ஈழத்து கூத்து மரபின் கலைக்காவலர் பேராசிரியர் சி.மெளனகுரு அகவை 80 ❤️🥁

 305760767_5374324905948320_4336409769236334860_n.jpg

எதிலும் நிச்சயமற்ற இயற்கை வெளியில் தங்கள் இருப்பிற்கு அர்த்தம் கற்பிக்கின்ற எத்தனையோ வழிமுறைகளில் ஒன்று தான் கூத்து, வாழ்வு, கல்வி, கலை, தொழில் முயற்சிகள் எனலாம்.
அர்த்தமில்லாத வாழ்வில் அர்த்தம் தேடுகிறோமா?
நடந்தே கழியவேணும் பயணம்
வாழ்ந்தே கழிய வேணும் வாழ்க்கை” – பேராசிரியர் சி.மெளனகுரு
எங்கள் பெருமைக்குரிய ஈழத்து கூத்து மரபின் கலைக்காவலர் பேராசிரியர் சி.மெளனகுரு அகவை 80 இல் ஜூன் 9 ஆம் திகதி இன்று காலடி எடுத்து வைக்கிறார்.
ஈழத்துக் கூத்து மரபினைப் பேணிக் காத்து, அதனை அடுத்த சந்ததிக்கும் பரப்பி வரும் அரை நூற்றாண்டுக்கும் மேலான பணியைச் செய்து வருபவர்.
ஒரு பக்கம் கலை, இன்னொரு பக்கம் இலக்கிய ஆய்வு என்று சரிசமமான பங்களிப்போடு இயங்கி வருபவர்.
MounaGuru1.png
பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் குறித்த ஒரு வரலாற்றுப் பார்வையை வழங்க, பேராசிரியர் பாலசுகுமார் அவர்களை வேண்டினேன்,
ஈழத்தின் அரங்கியல் ஆளுமை நாடகம்,நடிப்பு,கவிதை,ஆய்வு,சிறுகதை,நாவல் என பல தளங்களிலும் இயங்குபவர் மண்ணிசைப் பாடகருமாவார்.
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரப் புலத்தின் மேனாள் முதன்மையாளரும் ஆவார்.

அவரின் இந்தப் பகிர்வு எங்கள் பேராசியருக்கான பிறந்த நாள் அணிகலன் ஆகி அமைகின்றது.
பகிர்வைக் கேட்க
Podcast:

262035_202346349812894_5716188_n.jpg

“நாங்களெல்லாம் ஒரு நீண்ட வரலாற்று ஓட்டத்தில், ஒரு கால ஓட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள். அப்படிப்பட்ட நீண்ட வரலாற்று ஓட்டத்தில் எங்களுடைய மக்கள் சேர்த்து வைத்த மாபெரும் செல்வங்களை நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும்.
இனியும் எங்களுடைய பங்களிப்பு என்ன? இனி வரப்போகிகிற ஆட்களுக்கு நாங்கள் என்ன கொடுக்கப் போகிறோம் என்ற ஒரு நீண்ட வரலாற்று ஓட்டத்தோடுதான் நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன் “ – பேராசிரியர் சி.மெளனகுரு.
எங்கள் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களை அகமகிழ்வோடு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லி வாழ்த்துகிறோம். உங்கள் பெரும் கலைப்பணி நீடித்து நிலைக்கட்டும்.
கானா பிரபா
09.06.2023
உசாத்துணை : மெளனகுரு நேர்காணல்கள்

No comments: