அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் வதியும் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் அரை நூற்றாண்டு கால இலக்கியப் பணியை பாராட்டி கனடாவிலிருந்து வெளியாகும் தாய்வீடு மாத இதழ் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது.
இம்மாதம் ( டிசம்பர் )
வெளியாகியிருக்கும் தாய்வீடு சிறப்பிதழில்
இதர ஆக்கங்களுடன், தாமரைச்செல்வியின் எழுத்துலகம் குறித்த கட்டுரைகளின் விசேட இணைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தாமரைச்செல்வியின் வாழ்வையும்
பணிகளையும் சித்திரிக்கும் ஆக்கங்களை எழுத்தாளர்கள் சி. கருணாகரன், லெ. முருகபூபதி, யசோதா பத்மநாதன், சார்ள்ஸ
குணநாயகம், ரஞ்ஜனி சுப்பிரமணியம், தமிழக படைப்பாளி இந்திரன், சந்திரா இரவீந்திரன்,
ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.
தாரைச்செல்வியுடனான நேர்காணலை
சேகர் தம்பிராஜா எழுதியுள்ளார்.
ஓவியராகவும் திகழும் தாமரைச்செல்வியின்
சில ஓவியங்களும் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் கடந்த காலங்களில் தாமரைச்செல்வியை பாராட்டி அட்டைப்பட
அதியாக அவரை கௌரவித்த இலக்கிய இதழ்களின் முகப்புகளும்
வெளிவந்துள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் தனது 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் தாமரைச்செல்விக்கு இலக்கிய சாதனையாளர் விருது வழங்கி பாராட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணைப்பு : www.thaiveedu.com
---0---
No comments:
Post a Comment