July 9, 2024
சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையை மையப்படுத்தி வெளிவ ரும் தகவல்கள் வடக்கு மாகாண வைத்தியத்துறையின் மீது மட்டு மல்லரூபவ் ஒட்டுமொத்த வைத்தியத் துறையின் மீதான மக்கள் நம்பிக் கையை கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒரு வைத்தியரின் குற்றச்சாட் டும் அதனைத் தொடர்ந்துஇடம்பெற்றுவரும் உரையாடல்களும் வடக்கின் ஒட்டுமொத்த வைத்தியத்துறையின் மீது விரல் நீட்டுகின் றது. அனைத்து வைத்தியர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்து கின்றது. குறிப்பாக அரசாங்க வைத்தியசாலைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டு தனியார் வைத்தியத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் விடயங்கள் இடம்பெறுவதாக வெளிவரும் தகவல்களில் உண்மையிருக்கின்றதா அல்லது அவைகள் பொய்யான குற்றச்சாட்டுக்களா – இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லையென்றோ எவரும் பதிலளித்துவிட முடி யாது –
ஆனால், வடக்கின் ஆளுநர் உள்ளடங்கலாக, பிராந்திய சுகா தார பணிப்பாளர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அனை வருமே இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர். ஏனெ னில் வைத்தியத் துறையின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே சுகாதாரத் துறையில் ஊழல் இடம்பெற்றதான குற்றச் சாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். அது தொடர்பான விசார ணைகளில் மருந்து கொள்வனவில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் வடக்கின் ஒட்டுமொத்த சுகாதார துறையின் மீதும் வைத்தியர்கள் மீதும் மக்கள் விரல் நீட்டக் கூடியவாறான நிலைமை உருவாகியிருக்கின்றது.
இது ஆரோக்கியமானதல்ல. சமூக ஊடகங்களில் வெளிவருபவை அனைத்தும் உண்மைகள் என்றில்லை – ஆனால் சமூக ஊடகங்கள் அதிகம் பொது மக்களை பாதிக்கக் கூடியதாக இருப்பதால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் வெளிவரும் போது தொடர்புடைய அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை சாதாரணமாக தட்டிக் கழித்துவிட்டும் செல்ல முடியாது – செல்லக் கூடாது. வைத்தியத் துறை ஒரு புறம் உன்னதமான சேவையாக இருந்தா லும் கூட இன்னொருபுறம் அதிக பணம் அள்ளும் துறையாகவும் இருக்கின்றது. நோய்களிலிருந்து விரைவாக குணமடைய வேண் டும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வேண்டும் – இப்படி யான பல காரணங்களால் பலரும் தனியார் வைத்தியசாலைகளை நாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான வசதியுண்டு – ஆனால், பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு அரசாங்க வைத் திசாலைகளை ஒன்றே நோய்கள் தீர்க்கும் ஆலயங்களாகும். ஏழை களுக்கோ அங்குள்ள வைத்தியர்கள் கடவுகள் போன்றவர்கள்.
எனவே அரசாங்கம் ஏழை மக்கள் வைத்திய சாலைகள் மீது நம்பிக் கையிழக்கும் அல்லது கோபம் கொள்ளும் வகையிலான விடயங்கள் இடம்பெறுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநி திகள் அனைவரும் இந்த விடயத்திற்கு பின்னாலுள்ள உண்மைகள் அல்லது பொய்கள் இரண்டையும் ஆராய வேண்டும். பொறுப்பற்று இருத்தல் சரியல்ல. நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment