே இருந்து எழுதியவர் நவநீதகிருஷ்ண பாரதியார். அவர்க மிகப்பெரிய ஒரு விற்பன்னர். அவரைப்பற்றி நிறையச் செய்திகள் உண்டு. அவருடைய பேச்சாற்றல்! அவருடைய பெருமை!

இந்தியாவிலே இருந்துவந்து யாழ்ப்பாணத்திலே - இராமநாதன் கல்லுரியிலே இவையெல்லாவற்றையும் சுண்டிச் சுண்டிச் சொல்லலாம். இந்தியாவிலே இருந்துவந்த நடேசபிள்ளை  இராமநாதன் கல்லூரி;க்கு ஒரு கல்லூரி கீதம் எழுதினார். அந்தப் பாட்டிலே திருநீற்றுப் பொலிவு விளங்கும் யாழ்ப்பாணம் என்று பாடினார். நிறையப் பாடினார் பரமேசுவராக் கலூரிக்;குப் பாடிய பாட்டுத்தான் இராமநாதன் கல்லுரிக்கும் பாட்டு.

நடேசபிள்ளை பற்றிய செய்திகளைப் படிக்கிறபொழுது ஆச்சரியமாக இருக்கும். நவநீதகிருஷ்ண பாரதியார்  1916 வந்து மருதநாமடத்திலே தங்கியிருந்தவர் பிறகுதான் மாவிட்டபுரம் போனவர். 

20ஆண்டு 21ஆண்டுக் காலப்பகுதியிலேதான்  மயில்வாகனம் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன்  சென்ற்  பற்றிக்ஸ்  கல்லூரிக்கு வந்தவனை யோகர் சுவாமிகள் உனக்கு எல்லாம் தெரியும் நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுவிட்டு  கொழும்புத்துறையிலே அங்கு நிலத்திலே இருந்து கும்பிட்டுக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து    திருவிளங்கம் என்று மானிப்பாய் இந்துக் கல்ல}ரி  முகாமையாளர்  அதிபர் இல்லையென்று அந்தரப்படுகிறார் இந்தப் பையனைக்கொண்டுபோ என்றார்.  சுவாமி மயில்வாகனத்துக்கு 21 வயது. மானிப்பாய இந்துக் கல் லுரிக்குப் பிறின்சிப்பலாகப் போகும்பொழுது மயில்வாகனத்துக்கு 21 வயது. மயில்வாகனம் ஒவ்வொருநாளும் மாலையிலே இராமநாதன் கல்லுரி முன்னுள்ள ஒரு சீமெந்துக் கதிரையிலே இவை எல்லோரும்   கூடுவார்களாம். அதன் விளைவுதான் மயில்வாகனத்தார் இந்தியாவுக்குப் போனது. போவதற்று நடேசபிள்ளைதான் காரணம்.  போனவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழ் அறிஞராக இருந்தது மட்டுமல்ல    துறவு வாழ்வுக்குப்; போய்ப் பின்னாலே  அவர்கள் சுவாமி விபுலானந்தர் என்று கிழக்கு இலங்கைக்கு வருவதற்கு  - சுவாமி விபுலானந்தரென்று    வருவதற்கு அவரோடு சங்கத் தமிழ் ஆராய்ச்சிகள் செய்த அந்தச் சபையில் இருந்த ஒருவர்தான் இந்த நவநீதகிருஷ்ண பாரதியார.;

விபுலானந்தரை உருவாக்கிய யாழ்ப்பாணம் என்ற ஒரு கட்டுரை இருக்குது. அதிலே பங்குபற்றிய  சிறப்பு நவநீத கிருஷ்ண பாரதியாருக்கு - நடேசனுக்கு - அங்கே இருந்த சுந்தரராஜ ஐயங்காருக்கு இவர்களுக்கு எல்லாம் இருந்தது.

  

இவர்கள் ஏன் மாவிட்டபுரத்திலேபோய் குடியேறினார்கள் என்றால்  மாவிட்டபுர   கந்தபுராண விற்பன்னர்கள் அங்கே இருந்து தினமும் மாலையிலே      கந்தபுராண உரைக்கு  விளக்கங்கள் சற்சங்கங்கள் நடத்திய காரணத்தினாலேதான் இவர்கள் மாவிட்ட புரத்துக்குச் போனார்கள். மாவிட்டபுரம் ஒரு கல்விககூடமாக இருந்தது. நவநீத கிருஷ்ணபாரதியார் அந்த விற்பன்னர்களில் ஒருவராய் இருந்து அங்கேயே வசித்து அங்கேயே திருவாசகத்துக்கு உரை எழுதி 64 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தவர். அந்தப் பெருமகனை 70 ஆண்டுகளுக்குப் பின்னாலே  நினைக்கவைத்த பாரதி ஐயாவைப் பணிந்து வணங்குகின்றேன்."

 இவ்வாறு தனது முதற் பகுதி உரையை நிறைவு செய்து இடைவேளைக்குப் பின்னர் பிரம்ம சிறீ வீரமணி  ஐயர்

அவர்களைப் பற்றி ஒரு பேருரையை நிகழ்த்தினார். விழா

வருணனை தொடரும்... 

 

 

 


No comments: