ஒலிவியா நியூட்டன் ஜான் - கானா பிரபா

 “என்னுடைய நிலையில் இருந்து கொண்டு


என்னுடைய சக்திக்கு மேல் நிறையவே சாதித்திருக்கிறேன்
என்ற திருப்தி எனக்கு எப்போதும் இருக்கிறது" – ஒலிவியா நியூட்டன் ஜான்
 
இன்று (09.08.2022) காலை அவர் விடை பெற்ற போது ஆஸி தொலைகாட்சி மேற்சொன்ன அவரின் கூற்றோடு பிரியாவிடை கொடுத்தது.

கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து) இல் பிறந்த அவர்  மெல்பர்ன் வாசியாக ஆஸி மண்ணில் வாழ்ந்ததால் இந்த நாடும் அவரைத் தன் தேசத்து மங்கை என்று சுவீகரித்துப் பெருமை கொண்டிருக்கிறது.
ஜேர்மன் மொழிப் பேராசிரியரான தனது தந்தையின் தொழில் நிமித்தம் அவரோடு குடும்பமும் 6 ஆவது வயது ஒலிவியாவும் மெல்பர்னுக்குக் குடிபெயர்ந்து இங்கேயே Christ Church Grammar School (South Yarra) பள்ளிப் படிப்பையும் கற்றவர்.


தன்னுடைய 14 வது வயதில் கலைத்துறையில் இறங்கியவருக்குக்

கிடைத்த மகுடங்களில் ஒன்று 4 முறை இசைத்துறையில் கிராமி விருதுகள், 100 மில்லியனுக்கு மேல் ரெக்கார்ட் சாதனை படைத்தவர் 20 ஆம் நூற்றாண்டின் அரைச் சுற்றில் மிக முக்கியமான பாடகியாகக் கொள்ளப்படுகிறார்.
பாடலாசிரியர், பாடகி, நடிகை, தொழில் முனைவர் என்ற பன்முகப்பட்ட முகம் கொண்டவர்.

Have You Never Been Mellow


போன்ற புகழ்பூத்த பாடல்களோடு









Grease திரைப்படத்தில் ஜான் ட்ராவோல்டா ஆடிப் பாடி நடித்த இவரின் பங்களிப்பு இவரின் புகழேணிகளில் ஒரு மகுடம்.

30 வருடங்களாக மார்பகப் புற்று நோயோடு போராடிய இவர் 2008 இல் Olivia Newton-John Cancer and Wellness Centre ஐ மெல்பர்னில் நிறுவ உதவியதோடு, மூன்று வாரம் 228 கிமீ சீனப்பெருஞ்சுவர் மீதான நடைப்பயணம் உள்ளிட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்தியது, அவர் புற்று நோய் விழிப்புணர்வு சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கு ஒரு சான்று. தன் வாழ் நாளில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்து செயற்பட்டார்.
விலங்குகள் பாதுகாப்பு மீதான கரிசனையும், தீவிர செயற்பாடும் அவருக்கு மிகவும் உண்டு.
தனது 73 வது வயதில் கலிபோர்னியாவில் தன் குடும்பம் புடைசூழ இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கிறார் Olivia Newton-John.

கானா பிரபா
09.08.2022







No comments: