செய்தி : அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த போட்டி முடிவுகள் சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !


அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு  இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.

இந்தத்  தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன.

அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து,  பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூல்களாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்முறை சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் மூன்று நூல்கள் போட்டியில்  பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

நாவல், மொழிபெயர்ப்பு துறைகளில் இம்முறை எந்த நூலும் பரிசுக்குரியதாக தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

போட்டி முடிவுகளும் பரிசுத் தொகையும்

வேப்பமரமும் பவளம் ஆச்சியும்    ( சிறுகதை )

விவேகானந்தனூர் சதீஸ்  எழுதியது   - பரிசு -   ரூபா ஐம்பதினாயிரம்

கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை )

சி. கருணாகரன் எழுதியது.  பரிசு ரூபா ஐம்பதினாயிரம்.


மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை )

அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்   எழுதியது.

பரிசு - ரூபா ஐம்பதினாயிரம். 

பரிசு பெற்றவர்களுக்கான  பரிசுத் தொகையும் சான்றிதழ்களும்,  2023  பெப்ரவரி  மாதத்தில்   குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு  அனுப்பி வைக்கப்படும் .

பரிசுத்தொகை – இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா.                 (50,000/= ரூபா )

குறிப்பிட்ட பரிசுத்தொகைகளை வழங்க முன்வந்துள்ளவர்கள்:

திரு. லெ. முருகபூபதி ( மெல்பன் )

எழுத்தாளர் ( அமரர் )  தெணியான் நினைவுப் பரிசு

திரு.  ரோய்  லெம்பேட்    ( மெல்பன்  )

கலைஞர் அமரர் தொபியாஸ் மக்சிமஸ் லெம்பேட்   நினைவுப் பரிசு.

திருமதி  சகுந்தலா கணநாதன் ( மெல்பன் )

அமரர் திலகவதி சிவகுருநாதன்  நினைவுப்பரிசு .

 

( தகவல்:  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் . )

 

atlas25012016@gmail.com  ---           web: www.atlasonline.org 

 

 




No comments: