‘தி லெஜண்ட்’ பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாளில் ரூ. 2 கோடி வசூலானதாக தகவல்

 Sunday, July 31, 2022 - 10:38am

அருள் சரவணன் நடிப்பில் வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படம் முதல் நாள் 2 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'.

இத்திரைப் படம் கடந்த ஜூலை 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 600 இற்கும் அதிகமான திரைகளிலும், நாடு முழுவதும் 1,200 திரைகளில் வெளியானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், 'தி லெஜண்ட்' திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ. 2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலகம் முழுக்க ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 நன்றி தினகரன் 

No comments: