மெல்பேர்ண் கம்பன் விழா [ 25, 26 / 02 / 23 ]


மெல்பேர்ண் வாழ் தமிழன்பர்களுக்கு,

வணக்கம்.🙏
பலருடைய அன்பு வேண்டுகோளுக்கு இணங்க,
மீண்டும் மெல்பேர்ணில்,
இனிதே கம்பன் விழா சிறப்புற அரங்கேற இருக்கின்றது.

இரு நாள் மாலை நேர விழவாக,
பெப்ரவரி 25ஆம், 26ஆம் திகதிகளில் (சனி - ஞாயிறு),
இளையோர் சுழலும் சொற்போர், பட்டி மண்டபம்,
தனியுரை மற்றும் வழக்காடு மன்றம் என,
செழுமையான இயல் நிகழ்வுகளோடு நடைபெறவுள்ளது.

வையத் தலைமைகொள் தமிழ்ப் பேரறிஞர் 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்,
சிறந்த தமிழ்ப் பேச்சாளர் வழக்கறிஞர் கே. சுமதி,
'ஞானத்தம்பி' பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் எனப் பெரியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழார்வலர்கள் அனைவரையும் திரளாக வருகை தந்து,
விழாவை மேன்மையுறச் செய்யுமாறு, மாண்போடு வேண்டுகின்றோம்.
நன்றி.

- அவுஸ்திரேலியக் கம்பன் கழக, மெல்பேர்ண் வளாகத்தினர் -

 

No comments: