நிறைவான அமைதியான வாழ்க்கையை வாழ நான் என்ன செய்ய வேண்டும்? - சிட்னி துர்க்கை அம்மன் கோவில் குருக்கள் தனாசிவம்


ஒரு வியாபாரி கடல் கடந்து வியாபாரம் செய்ய போகிறார் ,அந்த கடல் வழி பயணத்தின் பொது அவர் ஒரு சிறிய தீவை காண தன் மாலுமிகளை அந்த தீவிற்கு செல்ல சொல்கிறார் .

அந்த அழகான தீவில் இறங்கிய பிறகு அங்கே உள்ள மக்களை சந்திக்கிறார் ,நல்ல மற்றும் அமைதியான மக்கள் ,தன் நாட்டில் இருந்த பல பொருட்கள் அங்கே இல்லை என்று உணர்ந்த அந்த வியாபாரி , வியாபாரத்துக்கு உகந்த இடம் இது தான் என்று யோசித்து ,அந்த நாடு ராஜாவிடம் அனுமதி பெற அரண்மனைக்கு செல்கிறான் அந்த வியாபாரி

அங்கே ராஜா வை கண்டு அவருக்கு மரியாதையை செலுத்தி பின்

ராஜா -நீ யார் ,உனக்கு என்ன வேண்டும் ?

வியாபாரி- மகாராஜா நான் ஒரு வியாபாரி ,உங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி வேண்டும்

ராஜா - என்ன வியாபாரம் செய்ய போகிறாய் ?

வியாபாரி-வெங்காயம் வியாபாரம் செய்ய போகிறேன்

ராஜா -வெங்காயம் ? அது என்ன வெங்காயம் ?

தன்னுடன் எடுத்து சென்ற சில வெங்காயதே எடுத்து காட்டி

வியாபாரி -மகாராஜா இது தான் வெங்காயம் , இதை உணவில் சேர்த்தா , உணவின் சுவை கூடி விடும் .

அப்படியா னு சொல்லி தன் சமையல்காரனை அழைத்து அதில் உணவு செய்து கொண்டு வர சொல்ல ,சமையல்காரனும் செய்து கொண்டு வந்தான்

அதை சுவைத்த அந்த அரசன் ,அந்த உணவின் ருசியில் மெய் மறந்து விட்டான் ,அந்த வியாபாரியை ரொம்ப பாராட்டி உனக்கு என்ன வேண்டும் என்று கேள் என்றான்

வியாபாரியும் உங்களுக்கு என்ன புடிக்குமோ அதை குடுங்க அரசே னு சொல்ல ,அரசனும் பணியாளரை தன் அருகில் அழைத்து காதில் எதோ சொல்ல , பணியாளனும் சென்று ஒரு மூட்டை யை கொண்டு வந்து அந்த வியாபாரிடம் குடுத்தான் ,அதை திறந்து பார்த்த வியாபாரிக்கு சந்தோஷம் எல்லை கடந்து விட்டது ,கரணம் அந்த மூட்டையில் இருந்தது தங்கம் ,வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் .
அதை பெற்று திரும்பி தன் நாட்டுக்கு செல்வந்தாரை செல்ல ,எல்லோருக்கும் ஆஸ்ச்சரியம் ,அதில் இன்னொரு வியாபாரி சற்று பொறாமை பட்டு எப்படி இது எல்லாம் குறிகிய காலத்தில் சம்பாரித்தாய் னு வினுவ ,அவனும் நடந்ததை சொல்ல ,அந்த 2 வது வியாபாரிக்கும் ஆசை வந்து விட்டது ,அவனும் கிளம்பி விட்டான் அந்த தீவிற்கு ஆனால் தக்காளியுடன் .

இவனும் முன்னாள் வியாபாரி போல் ராஜா முன் நிக்க , அதே உரையாடல் நடக்கிறது

ராஜா- நீ என்ன கொண்டு வந்துருகிறாய் ?

வியாபாரி 2-நான் தக்காளி கொண்டு வந்துள்ளேன் மகாராஜா

ராஜா-அது என்ன தக்காளி ?

தன்னிடம் இருந்த தக்காளியை எடுத்து காண்பித்து ,இது உங்கள் உணவின் சுவையை கூடி விடும் என்று சொல்ல

மறுபடியும் தன் சமையல்காரனை கூப்பிடு ,அதில் உணவு செய்து வர சொன்னார் அந்த அரசன் ,அவனும் செய்து கொண்டுவர அதை சுவைத்த அரசன் ,ஆஹா என்ன ஒரு ருசி ,எனக்கு இந்த தக்காளி மிகவும் பிடித்து விட்டது ,என்ன வேண்டும் என்று கேள் னு அரசன் சொல்ல , 2 வது வியாபாரிக்கு சந்தோசம் தாங்க முடியலை ,

அவனும் முதல் வியாபாரி போல் "உங்களுக்கு எது ரொம்ப புடிக்குமோ அதையே குடுங்க அரசே ' னு சொல்ல ,இந்த முறையும் பணியாளரை அழைத்து காதில் எதோ சொல்ல ,பணியாளனும் சென்று ஒரு மூட்டை கொண்டு வந்து அந்த வியாபாரிடம் குடுத்தான் , ஆசையுடன் அதை திறந்த பார்த்த வியாபாரிக்கு ஒரே அதிர்ச்சி ஏன்னா அந்தா மூட்டையில் இருந்தது அரசனுக்கு இப்போ புடித்த வெங்காயம் .

அது தான் "போதும் எங்குற மனசே பொன் செய்யும் மருந்து" , அடுத்தவன் கிட்டே இருக்கு ஆனால் நம்மகிட்டே இல்லையே என்று பொறாமை படாமல் ,தன்னிடம் இருக்கும் பொருளை வைத்து வாழ்ந்தால் ,மகிழ்ச்சியும் மனநிறைவுடனும் எப்பொழுதும் வாழலாம் .

இது கற்பனையல்ல

அன்புடன் தனாசிவம்

No comments: