ஆன்மீகத்துடன் அறிவியலை இணைக்கும் மகாசிவராத்திரி


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் " என்று நம்பிக்கை


ஊட்டினார் ஞானசம்பந்தப் பெருமான்.அவரால் அப்பரே என்று அழைக்கப்பட்டவர்,            " நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா "  என்று அழை த்து  " கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் - நற்றுணையாவது நமச் சிவாயவே " என்று உபதேசம் செய்தார்.அவர்களின் பின்னர் வந்தவர்               " மீளா அடிமை உமக்கே ஆளாய் " என்று இறைவனிடம் இயம்பி நிற்கி ன்றார். " ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி - உலப்பிலா ஆனந்தமாய தேனினைச்

சொரியும் செல்வமாகிய சிவனை " 
, " நமச்சிவாய வாழ்கநாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெ ஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க " என்று பணிந்து நின்று அதன் வழியில் எம்மையும் ஆற்றுப்படு த்துவராக மணிவாசகப் பெருமான் வந்து நிற்கிறார். இவர்கள் யாவருமே இறை நினைப்பினை மனமிருத்தி வாழ்நா ளெல்லாம் வாழ்ந்தவர்கள். இவர் கள் சமயநெறியின் வழியில் கால்பதித்து நின்றவர்கள் எனலாம்.   இவர்களை முன்னிறுத்தியே " நால்வர் வழியில் நடப்பது நன்று " என்றும் ,  " நாலு பேர் சொல்லுவதைக் கேள் " என்றும் மரபாக வந்திருக்குமோ என் பதும் கருத்திருத்த வேண்டியதே.இவர்களின் சிந்தனைசெயற் பாடுவாழ் வியல் முறைகள் அத்தனையுமே கோவிலாகவே இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமா கும். கோவிலை மையமாகக் கொண்ட இவர்களின் செய ற்பாடுகளிற் கிடைத்த அனுபவங்கள் எங்கள் சமயநெறியில் மிகவும் முக்கி யத்துவம் பெறுகின்றன. முழுமுதற் கடவுளாய் எம்பிரான் சிவனையே இவ ர்கள் யாவரும் பணிந்து போற்றி தங்களின் மனத்தைப் பக்தியால் பிணை த்து உருக்கமாய் பல தெய்வத் திருமுறைகளாக ஆக்கி எமக்கெல்லாம் அளித்திருக்கிறார்கள். அவர்களின் அகத்தில் அமர்ந்திட்ட அந்த ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியான சிவனைக் குறித்து பல விரதங் கள் அனுடிக்கப்பட்டு வருவதை யாவரும் அறிவோம்.அப்படி அமையும் அந்த அருட் சோதியான சிவனின் விரதங்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியதாகவும்ஆன்மீக. அறிவியல் கருத்துகள் நிறைந்ததாகவும் அமை கின்ற விரதம்தான் வருடந் தோறும் வருகின்ற " மகா சிவராத்திரி " விரத மாகும்.

  மகிமை வாய்ந்த சிவராத்திரி என்பது  ஐந்துவகையினதாக


இருக்கிறது  என் பது நோக்கத்தக்கத்தாகும். திங்கட்கிழமையோடு இணைந்து வருவது " யோ க சிவராத்திரி. வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் வருகின்ற தேய்பிறைவளர் பிறைகளில் வரும் சதிர்த்தசி திதியில் வருகின்ற இருபத்து நான்கு நாட்க ளையும் " யோக சிவராத்திரி " என்னும் பெயரினால் அழைக்கின்ற னர் . தை மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி பதிமூன்று நாட்கள் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு பதினான்காம் நாள் வரு கின்ற சதிர்த்தசி திதியன்று முறையாக விரதம் இருப்பதுதான் " பட்ச சிவராத்திரி " என்று அழைக்கப்படு கிறது,சிவராத்திரி என்பது பெரும்பாலும் அமாவாசை அல்லது சதிர்த்தசி திதியை அண்டியே வரும். ஆனால் " மாத சிவராத்திரி " மாதத்தின் மற்றைய திதிகளிலும் வருகிறது என்பது நோக்க த்தக்கதாகும். இப்படிச் சிவராத்திரிகள் இடம் பெற்றாலும் மாசி மாதத்து தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வருகின்ற சிவராத்திரியே " மகா சிவரா த்திரி " என்று ஏற்றிப் போற்றி அனுட்டிக்கப்படுகிறது. ஐந்து சிவராத்திரிகள் என்னும் நிலையில் அவற்றுள் ஒன்றான சிவராத்திரிக்கு மட்டும் " மகா " என்று அடைமொழி கொடுத்து அதனை உயர்வாக எண்ணுவது ஏன் என் னும் எண்ணம் எம்முள் எழுகிறதல்லவா அப்படி அந்த நாளில் சிவராத் திரி அமைவதற்கு ஆன்மீகம் முக்கியமா அல்லது அதனுடன் அறிவியல் முக் கியத்துவப்படுத்த ப்படுகிறதா என்ன்னும் சிந்தனைகள் எழுகின்றன அல்லவா !

  எங்களின் சமயம் வாழ்வியல் நெறிகளை முழுவதுமாய் உள்ளடக்கிய சமயமாகும். உணவு சம்பத்தப்படு கிறது. உடை சம்பத்தப்படுகிறது.உடற் சுத்தம் சம்பத்தப்படுகிறது. பரம்பொருளைப் பாடிப்பரவுதற்கு நல்லு டலும்நல்லாரோக்கியமும் அடிப்படையாகும். உடலின் ஆரோக்கியத்துக்கு உணவு என்றுமே இன்றியமை யாததாகும். இவை அனைத்தையும் தாங்கி நிற்பதா கவே எங்கள் சமயம் விரதம் " என்னும் நிலையினை ஏற்படுத்தி இருக் கிறது எனலாம். அது கூடத் திட்டமிடப்பட்டே இருக்கிறது என்பது நோக்க த்தக்கதாகும். விரதம் என்று சொல்லும் வேளை அங்கே கோள்கள் சம்பந்த ப்படுகின்றன. திதிகள் சம்பந்தப்படுகின்றன. கோள்களினால் நாள்கள் அமை கின்றன. நாட்களும்திதிகளும் ஆன்மீக மார்க்கத்தில் தத்துவத்தை அறிவியலைக் குறித்திடும் நுட்பமான  சொற்கள் என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இதன் அடிப்படையில்த்தான் நாம் " மகா சிவராத்திரியை " பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

  சமயத்தின் நுட்பமான கருத்துக்களை யாவரும் விளங்க வேண்டும் என்ப தற்காகவேதான் கதைகள் வந்தன. கதைகளின் இன்னுமொரு நிலைதான் புராணங்கள் என்றுகூட எடுத்துக்கொள்ள்ளலாம். அந்த வகையில் சிவராத்திரி எப்படி ஏற்பட்டது என்பதற்கு பல கதைகள் வழக்கில் வழங்கி வருவது  அனை வரும் அறிந்ததேயாகும். கதைகளை வைத்துக் கொண்டு சமயத்தையோ அல்லது அதன் தத்துவத் தை யோ விமர்சிப்பதோ அல்லது கேலியாகப் பேசுவதோ ஏற்புடையதல்ல. இனிப்புத் தடவி அதனுள் மருந் தினை வைத்துக் கொடுப்பது போலத்தான் புராணக் கதைகள் சமய உண்மைகளை எடுத்து உரைக்கி ன்றன என்பதுதான் உண்மை நிலையாகும்.

  திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால விஷத்தை எம்பெருமான் ஏற்று -தானே உண் டாரென்பதும்பிரம்மாவும் விஷ்ணுவும் ஆணவத்தால் முரண்பட்டு யார் பெரியவர் என்று நின்ற நிலை யில் எம் பெருமான் ஜோதிப் பிளம்பாகத் தோன்றினார் என்றும் ஆவர்கள் அந்த ஜோதியின் அடியையும் முடியையும் தேடியும் காணொணா நிலையில் எம் பெருமான் அவர்களுக்கு உண்மையினை உணர்த் தினார் என்பதும்கண்ணப்பருக்கு எம்பெருமான் காட்சி கொடுத்தரென்றும்பஞ்சபாண்டவர்களில் ஒருவ னான அர்ச்சுனனுக்கு பாசுபாஸ்திரம் கிடைக்கச் செய்தாரென்றும்யமனிடமிருந்து மார்க்கண்டேயரை எம்பெருமான் காத்த தினமென்றும் பல கதைகள் வழக்கில் இருந்து வருகின்றன என்பது நோக்கத்த த்தக்கது. இவைதான் சிவராத்திரி என்றால் இதற்கு அப்பாலும் சிவராத்திரியின் சிறப்பு இருக்கிறது என்ப துதான் மிகவும் முக்கியமாகும். அதுதான் - மகாசிவராத்திரி என்று மாசியில் ஏன் சிறப்பாக்கினார்கள் எங்கள் முன்னோர்கள் என்னும் அறிவியல் அணுகு முறையாகும்.

  நாங்கள் அனைவருமே பூமியிலேயே இருக்கிறோம். பிறப்பும் ,இறப்பும் யாவருக்கும் இந்தப் புவியி லேதான்.உலகம் என்பது நாம் வாழுகின்ற இடம். இந்த உலகம் இயங்குவதற்கு ஒரு சக்தி கட்டாயம் தேவையானதுதானே. அந்தச் சக்தியைத்தான் " ஈத்தர் " என்று அறிவியல் சொல்லுகிறது.ஈத்தர் என்னும் சக்தியானது அண்டம் முழுவதுமே நிறைந்தே இருக்கிறது என்று அறிவியல் பகர்கிறது,

  பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது என்பது வானியல் அறிவாகும். இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக் கு மாறுகின்ற நேரமாகத்தான் எங்களின்          " மகாசிவராத்திரி " வரும் நேரம் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். ஈத்தர் சக்தியானது எப்பொ ழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவரா த்திரியில் மட்டுமே  ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை " மகாசிவராத்திரி "  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

   மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச்சக்தியும்  கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது. 

  மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி  மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசீர்வாதம் ( Self Blessing )  செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ  ( DNA )  ல் கெட்ட பதிவுகளை ( கர்மா ) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

      ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்று க்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமயரதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

  ஆன்மீகத்துடன் அறிவியலைச் சித்தர்கள் இணைத்தே விட்டார்கள். சித்தர்களின் நோக்கில் சிவராத்திரி என்பது மிகவும் முக்கிய தினமேயாகும். அதுவும் மகாசிவராத்திரி உடலையும், உள்ளத்தையும், நல்ல நிலையில் வைப்பதற்கு மிகவும் உகந்த தினம் என்பதே அவர்களின் தீர்க்கமான முடிவாகும். சித்தர்களின் சிந்தனை பலருக்கும் விளங்க மாட்டாது. ஆனால் அவர்கள் உண்மைநிலையினையே உரைத்து நிற்பார்கள்.

 பசித்திருத்தல் என்பதும் தத்துவார்த்தமானது. அதாவது இறையுணர்வினைப் பெறுவதற்கு பசித்திருக்க வேண்டும். தனித்திருத்தல் என்பது தனிமையாக இருப்பதன்று. மனத்தினை அலையவிடாமல்ஒரு நிலை யில் வைத்திருப்பதாகும். விழித்திருத்தல் என்றால் நித்திரை செய்யாது இருப்பதல்ல. மனத்தை எங்குமே செல்ல விடாது இறை நினைப்பை நாடி விழித்திருக்கும் நிலையினையே குறிப்பதாகும். இம்மூன்றையும் மகாசிவராத்திரின் முக்கிய நிலையாக நாம் அனைவரும் கொள்ளுதல் வேண்டும்.

  விரதம் என்றாலே கட்டுப்பாடு என்றுதானே அர்த்தப்படும். கட்டுப்பாடு என்பது உடலுக்கு மட்டுமல்ல. உள்ளத்துக்குந்தான் என்பதை உணர்த்துவதே விரதத்தின் உயர் நிலையாகும்.மகாசிவராத்திரியில் உடல் கட்டுப்படுகிறது.உள்ளமும் கட்டுப்படுகிறது. எம்முள்ளே அபரிதமான ஒரு சக்தியும் உள்நுழைகிறது. அந்தச் சக்தியினை உள்வாங்கும் பக்குவத்தை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

  " தேடிக் கண்டு கொண்டேன் - திரு மாலொடு நான் முகனும்

    தேடிக் தேடொணத் தேவனை யென்னுளே தேடிக்

    கண்டு கொண்டேன் "

 இதுதான் உண்மையான நிலையாகும். அந்தத் தேவனை நாங்கள் அனைவருமே காணலாம். அதற்காக த்தான் யாவரும் - பசித்து, தனித்து , விழித்து , இருத்தல் அவசியமாகிறது.

  சிவனே முழுமுதற் கடவுள். சிவனே அனைத்துக்கும் காரணமாய் இருக்கிறார். அவரின்றி ஓர் அணுவுமே அசையாது.ஆதியும் அவரே. அந்தமும் அவரே. இருளும் அவரே. அதையகற்றும் பேரொளியும் அவரே. அவரை முன்னிலைப்படுத்தும் பெருவிரதமாக எங்கள் சமய நெறி கைகாட்டி நிற்பதுதான் " மகாசிவரா த்திரி " ஆகும்.அந்தப் புனிதமான தினத்திலே " தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி - அல்லல் அறுத்து ஆனந்தம் " தரும் வண்ணம் , எல்லையில்லா அன்புடன் யாவரும் அந்தச் சிவப்பரம்பொருளை இறைஞ்சி நிற்போம்.

 

           இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

      சொல்லக விளக்கது சோதி யுள்ளது

      பல்லக விளக்கது பலரும் காண்பது

      நல்லக விளக்கது நமச்சி வாயவே

No comments: