.
2021-ம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான 69-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு விழா டெல்லியில் நடைபெற்றது.
சிறந்த திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி) திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் குறித்தும் பேசும் விதத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியால் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'.
சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கு ‘புஷ்பா’ திரைப்படத்துக்காக அறிவிக்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது ‘மிமி’ படத்துக்காக கீர்த்தி சனோனுக்கும் ஆலியா பட் டிற்கும் "கங்குபாய் காத்தியவாடி" படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே படத்துக்காக பங்கஜ் திரிபாதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழில் சிறப்பு விருதுக்கான பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாநில மொழிப் பிரிவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுக்கு ‘கடைசி விவசாயி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம்: ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி)
சிறந்த தமிழ் திரைப்படம்: கடைசி விவசாயி
சிறந்த பிரபலமான திரைப்படம்: ஆர்ஆர்ஆர்
சிறந்த இயக்குநர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர் - மாராத்தி)
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம் (National integration: தி காஷ்மீர் ஃபைல்ஸ்
சிறந்த இந்தி திரைப்படம்: சர்தார் உத்தம்
சிறந்த குஜராத்தி திரைப்படம்: செல்லோ ஷோ
சிறந்த கன்னட திரைப்படம்: 777 சார்லி
சிறந்த மராத்தி திரைப்படம்: ஏக் தா காய்சாலா
சிறந்த மலையாள திரைப்படம்: ஹோம்
சிறந்த நடிகர்: அல்லு அர்ஜூன் (புஷ்பா)
சிறந்த நடிகை : ஆலியா பட் (கங்குபாய் காத்தியவாடி), கீர்த்தி சனோன் (மிமி)
சிறந்த உறுதுணை நடிகர் (ஆண்): பங்கஜ் திரிபாதி (மிமி)
சிறந்த துணை நடிகர் (பெண்): பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் ஃபைல்ஸ்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பாவின் ரபாரி (செல்லோ ஷோ)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): காலபைரவா ‘கோமுரம் பீமடு’ (ஆர்ஆர்ஆர்)
சிறந்த பின்னணி பாடகர் (பெண்): ஸ்ரேயா கோஷல் ‘மாயவா சாயவா’ (இரவின் நிழல்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: அவிக் முகோபாத்யாயா (சர்தார் உதம்)
சிறந்த தழுவல் திரைக்கதை எழுத்தாளர்: சன்ஜய் லீலா பன்சாலி, உட்டர்காஷினி (கங்குபாய் காத்தியவாடி)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஷாயி கபீர் (நயாட்டு)
சிறந்த படத்தொகுப்பு: சன்ஜய் லீலா பன்சாலி (கங்குபாய் காத்தியாவாடி)
சிறந்த பின்னணி இசை: எம்எம்கீரவாணி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த ஒப்பனை கலைஞர்: பிரித்தீ சிங் (கங்குபாய் காத்தியாவாடி)
சிறந்த இசையமைப்பாளர்: தேவிஸ்ரீ பிரசாத் (புஷ்பா)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்: ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த நடன இயக்குநர்: ப்ரேம் ரக்ஷித் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த தெலுங்கு படம்: உப்பெனா
சிறந்த சண்டைக் கலைஞர்: கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)
No comments:
Post a Comment