இறைவனிடம் கையேந்துங்கள் !


 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா  

 

     


   
  

     இறைவனிடம் கையேந் துங்கள் - அவன்

     இல்லையென்று சொல்லு வதில்லை

     கருணையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன்

     காட்சிதர மறுப்பது மில்லை 

 

      ஆணவத்தை அகற்றிப் பாருங்கள் - அவன்

      அரவணைக்கக் கரத்தை நீட்டுவான்

      நாணயாமாய் நடந்து பாருங்கள் - அவன்

      நாளுமெங்கள் அருகில் வந்திடுவான்

 

     உணர்வுடனே பாடிப் பாருங்கள் - அவன்

     உள்ளமதில் வந்து நின்றிடுவான்

     தெளிவுடனே தினமும் தேடுங்கள்  - அவன்

     சீக்கிரமாய் உதவ வந்திடுவான்

 

     ஏழ்மையுடன் இரங்கிப் பாருங்கள் - அவன்

     எங்களுடன் இணைந்து நின்றிடுவான்

     தோழமையாய் இருந்து பாருங்கள் - அவன்

     துயர்துடைக்க வந்து நின்றுடுவான்

 

     கண்மணியே என்று பாடுங்கள் - அவன்

     கருணைமழை பொழிந்து நின்றிடுவான்

     கண்ணீரால் நனைத்து ப்பாருங்கள் - அவன்

     காலமெலாம் உதவி நின்றிடுவான்

 

     சினமதனை அகற்றிப் பாருங்கள் - அவன்

     தனைமறந்து பக்கம் வந்திடுவான்

     தனிமையிலே இருந்து பாருங்கள் - அவன்

     இனிமையெலாம் தந்து நின்றிடுவான்

 

     காதலுடன் பாடிப் பாருங்கள் - அவன்

     கணப்பொழுதில் வந்து நின்றிடுவான்

     சோதியென நினைத்துப் பாடுங்கள் - அவன்

     சுகமனைத்தும் தந்து நின்றிடுவான்

 

    நெறியுடனே நின்று பாடுங்கள் - அவன்

     நீதிதர மறுப்பது மில்லை

    பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன்

    பூரணமாய் தந்து நின்றிடுவான்

No comments: