Sunday, June 18, 2023 - 10:48am
- திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு
இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட 800 திரைப்படத்தில் டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகிய இரு அவுஸ்திரேலிய நடுவர்களின் கதாபாத்திரத்தில் இரு பிரிட்டன் நடிகர்கள் இடம்பெற்றிருப்பதாக அந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கும் எம்.எஸ் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
சட்டப் பிரச்சினைகளை தவிர்த்தப்பதற்காக அந்த இரு ஆஸி. நடுவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை என்று இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் அதிகம் பிரபலம் இல்லாதபோதும் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் பில் ஹேஸ்ட் மற்றும் போல் கொஸ்டா ஆகிய நடிகர்களே இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
“நட்சத்திர நடிகர்களுக்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்புகளும் பூர்த்தியாகிவிட்டன. இந்தத் திரைப்படம் தயாராவதற்காக இசை, செளண்ட் அபெக்ட் மற்றும் விசுவல் அபெக்ட் பூர்த்தியாகும் வரை நாம் காத்திருக்கிறோம்.
எவ்வாறாயினும் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் திரைப்படம் வெளியிடப்படும்.
திரைப்படத்தின் இறுதிக் காட்சி இந்தியாவில் படம்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் முரளியில் 800ஆவது விக்கெட் இந்தியாவுக்கு எதிராகவே வீழ்த்தப்பட்டது.
படப்பிடிப்புகள் இலங்கை, சென்னை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டன” என்று ஸ்ரீபதி அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முரளியின் திருமண தொடர்பான் நிகழ்வுகள் சென்னையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. முரளி 2005ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி சென்னையைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தியை திருமணம் செய்தார்.
“மதியின் கதாபாத்திரத்தில் இந்திய நடிகை மஹிமா நம்பியார் நடிப்பதோடு முரளியின் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டால் நடிக்கிறார்.
1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித் தலைவர் அர்ஜுன் ரணதுங்க, இந்தியா முன்னாள் வீரர் கபில் தேவ் மற்றும் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களின் கதாபாத்திரங்களில் ஆசிய நாடுகளைச் சோர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதில் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொக்ஸின் தின டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு பணிக்கு நோ போல் பிடித்தார். அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரிலும் இது நிகழ்ந்தது. அப்போது நடுவர் ரோஸ் எமர்சன் முரளியின் பந்துக்கு நோபோல் பிடித்ததோடு முரளி லெக் பிரேக் பந்துவீசியபோதும் நோபோல் காட்டினார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment