அஜித்தின் ஆக்ஷன் த்ரில்லர் துணிவு திரைப்படம் OTT தளத்தில் பல சாதனை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் TOP 10 ட்ரெண்டிங்கில் ‘துணிவு’ படம் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘நொன் இங்கிலீஷ்’ (Non - English) படப் பிரிவுகளில் உலக அளவில் TOP 10 வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது ‘துணிவு’. 4-வது இடத்தில் ‘துணிவு’ படத்தின் இந்தி வெர்ஷன் இடம்பிடித்துள்ளது. ஜனவரி 12ஆம் திகதி பொங்கலுக்கு வெளியான துணிவு, அஜித்தின் திரைப்படத் துறையில் அதிக வசூல் செய்த படமாக ரூபா 200 கோடியை எட்டியது.
சமுத்திரக்கனி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ள இந்த ஆக்ஷன் அஜித்தின் அற்புதமான திரை பிரசன்னத்தாலும், எச் வினோத்தின் தரமான திரை இயக்கத்தினாலும் படம் வெற்றியடைந்துள்ளது. துணிவு அஜித்தின் ஆக்ஷன் என்டர்டெய்னரான இப்படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 90 கோடியை வசூலித்தது மற்றும் உலகம் முழுவதும் படத்தின் வசூல் முதல் வாரத்திற்குள் 150 கோடிகளை கடந்தது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment