அவுஸ்திரேலியக் கம்பன் விழாவில் - 'கலை தெரி அரங்கம்' [ சிட்னி: 03 / 03 / 23 ]

 


சிறந்த அவுஸ்திரேலிய பரத நாட்டியக் கலைஞர் வித்துவான் கிறிஸ்தோபர் குருசாமி அவர்கள் இம்முறை சிட்னியில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியக் கம்பன் விழாவில் பங்கேற்கவிருக்கின்றார்.

கிறிஸ்தோபர் குருசாமி அவர்கள், கம்ப இராமாயணம் தழுவிய வன சஞ்சாரம் என்ற தலைப்பிலான பரத நாட்டிய நிகழ்வை அரங்க ஆற்றுகை செய்யவுள்ளார்.
அனைவரையும் வருகைதந்து நிகழ்வைக் கண்டு இன்புறுமாறு அழைக்கின்றனர் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.
குறிப்பாக, பரத நாட்டிய ஆசிரியர்கள், பரத நாட்டியக் கலைஞர்கள் மற்றும் கலை பயிலும் மாணவர்கள் வருகைதந்து நிகழ்வைச் சிறப்பித்தும் பயன்பெற்று
ம் ஏக வேண்டும் எனப் பணிவன்போடு வேண்டுகின்றனர் கழகத்தினர்.

அனுமதி இலவசம்!
நிகழ்வு நாள்: வெள்ளி, மார்ச்சு 3ஆம் திகதி.
நிகழ்காலம்: மாலை 7மணி - 9: 15மணிவரை [6.30மணிமுதல் இருக்கைகளில் அமரலாம்]

'கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்'No comments: