கற்பகதரு நூல் விமர்சனத்தின் இரண்டாவது அங்கமாக அடுத்த பத்து சுவைகளை இங்கே சமைக்கிறேன்…..
சங்கர சுப்பிரமணியன்.
சுவை பதினொன்றில் தென்னையையும் பனையையும ஒப்பிடும்
நோக்கு நன்றாக உள்ளது. தென்னைக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிறார். அதுவே பனைமரத்தைப்பற்றிச் சொல்லும்போது பனங்கொட்டையை மண்ணில் புதைத்து சிறுதளவு நீரை விட்டுவந்தால் போதும் அது காலத்துக்கும் பயனளிக்கும் என்பதை நாலடியார் துணைகொண்டு சொல்லியிருப்பதோடு தென்னையைவிட பனைதான் சிறப்பு வாய்ந்ததென செப்பியிருக்கிறார்.
நோக்கு நன்றாக உள்ளது. தென்னைக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிறார். அதுவே பனைமரத்தைப்பற்றிச் சொல்லும்போது பனங்கொட்டையை மண்ணில் புதைத்து சிறுதளவு நீரை விட்டுவந்தால் போதும் அது காலத்துக்கும் பயனளிக்கும் என்பதை நாலடியார் துணைகொண்டு சொல்லியிருப்பதோடு தென்னையைவிட பனைதான் சிறப்பு வாய்ந்ததென செப்பியிருக்கிறார்.
இக்கைத்தொழில் இந்தியாவிலும் இலங்கையிலும் நிலவி வருவதை கூறுவதோடு இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கிழக்கிலங்கையிலும் பனை மரங்கள் அதிகம் காணப்படுவதையும் கூறியிருப்பதோடு எந்தெந்த இடங்களில் என்னென்ன கைவினைப் பொருட்கள் செய்யப் படுகின்றன என்பதையும் விளக்கமாக தந்துள்ளார்.
பதின்மூன்றாம் சுவையில் யாழ்ப்பணத்தில் வீடுகள் எப்படியிருந்தது என்பதைப் பற்றிக்கூறும் நூலாசிரயர் வீடுகளின் கூரைகள் பனை ஓலையால் வேயப் பட்டிருக்கம் என்கிறார். களிமண்ணாலான தரையும் அரைச் சுவரும் இருக்கும் என்றும் தரையை சாணத்தினால் மெழுகியதையும் குறிப்பிட்டிருக்கறார்.
நம்மாழ்வரின் பல காணொளிகளைப் பார்த்து விவசாயத்தில் நாட்டம் கொண்டார்.
இராமநாதபுரத்திலுள்ள இவரது நண்பரின் நிலத்தில் விவசாயத்தைத் தொடங்கியபோது அங்கே அதிகமான பனைமரக் கூட்டங்களைப் பார்த்ததும் அவருள் புதிய சிந்தனை தோன்றியது. பனை ஓலையைப் பயன்படுத்தி விசிட்டிங் கார்டு, திருமண அழைப்பிதழ், திருமணத்துக்கான மாலைகள் என்று பல பொருட்கள் தயாரித்ததை இச்சுவையின் ஊடாக காணமுடிகிறது.
கங்குமட்டை என்றவுடன் பொதுவாக அடுப்பரிக்க உதவும் என்பதே நம் நினைவுக்கு வரும். ஆனால் அதில் பொருளாதாரம் மிகுந்திருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்படும் தும்புதான் அது.
அந்த தும்பு மட்டையின் எந்தப் பகுதியில் எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்பதுபோன்ற நாம் அறிந்திடாத பல செய்திகளை நமக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார் நூலாசிரியர்.
பனந்தும்புக்கு பெரிய அளவில் தேவை
இருப்பதால் அதை அதிகமாக இந்தியாவிலும் இலங்கையிலும் உற்பத்தி செயவதாக கூறி இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒரிசாவில் உற்பத்தியாவதை குறிப்பிடுகிறார். அதபோல் இலங்கையிலும் முல்லைத்தீவு மாவட்டம், பருத்தித்துறை, புலோலி, சாவகச்சேரி, பேசாலை போன்ற இடங்களில் பனந்தும்பினை வழங்கும் பகுதிகளாக இருப்பினும் பெரிதான முன்னேற்றம் இல்லை என்று கூறும்போது அவரின் கவலையையும் அறியமுடிகிறது.
சுவை பதினேழு பனந்தும்பின் ஏற்றுமதி பற்றி சுட்டிக் காட்டுகிறது. ஒருகாலத்தில் இலங்கை ஏற்றுமதியில் முன்னிலை வகுத்ததையும் அதிலும் குறிப்பாக யாழ்ப்பான மாவட்டமே இருந்ததாக குறிப்பிடுகிறார். 1987ல் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஏற்றமதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பருத்தித்துறை, சாகவச்சேரி போன்ற இடங்களில் ஏற்றுமதிக்கான அமைப்பு உருவாக்கப்பட்டு போரினால் நின்றுபோனதையும் பதிவிடுகிறார்.
இந்தியா பனந்தும்பினை ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் கூறியிருக்கிறார். இந்த தும்பில் பெறும் கழிவுகளைக்கூட வீணடிக்காது அதிலிருந்து கயிறு திரிக்கலாம் என்பது வியப்பளிக்கிறது. அதிலும் குடிக் கயிறு, வால் கயிறு, மற்றும் வடக்கயிறு என்று வகைகளைக் குறிப்பிட்டிருபதன் மூலம் இவரின் தேடலை தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.
மூன்றினைக் கூறுகிறார். இவற்றில் முதலாந்தர நார் அகணிநார் ஆகும். இது மிகவும் வலிமை மிக்கது.
பனைநாரைப் பயன்படுத்தி கட்டில் செய்யப் படுகிறது. இந்த பனைநார் கட்டில்கள் பிரசவித்த பச்சையுடம்பு பெண்களுக்கு படுக்க இதமாக இருக்கும். நோயில் இருக்கும் முதியவர்களுக்கும் இதமாய் இருக்கும். பொதுவாக அனைவரும் ஆனந்தமாய் படுத்துறங்க பொருத்தமான கட்டில் என்கிறார்.
விளக்குகிறது. இந்த கதிரைகள் சாய்வு நாற்காலி, கைப்பிடி நாற்காலி மற்றும் சுழல்நாற்காலிகளாக மக்களின் பயன்பாட்டுக்கு மிகவும் உதவுகின்றன. இங்கு புறணிநார் பற்றிக் கூறப் பட்டிருப்பதோடு
இந்த நார் பலவிதமான கூடைகள் செய்யப் பயன்படுவது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
பனை ஈர்க்கினால் செய்யப்படுவதே திருகணை. இந்த திருகணை மட்பாத்திரங்களை பாதுகாப்பாய் வைக்கவும் பயன்படும் கரகாட்டக்கார்ர்கள் தலையில் பானைகளை வைத்து ஆடவும் பயன்படும். இதுவரை பனையின் பலவிதமான பயன்பாட்டை அறிந்த நமக்கு சுவைக்க சுவையான நுங்கின் சுவையும் இங்குதான் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல இந்த நுங்கைத் தருவது பெண்பனை என்பதும் தெரிகிறது.
(வளரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment