தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்


 ‘தண்ணீர் - நீரலைகளும் நினைவலைகளும்’ நூல்

தமிழ்நாடு 
அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் கீழ், சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் “நீரும் வேரும்” என்ற கட்டுரையை ஈழத்து வாழ்வியலை மையப்படுத்தி எழுதியுள்ளேன்.

“நிலமும், காற்றும், நீரும், மலையும், வனமும், ஆகாயமும், மேகங்களும் இயற்கையும் மனதை ஆக்கிரமித்து மாசு இல்லாமல் எங்களைக் காக்க என்ன செய்யப் போகிறாய் என்று கேட்பது போலவே இருக்கும். நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இதையேனும் செய்ய முடியுமா என்னும் அகப் போராட்டத்தின் அதன் நினைவுப் பாய்ச்சலின் வெளிப்பாடே இந்த நூல். இந்தப் புத்தகம் கொண்டு வர வேண்டும் என்றதும் உலகம் முழுவதிலிருந்தும், ஒவ்வொரு நாடு, இந்திய மாநிலங்கள், தமிழக மாவட்டங்கள் என அனைத்துப் பகுதிகளிலிருந்தும், தங்கள் நேரத்தை ஒதுக்கி படைப்புகளை அளித்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தொகுப்பாசிரியர் மதுமிதா குறிப்பிடுகிறார்.

முள் மரம் கொல்க – நாஞ்சில் நாடன்

நீர், நீர்பாசனம், தமிழர் -  சி.மகேந்திரன்

நீச்சல் கலையும் நீர்கொணர்ந்த நெடுங்கோனும் – மகுடேசுவரன்

தண்ணீரும் நானும் - பொன்னீலன்

நிறம் மாறிய நதிகள் – லதா அருணாச்சலம்

சிங்கப்பூர் நீர் மேலாண்மை – ஆமருவி

நீரம் - எம்.கோபாலகிருஷ்ணன்

வறட்சியும் வளமும் நம் கையில் - ப. திருமலை

நிலவும் நீரும் - மயில்சாமி அண்ணாதுரை

ஒட்டகம் – அ. முத்துலிங்கம்

நீரும் நினைவும் - கோ.லீலா

ஏரி பார்த்தல்  -  பாவண்ணன்

விசும்பின் துளி - இரா. முருகன்

நீரும் நானும் – ராசி அழகப்பன்

குள்ளக்குளிர நீராடு எம்பாவாய்! - நா.கண்ணன்

தண்ணீர் தண்ணீர் – மாதவன் இளங்கோ

நீரும் வேரும் - கானா பிரபா

விசும்பின் துளி – சாந்திநாகராஜ்

தண்ணீர்ப் பிசாசு    -  கலாப்ரியா

நீரின் வேர்கள் -  சித்ரன் ரகுநாத்

நீரின்றி அமையாது உலகு – தண்ணீர் தண்ணீர் - அப்துல் ஜப்பார்

நீரின் மேலான்மை - இராஜேஸ்வரி கோதண்டம் 

நீரும் நானும் – கவிபாலா

பனிக்கட்டி கால்வாய்களில் நடை பழகும் வாத்துகள் - இந்திரன் 

நீர்வண்ணம் – ஜீவானந்தன் ஓவியர் ஜீவா

நீரலைகளுடன் என் நினைவலைகள் -  சுமிதா ரமேஷ்

வெண்தலைப் புணரி… - ஜோ டி குருஸ்

நீரின்றி அமையாது உலகு – இசைக்கவி ரமணன்

நீரின்றி அமையாது உலகு - ராம்குமார்

பன்மையில் ஒருமை – நரசய்யா

தண்ணீர் தட்டுப்பாடு -  பத்மா அரவிந்த்

ஆபத்தில் தத்தளித்த  50 நிமிடங்கள் - - சத்யராஜ்குமார்

தண்ணீர் ? தண்ணீர் ?? – நீதிபதி சந்துரு 1

மீத்தேன் திட்டமென்ற பூதம் – நீதிபதி சந்துரு 2

நீரின்றி அமையுமோ உலகு - புதியமாதவி, மும்பை.

ஒரு துளி உயிர் – சுதாகர் கஸ்தூரி

நீர் மேலாண்மை – சுபஸ்ரீ மோஹன்

நீரின்றி அமையாது பைபிள் - சேவியர்

வளம் சேர்த்து உயிர்களை வாழவைக்கும் நீர் - மயிலாடுதுறை சிவா

விசும்பின் துளி :  நதி  -  நாகரத்தினம் கிருஷ்ணா

தண்ணீர் -  வித்யா சுப்ரமணியம்

நீரின்றி ஏதுமில்லை -  சக்தி சக்திதாசன்

உலகுக்கு வாழ்வளிக்கும் நீரின் ஆன்ம தரிசனம் - தங்கம் தென்னரசு

ஏரிகளை உயிர்த்தெழுப்புவோம் – சரவணன்

கொஞ்சம் தண்ணி…கொஞ்சம் தண்ணி… - ராஜ்ஜா

கெடிலநதி முதல் நயாகராவரை ஒரு ரவுண்ட்அப்- வேதாகோபாலன்

வேப்பங்குளம் நீர், விவசாய மேலாண்மை – திருச்செல்வம் 

நீர் இனிது நீர் அமுது  – மதுமிதா 

தண்ணீரைப் பாதுகாப்போம் - கோவை சதாசிவம்

தண்ணில கண்டம் – நவின் சீதாராமன்

விரிநீர் வியனுலகம் - தேனம்மை லெக்ஷ்மணன்

நான் பருகும் தண்ணீர் யாருடையது? -  ஈரோடு கதிர்

அச்சன்கோவில் பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் குறித்து -

கே. எஸ். ராதாகிருஷ்ணன்

தண்ணீரும் பயன்பாட்டாளர்களும் – லீலா

வீழ்ச்சிகளும் தேக்கங்களும் - எஸ்.சங்கரநாராயணன்

எப்போ மறுபடியும் வெள்ளம் வரும் - சுப்ரபாரதிமணியன்

சதுப்பளகாடுகளும் நீரும் நானும் -  தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி

நிசப்தம் வலைப்பதிவிலிருந்து - வா.மணிகண்டன்

கோதையர் ஆடிய குளங்கள் - கே. பத்மலக்ஷ்மி

விசும்பின் துளி  -  சோ.கு.செந்தில்குமரன்

கம்மாய்க் கந்தூரி – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

சேதுசமுத்திரதிட்டம்மறுபரிசீலனை -ஸ்டெனோஎன்பாலகிருஷ்ணன்

 இந்தத் தொகுப்பில் ஈழத்தில் இருந்து எழும் குரலாக என் பகிர்வையும் வழங்க அழைத்த அன்பின் மதுமிதாவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். சக படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள். 
 கானா பிரபா

No comments: