‘ கோதை ‘ நாச்சியார் திருமொழியின் நடன வடிவம் - Dr Chandrika Subramaniyan

.

செல்வி கார்த்திகா  மனோகரன் ‘ கோதை ‘ எனும் கருப் பொருளில் முழு நீள நடன நிகழ்வை மிக வெற்றிகரமாக நடத்தி சிட்னி நடன ரசிகர்களை மகிழ்வித்தார். விழாவினை ஸறத்பீல்ட் மாநகர சபைத் தலைவி கவுன்சிலர் காரண பென்ஸபீன பங்ககேற்று கௌரவித்தார்.  

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் சிறப்பான பாடல்களைத் தொகுத்து , திருப்பள்ளி எழுச்சி, கோதை கவுத்துவம், மணல் வீடு, விரகம், வாரணம் 1000, கற்பூரம் நாறுமோதில்லானா என்ற வரிசையில் ஏழு பாடல்களுக்கு மிகச்சிறப்பாக நடனமாடி மகிழ்வித்தார்.


கலாபூஷணம் அனுஷா தர்மராஜாவின் மாணவியான கார்த்திகா ரெண்டாயிரத்தி 17 தன்னுடைய அரங்கேற்றத்தை முடித்த பின் அணங்கு ஐவர் என்ற ஒரு நிகழ்வின் மூலம் பல்மைரா திட்டத்துக்காக நிதி சேர்த்து வழங்கியவர்  பல இலக்கிய நிகழ்வுகளிலும் , குறிப்பாக அண்மையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினர் கலை வளர்ப்பதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் பற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் வழங்கியவர்.

மொழி ஆர்வத்திலும், கலை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டும் கார்த்திகா அடுத்த தலைமுறையில் புதிய முன்னெடுப்புகளை படைக்கும் ஒரு கலைஞராவார்.



மிருதங்க வித்வான் சுதந்திர ராஜாவிடம் மிருதங்கம் கற்று வருகின்ற இவர், வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண்ணான திருப்பாவை பாடிய ஆண்டாளின், காதல், விரகம், கண்ணனுக்காக ஏங்கிய தன் மன ஏக்கம், ஆசை, உடல் சார்ந்தும் உயிர் சார்ந்தும் அவளுக்குள் எழுந்த ஆவல் இவற்றையெல்லாம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்திய பெருமை கார்த்திகாவுக்கு உரியதாகும்.

அலட்டிக் கொள்ளாத  பாவம், தாளங்களுக்குத்  தப்பாத பாதங்கள், விழிகளிலே பாவையின் உணர்ச்சிகளை கொண்டு வந்து அரங்கையே கட்டிப்போட்ட திறம், தேர்ந்தெடுத்த பாடல்கள், இசை கூட்டிய கலைஞர்கள், ஜனகன் சுதந்திரராஜ் மிருதங்கம், கிரந்தி கிரண் முடிகொண்டா வயலின், வெங்கடேஷ் ஸ்ரீதரன் புல்லாங்குழல், குரு அனுஷா தர்ம ராஜாவின் நட்டுவாங்கம், கலைஞன் சேரனின் ஆலோசனைகள், அகிலனின் குரல் வளம், இவை தவிர   ஆங்கிலத்திலும் தமிழிலும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து பேசிய துர்கா சிவாஜி மற்றும் மாதுமை சாரங்கன் இவர்கள் அனைவரும் நிகழ்ச்சியை மிக நிறைவாக உருவாக்குவதற்கு அளித்த பங்களிப்பு மேடையில் நிரூபணமாகியது  ஆடை வடிவமைப்பில் செய்த சித்ரா மனோகரன் பாராட்டுக்குரியவர் .

சிட்னியில் இளைய தலைமுறை ஒருவர் முதல் முதலாக வைணவ இலக்கியங்களில் இருந்து நாச்சியார் திருமொழியை எடுத்து அதுவும் பெரும் விவாதத்துக்கு உட்படுத்தப்படக்கூடிய காதல் காமம் விரகம் இவற்றையெல்லாம் பேசக் கூடிய பாடல்களை ஒரு மேடையில் பாரம்பரிய நடனத்துடன் பிணைத்து படைத்தது ஒரு புது முயற்சியாகும். மேலும் பல படைப்புகளை கார்த்திகா மனோகரன் உலகஅளவில் வழங்கி தன்னுடைய இசை நடன கலை தமிழ் ஆர்வத்திற்கு மெருகேற்ற வாழ்த்துகிறோம். 






Dr Chandrika Subramaniyan

Solicitor   Mediator  Academic  Journalist  Speaker  

3 comments:

Anonymous said...

Brilliant show. Congratulations Karthiga. Well done. Wish Karthiga grow in her passion for performing arts and shine by the blessings of God and all around her.

Anonymous said...

Thank you very much for your lovely wishes :)

Anonymous said...

முகபாவம் அருமை. நேரம் போனதே தெரியவில்லை. அணிசெய் இசைக்கலைஞர்கள் மேடயில் இருந்தே இசைத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். அடுத்தமுறை முயற்சிக்கலாம். வாழ்த்துகள்