மாற்றம் ஏற்படுத்தும் மாமருந்து !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா  

 

 

  மாற்றம் என்பது மனிதவாழ்வில்


இன்றியமையாதது.மாற்றம் இல்லாவிடில் அதில் அர்த்தமும் இருக்காது. அந்த மாற்றமும் - தேவையான மாற்றமாகவே இருக்கவேண்டும்.சிலவேளை - ஏன் இப்படியான மாற்றம் வந்ததோ என எண்ணத் தோன்றும்.இதனால் - மாற்றம் என்பது வந்தால்
 , யாவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கவேண்டும்.அப்படிவரும் மாற்றம்தான் நல்ல மாற்றம்.அந்த மாற்றம் ஒரு சமுதாயமே பயன் பெறும ளவுக்கு இருக்குமானால் அதுவே சிறந்த மாற்றம் எனக் கருதப்படும்.

   அப்படியான மாற்றங்கள் பற்றி நாம் அறிவது அவசியம் அல்லவா ? அப்படியான மாற்றங்கள் எந்த வகை யில் நிகழ்ந்து கொண்டுருக்கின்றன என்பதையும் அனைவரும் மனத்தினுள் பதிக்க வேண்டும் என்பதே மாற்றம் பற்றிச் சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கிறது எனலாம்.

    சமயம் என்றால் என்ன? அது ஒரு " வாழும்நெறி "


.வாழ்க்கை என்றால் என்ன
 ? எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை.எப்படியும் வாழலாம் என்றால்- அதனை வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளமுடியாது.விலங்குகள் போல மனிதன் வாழமுடி யாது.

   விலங்களுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது மட்டுமல்ல புரியவும் மாட்டாது.ஆனால் பகுத்தறிவு மிக்க மனிதனுக்கு வாழ்க்கை பற்றித் தெரிய வேண்டும்.தெரியாமலும்புரியாமாலும் வாழும் வாழ்வு மனித வாழ்வு அல்ல.

    இது விலங்கு வாழ்வேயாகும்.அந்த விலங்கு வாழ்வைவிட்டு - மனிதன் மனிதனாக வாழக்கூடிய நிலை யை ஏற்படுதும் வல்லமை சமயத்துக்கே உண்டு. இதனால்த்தான் சமயம் என்பது ஒரு வாழ்க்கை நெறி யாகவும் வாழும் நெறியாகவும் அமைந்திருக்கிறது.

     சமயம் உண்மையா ? பொய்யா ? கடவுள் உண்டா ? இல்லையா ? இப்படிப்பட்ட கேள்விகள் காலங்கால மாகக் கேட்கப்பட்டுக் கொண்டே வருவதைக் காண்கின்றோம்.இதற்கான சரியான பதில்களும் அவ்வப் போது  உரியவர்களால் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.

      ஆனால் உரிய பதில அளிக்கப்பட்டபோதம் -


இம்மாதிரியான குதர்கத்தனமான கேள்விகள் இன்றும் வந்துகொண்டுதான் இருக்கிறது.எனினும் சமயம் சம்பந்தமான நடவடிக்கைகளோ
 , கோவில்கள் கட்டி வழிபாடுகள் செய்யும் நிலைகளிலோ - எந்தவிதமான தடங்கல்களும் இல்லை.பதட்டமும் இல்லை.யாவும் அதன் வழியில் செம்மையாக நடிபெறுவதைப் பார்க்கின்ற பொழுது - இதனை ஒரு மாற்றம் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

   இன்றைய உலகில் விஞ்ஞானம் பெரும்பகுதியில் வியாபித்து நிற்பதைக் காண்கின்றோம்.மனித இயக்கம் முழுமையும் விஞ்ஞானத்தை அண்டியே அமைந்திருப்பதும் கண்கூடு.விஞ்ஞானமில்லாவிடின் மனிதனே வாழ முடியாது என்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்வை விஞ்ஞானத்துடன் இணைத்து விட்டான். இதனால் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது.கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றாகிவிட்டது.

   விஞ்ஞானத்தின் உச்சியில் நிற்கும் பல மேல்நாட்டவர்கள் தமது வாழ்க்கை யைப்பறி கொடுத்துக் கொண்டிருக்கின்றோமோ என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர்,மேல்நாட்டவர் வழியையே போற்றி நின்ற கீழ்நாட்டவரும் தமது நிலைபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகிறது.

    எதனால் எல்லாமே செய்யமுடியும் என்று எண்ணியவர்கள் எல்லாம் - சற்று நின்று நிதானித்து நிற்க முயல்வதைக் காணமுடிகிறது.அதாவது - விஞ்ஞானம் , விஞ்ஞானம்எனப் பேரொலி எழுப்பிய நாடுகளும் - விஞ்ஞானம் சார்ந்தவர்களும், விஞ்ஞானம்தான் எல்லாமென எண்ணியவர்களும் - விஞ்ஞானத்துக்கு அப்பாலும் அதைவிட சக்திவாய்ந்த ஒன்று இருக்கிறது என்று உணரத் தலைப்பட்டமையைக் காணமு டிகிறது.

    அவர்கள் யாவரும் மெஞ்ஞானம் பற்றியறியவும் - அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் - அதனால்த்தான் அர்த்தமுள்ள வாழ்வுகிட்டும் என உணரத் தலைப்பட்டு மெஞ்ஞான மார்க்கத்தை நாடி,தேடி,ஓடி வந்துகொண்டி ருப்பது - ஒரு பெரிய மாற்றம் அல்லவா?

  வாழ்க்கையில் இரண்டிவிதமான அமைப்புகள் காணப்படுகின்றன.முதலாவது உலகியல் சார்ந்தவாழ்க் கை.மற்றயது உலகியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை. உலகியல் சார்ந்த வாழ்க்கையைத்தான் யாவரும் விரும்புகின்றோம்.அதில்தான் பெரும்பாலானவர்களின் நாட்டமும் செல்கிறது.

    அதற்காகவேதான் நாளெல்லாம் உழைக்கின்றோம்.அதுவும் ஓய்வற்ற உழைப்பெனலாம்.உழைப்பின் முடிவில் காண்பதுதான் என்ன என்பதுதான் முக்கிய கேள்வியாகும் !இதற்கு நாமெல்லோரும் நம்பியிருக்கின்ற விஞ்ஞான த்தால் விடை சொல்ல முடியாமல் இருக்கிறது.

     விஞ்ஞானம் என்பது ஒரு அளவுடன் தனது பணியை முடித்துக் கொள்கின் றது.அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் மெஞ்ஞானம்தான் கைகொடுக்க வேண்டும்.மெஞ்ஞானத்தால் அது முடியும் என்று கருதும் நிலை இன்று பரவலாகி வருவதும் நல்லதொரு வரவேற்கத்தக்க மாற்றம்தானே !

   சமயமும் கோவிலும் மாற்றத்துக்கு வழிவகுக்குமா ? இது ஒரு முக்கியமான கேழ்விதான்.அதே வேளை இவையிரண்டையும் விட - நல்லமாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய வேறு சாதனங்கள் இல்லையென்று யாவரும் நம்புகின்றனர்.

  விஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நிரந்தரமற்றவை.மெஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்களோ நிரந்தரமானவை.இதனால்த்தான்"மெஞ்ஞானம்" என்று சொல்லப்படுகிறது.மனிதவாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களுக்கு எல்லாம் சமயமும், அதனைத் தாங்கிநிற்கும் கோவில்களும் என்றுமே உறுதுணை யாகி நின்றன.தற்போதும் நிற்கின்றன என்பதை மறுத்துவிட முடியாது.

   மனிதவாழ்வில் அடிநாதமே இறையுணர்வுதான்.அதை ஊட்டியதும், காட்டியதும், சமயந்தான்.இறையுண ர்வு அற்று வாழும் வாழ்வு ஒரு வாழவு அன்று.உயிர்த்துடிப்பற்ற வாழ்வாகவே அது அமையும்.அதனை வாழ்வு என்று சொல்லவே முடியாது.

   உயிர்த்துடிப்புக் கெல்லாம் ஆதாரமாக விளங்கும் இறைவனுக்கு உருவம் கொடுத்து - அந்த உருவங் களில் திருவருட் சக்தியை உருவேற்றி அவற்றை வைத்து - வழிபாடு என்னும் மடைமாறத்தை ஏற்பட வழிசமைக்க உதவி நிற்பனதான் கோவில்கள்.இதனால்த்தான் -

    " கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் "

    " ஆலயம் தொழுவது சாலவும் நன்று " - என்று சொல்லப்பட்டதோ என என்ணத்தோன்றுகிறது.

    சமூகத்தின் மையமாகக் கோவில்கள் திகழ்கின்றன.இந்த நிலையை அன்று தொடக்கம் இன்றுவரை காணக்கூடியதாக இருக்கிறது.எனவேதான் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ ஊர்கள் தோறும் கோவில்கள் அமைக்கப்பட்டன.

    கோவில்களை மையமாகக் கொண்டு கிராமங்கள் வளர்ந்தன.நகரங்களும் வளர்ந்தன.நாடும் வளர்ந்தது.ஆலயத்தை அரனெனக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் மிக்கதாக அமைந்தது.

    எதைச் செய்தாலும் - அதனை ஆரம்பிக்கும் முன்னர் ஆலயம் சென்று வழிபட்ட பின்னரே செய்யும் வழக்கம் ப்ண்டுதொட்டு நிலவிவந்தது. அதனை தற்போது - சிலர் தேவையற்ற ஒன்று என்றும் , மூட த்தனமானது , என்று சொல்லுவதையும் கேட்க முடிகிறது.கோவில் என்றும் , ஆலயம் என்றும் இறைவனது சன்னிதானத்தை அழைப்பதில் கூட மிகச்சிறந்த பொருள் பொதிந்து இருக்கின்றது.

   " கோ ' என்றால் தலைவன்." இல் " என்றால் இருக்குமிடம். எனவே   " கோவில் " என்றால் உலகத்து க்கும் , உயிர்களுக்கும் எல்லாம் தலைவன் ஆகிய இறைவன் இரூக்குமிடம் என்ற பொருளாகின்றது        ." ஆலயம் " என்பதன் பொருள் - ஆன்மா லயிப்பதற்கு உரிய இடம் என்பதாகும்.எங்களது பாரம்பரியத் தில் - வாழையடி வாழையாக கோவில்கள் - நல்ல திருபத்துக்கும், மனமாற்றத் துக்கும் உறுதுணையா கவே வந்துள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

    வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல.வாழ்க்கையை - வாழ்க்கையாக எண்ணி வாழ்கின்ற மனிதன் - மனத்தை உடையவன்.அந்த மனத்தில் நல்ல சிந்தனைகள் எழுதல் வேண்டும்.

  " எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய் " என்னும் வேத வாக்கை நாம் புறந்தள்ளி விடமுடியாது.மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒரு கூட்டமாகக் கூடி எமது முழு இயக்கத்தையுமே மாற்றிச் சிதைத்துவிடும் வல்லமை பெற்றன.அகத்தோடு தோன்றும் எண்ணங்கள் வழி - புறச் செயற்பாடு களும் அமைந்து விடுகின்றன.இதனால் அகச் சிந்தனைகள் நல்ல மாற்றம் பெற வேண்டும்.அகம் நல்ல மாற்றம் பெறவும் - அதன்வழி புறச் செயற்பாடுகள் நல்லபடி அமைவதற்கான மடைமாற்றம் செய்யக் கோவில்கள் உதவுகின்றன. சமயமும் கோவிலுடன் இணைந்து நின்று மாற்றத்துக்கு வலுவூட்டி நிற்கிறது.

  புராணங்களும் , இதிகாசங்களும், எமது சமயத்தின் கருவூலங்கள். இவை யாவும் கற்பனையிலுதித்த கதைகள். விசித்திரமானவை. விளங்க முடியாதவை என்றெல்லாம் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் - அவை யாவும் - மனிதகுல மாற்றத்துக்கு அருந்துணையானவை. அருமருந்தாய் என்றும் விளங்குகின்றன.

  ஆதிகாவியமான இராமாயணத்தைப் பாடிய வான்மீகி பற்றிய ஒரு சம்பவம் கதையானாலும்- முக்கிய கருத்தொன்றை வெளிக்காட்ட உதவுகிறது எனலாம். களவுத்தொழிலையே வாழ்க்கை ஆக்கிக் கொண்டி ருந்த வான்மீகி - புனிதமான இராமாயணத்தைப் பாடி சமூகமாற்றத்துக்குப் பலவழிகளில் உதவிநின்ற பாங்கு - வான்மீகியிடம் ஏற்பட்ட மாற்றமேயாகும்.அப்படியொரு மாற்றம் ஏற்பட்டதை வரலாற்றின் வாயிலாக அறியும் பொழுது - நமக்கெல்லாம் நல்லதொரு பாடம் கிடைக்கின்றதல்லவா?

  ராம நாமத்தையே உச்சரிக்க முடியாத அளவுக்கு கல்வியறிவற்ற கசடன் ஆகவும், கடையனாகவும், இரு ந்தவனை - மரா மரா என உச்சரிக்கச் செய்து முடிவில் அந்த உச்சரிப்பு " ராம ராம " என உருமாறி ராமாயணம் பாடப்பட்டது என்பது வரலாறாகும்.இது கட்டுக் கதையாகக் கூட இருக்கலாம்.ஆனால் இதன் மூலம் வெளிப்படும் கருத்தே முக்கியமானதாகும்.இறைநாமத்தின் பெருமையும், அதனை உச்சரிப்பதால் எப்படிப்பட்ட மனமும் மாறிவிடும் என்பதும் - அப்படி ஏற்படும் மாற்றம் ஒருவருக்கும் மட்டுமே பயன் கொடுக்காது உலகத்துக்கே பயனாகி - உலகிலே பரந்துபட்டளவிலான மாற்றங்களுக்கு வழி வகுத்தது என்பதை மறுக்கத்தான் முடியுமா?

   வான்மீகி ராமாயணம் பல மொழிகளில் தழுவி மொழி மாற்றம் செய்யப்பட்டோ எப்படியோ எல்லாவி டங்களிலும் பரவிவிட்டது. அக்காவியம்-  தான் எழுந்த காலத்திலிருந்து இன்றுவரை தன்னிகரற்றதாகவே யாவராலும்  ஏற்றிப் போற்றபடுகிறது. ராமாயணத்தில் வரும் இராமன் - தெய்வமாகிவிட்டான் குடும்ப ங்கள் அனை த்தும் - இராமனைப்போலவே தங்கள் பிள்ளைகளும் இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். சீதை கற்புக்கு எடுத்துக் காட்டாகி விடுகிறாள்.எத்தகைய வல்லமைகள் இருந்தாலும் நல்லவழியில் செல் லாவிட்டால் யாவும் பயனற்று விடுவதோடு - முடிவில் அழிவையே தந்துவிடும் என்பதை - இராவ ணன் வாயிலாக உணர்த்தப்படுகிறது. இவை எல்லாம் இராமயணம் சமூகத்துக்குக் காட்டும் நெறிகளல்லவா!

   வான்மீகி மாறினான். இராமாயணம் பிறந்தது.இராமாயணத்தால் மாற்றங்களுக்கு வழியுமேற்பட்டது.   இம்மாற்றமானது சமயத்துடன் இணைந்து சமூகத்துக் கும் சென்றுவிட்டது.இதனால்த்தான் கோவில்கள் தோறும் இராமாயணம் கதையாகவும்,  கதாப்பிரசங்கமாகவும்,  வில்லுப்பாட்டாகவும், நாடகமாகவும் நிஅகழ்த்தப் பட்டுவருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

   இராமாயணம் மாற்றத்துக்கு எப்படி வழிகோலியதோ - அதே போன் றுதான் மகாபாரதமும் அமைகிறது.அரச வம்சங்களின் போட்டா போட்டி சண்டைபற்றி மகாபாரதம் கூறினாலும்- அதைல் இடம்பெறும் " பகவத்கீதை " இந்துக்களின் வேதமாகவும்,  இருதயமாகவும்,  விளங்கு கின்றது.

 வாழ்க்கையெனும் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் யாவருக்கும் பகவத்கீதை மருந்தாக அமைகின்றது.மனதில் ஏற்படும் எண்ணங்கள் செயலைத் தீர்மானிக் கின்றன.அந்த எண்ணங்கள் நல்லதாக அமை யின் செயல் நல்லபடி அமையும்.  அல்லாவிடின் தீய விளைவுகள் ஏற்ப டும்.எனவே மனந்தான் யாவற்றுக்கும் அடிப்படை.மனதை நல்வழிப் படுத்தக் கீதை வழி சொல்லுகிறது.

   கீதையின் போக்கே தனித்துவமானது.அதனால்த்தான் யாவரும் பொன்னே போற்றுகின்றனர்.உலகியல் நடைமுறையில் சென்று - உள்ளத்தைத் திருத்தி  உள்ளுக்குள் உறைந்துகிடக்கும் அழுக்குகளை அகற்றி - உலப்பிலா ஆனந்தம யமான இறையுணர்வை ஏற்படுத்தும் பெருமாற்றத்தை இன்றளவும் "பகவத்கீதை" ஆற்றிக் கொண்டிருக்கி றது.பாரதத்தில் இடம் பெறும் பஞ்ச பாண்டவர்கள் அறத்துக்கு எடுத்துக்காட்டா கவும் , நூற்றவரான திரியோதன்  ஆகியோர் மறத்துக்கு எடுத்துக்காட்டாகவும், விளங்குகின்றனர்.நோயைக் குணப்படுத்தும் மருந்து அளவில் சிறியதானாலும் - அதன் செயற்பாடு மிகப் பெரியது. இத்தத் துவம் மகாபாரதத்தால் உணர்த்தப்படுகிறது. அருமருந்தாக விளங்கும் இவைகள் மாற்றங்களுக்கு என்றும் வழிவகுத்தபடியேதான் இருக்கின் றது என்பது உண்மையல்லவா?

  ' பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ " - என்று போற்றப்படுபவர் சேக்கிழார். அரசப தவி வகித்த போதும் அவர் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் அரனடியையே சரணடைந்தார்.

   கவித்துவம் மிக்க சேக்கிழார் - தனது சிந்தனையை சிவனடியார் பற்றிச் சொல்லுவதில் செல்லவி ட்டார்.அதன் விளைவாக எமது சமயம் பெற்ற வரப்பிரசாதம்தான் " பெரியபுராணம் " ஆக அமைகிறது. தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே என்பதற்கு ஒப்ப - சிவனடியார்களின் வாழ்விலேற்பட்ட சம்பவங்களையும், அதனால் அவர்கள் எவ்வாறு மன மாற்றம் பெற்றார்கள் என்பதையும் - சேக்கிழார் காட்டும் விதத்தால் நிச்சயம், நாமும் மாற்றத்துக்கு ஆளாகி விடுவோம்!

  பெரியபுராணத்தில் வரும் அடியார்களின் மாற்றங்கள் யாவும் நிகழ் வதற்கு நிலைக்களனாக அமைந்தன சமயமும் கோவில்களுந்தான்.

  நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரை மாற்றியதும் கோவில்.நாவுக்கரசரை மாற்றி யதும் கோவில்.சுந்தரத் தமிழ்பாடிய சுந்தரரை மனம்மாற்றி ஆட்கொள்ளப்பட்ட இடமும் கோவிதான்.முதல் அமைச்சராக இருந்தவர் பட்டம், பதவி, அந்தஸ்த்து அத்தனையும் உதறிவிட்டு மனம் மாறிவந்து மணிவாசகராகி மணிமணியான திருவருட் பொதிந்த வார்த்தைகளை வழங்கினாரென்றால் அதற்கு வழிவகுத் ததும் கோவில்தான்.

   அறுபத்துமூன்று நாயன்மாரின் வாழ்க்கையே மாற்றம் பெற்றமைக்கு - சமய நன்னெறியும் கோவில்களும்தான் முக்கியமான காரண மென லாம்.இதனால்த் தான் அவர்கள் தமது வாழ்க்கையை இறைபணி யிலும், கோவிலுடனும் இணை த்துக் கொண்டார்கள். இவர்களது மாற்றம் சமூகத்தில் மாற்றத்துக்கும்- கோவில்கள் வளர்ச்சிபெறவும் பெருந்துணையாக இருந்தது எனலாம்.

   சம்பந்தப்பெருமான் தொடக்கம் பல அடியார்களால் பாடப்பட்ட இறைவன் புகழ் சேர்க்கும் பக்திப் பனுவல்கள்தான்எமது சைவத் திருமுறைகள்.கோவில் தோறும் அடியார்கள் சூழ்ந்துவரச் சென்று உழவாரப் பணிசெய்தும், இன்னும் பல தொண்டுகள் செய்தும்- இறைவன் பெரும்புகழைப் பரவிப் பாடியமைதான் திருமுறைகள்.

  இவ்வாறு பாடப்பட்ட திருமுறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.பலரை மாற்றமுறச் செய்தது.இதனால் நன்னெறி வளர்ந்தது.கோவில் வழிபாடும் சிறப் படைந்தது.நாயன்மார்களின் தோற்றமும் அவர்களது செயற்பாடுகளும்தான் - இன்றளவும் நாங்கள் நல்லதொரு சமய வாழ்வை வாழவும் - அறவழியில் செல்லவும் - உதவியதை மறக்கமுடியாது.இவை நல்ல மாற்றங்கள்தானே !

  " திருப்புகழ்" எங்கல் சமயத்துக்குக் கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமாகும்.  கோவில்களிலே திருமுறை ஓதும்போது திருப்புகௌம் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் அதன் அமைப்பும், இறைவன் புகழைக் கூறும் விதமுமாகும்.  தமிழ் மொழியில் இப்படிப் பாடமுடியுமா என்னும் அளவுக்கு மிகமிக அற்புத மாக அமைந்திருப்பதுதான் திருப்புகழ்.

 அந்தத் திருப்புகழைத்தந்த அருணகிரியார் பற்றிப் பார்க்கும் பொழுது அவர் யாவரும் வெறுக்கும்படியான அருவருக்கத்தக்க இழிவானமுறையில்வாழ்ந்தார் என்று அறியமுடிகிறது.யாவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்தவரை மாற்றியது எது ? அதுதான் இறைவனின் திருவருள்!அருணகிரியாரின் மாற்றம்  அவருக்கு மட்டும் பயன்பட்டதா ? இல்லவே இல்லை ! யாவருக்கும் பயன்பட் டது.அவரது மாற்றத்தினால் திருப்புகழோடு - கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் என்னும் அரிய தத்துவங்களும் பாடல்களாக வந்து சேர்ந்தன.நாளும்பொழுதும் கோவில்கள் தோறும் பயபக்தியுடன் ஓதப்படுகின் றன்.பலருக்கும் பக்திக்கு வழிகாட்டியும் நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

 நல்லைநகர் தந்த நாவலர் பெருமானை சைவர்கள் தமது ஐந்தாவது குரவராக கொண்டுள்ளனர்.

  " நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்

    சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே

    எல்லரிய வேதமொடு ஏத்து ஆகமங்களெங்கே " - என்று போற்றும் வண்ணம் நாவலர் பெருமான் சைவ சமயத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். நாவலர் மட்டும் இல்லறத்தில் இறங்கி அதன் வழி சென்றிருப்பா ரேயானால் அவரின் ஆற்றல்கள் இந்தளவுக்கு எமது சமயத்துக்கு உதவியிருக்குமா என்பது கேள்விக்குரி யதே!ஆனால் நாவலர் தனது வாழ்க்கைப் போக்கையேமாற்றினார்.

   மாற்றம் பெற்றதன் விளைவால்த்தான் அவரால் சைவத்தைக் காப்பாற்றவும், சைவம் இன்றும் ஈழத்தில் தளைத்து நிற்கவும் முடிகிறது எனலாம்.தான் மாறி யது மட்டுமன்றி - மற்றவர் மனங்களிலும் நல்ல சமய மாற்றம் வரவும் பெரும் பங்காற்றினார்.

 புராணங்களையும் , இதிகாசங்களையும், கோவில்களில் சாதாரண மக்களும் விளங்கும்படி பிரசங்கம் மூலம் எடுத்து விளக்கினார்.பெரிய புராணத்தை யாவரும் விளங்கும்படி வசனநடையில் ஆக்கினார்.கந் தபுராணத்தைக் கோவில்கள் தோறும் விளக்கினார்.சமய அனுட்டானங்கள் பற்றி நீண்ட விரிவுரைகளை கோவில்களில் ஆற்றினார்.நாவர் தனது சமயப்பணியை மேற்கொள்ளத் தேர்ந் தெடுத்த இடம் கோவில்கள் தான்.

  சம்பந்தரும் அப்பரும் கோவில்கள் தோறும் சென்று இறைபுகழைப் பாடி சமயம் வளர்த்து மக்களிடையே மாற்றம் வரச்செய்ததுபோல - நாவலர் தனது பேச்சைக் கோவில்கள்தோறும் நிகழ்த்தி மக்கள் மனதில் நல்ல மாற்றம் வரச் செய்தார்.

   நாவலர் ஏற்படுத்திய மாற்றத்தால் நாவலர் கலாசாரம் என்ற ஒன்றும் - கந்தபுராண கலாசாரம் என்ற ஒன்றும் ஈழத்தில் உருவாகி நல்ல மாற்றம் வருவதற்கு வழிவகுத்தது எனலாம்.

  எம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.அவர்தனது வாழ்க்கையை மாற்றி அதனை இறைவழிபாட்டிலும் , சமயவளர்ச்சியிலும் செலுத்தினார்.ஊரெல்லாம் சென்றார்.இறைவன் பற்றியும், பக்தி பற்றியும், வாழ்வாங்கு வாழுதல் பற்றியும், தர்மம் பற்றியும், அன்னதா னம் பற்றியும், எடுத்துச் சொன்னார்.சொன்னதோடு நின்றுவிடாமல்- நாவலர் பெருமான் போன்று செய்தும் காட்டினார்.

   தேடிய பொருளையெல்லாம் தெய்வப்பணிக்கே அர்ப்பணம் செய்தார். உலகு எங்கும் சென்றுவந்தார்.அவ ரது இறைபக்தியினால் பலர் மாற்றம் அடைந்தனர். சமூகத்தில் மாற்றங்களுக்கு அவரின் செயற்பாடுகள் பெரிதும் உதவியது. அவர் தனது கதாப்பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கோவில் கள்தான்.கோவில்கள் காந்தசக்தி மிக்கன.யாவரையும் தன்வயமாக்கக் கூடியன. எனவேதான் நாவலரைப் போன்று வாரியார் சுவாமிகளும் கோவிலைத் தெரிவு செய்தார்.இதனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் ஓரளவுக்கு நிகழ்ந்தது எனலாம்.

   இன்பம் கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் என்றெண்ணி - உல்லாச விடுதி களை நோக்கிச் செல்லுகின்ற னர்.அங்கு சென்றால் உல்லாசமாக இருக்க முடியும் என்றே எண்ணுகின்றனர்.பொழுதை ஒரு வழியாகப் போக்கிவிட்டோம் என்றும் எண்ணுகின்றனர்."

  பொழுது " என்பது பெறுமதியானது.பொழுதைப் போக்கிவிட்டோம் என்பது அர்த்தமற்றதாகும்.                " பொழுதை "பொருத்தமான முறை யில், பயன்தரும் வகை யில் பயன்படுத்த வேண்டும்.பொழுதை நாம் பொருந்தா வகையிலே செலுத்த முற்பட்டால் - எமது மனம்,  சிந் தனை, செயற்பாடு யாவுமே தடம் புர ண்டே போய்விடும். இங்கெல் லாம் சென்று எமது அரிய பொழுதினை வீணடிக்கின்றோமேயன்றி பயனு டையதாக்குகின்றோமல்ல என்பதை யாவரும் உணருதல் அவசிமானதாகும்.கேளிக்கைகளும், ளிப்பா ட்டங்களும் என்றுமே நல்ல மாற்றங்களைத் தரவே மாட்டாது என்பதையும் நாமனைவரும் கட்டாயமாக மனத்தில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.

  " அரிது அரிது மானிடர் ஆதல் அரிது " என்பதை யாவரும் அறி வோம்.அப்படி அரிய பிறவியில் வந்த நாங்கள் சுதந்திரமாக வாழ லாம்.விலங்குகளுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது. நாகரிகம், பண் பாடு, கலை, கலாசாரம், உயர்வு, தாழ்வு, படிப்பு, உழைப்பு, தானம், தர்மம், இவையாவும் மனித சமூகத்துக்கே உரியன.இவை பற்றி விலங்குகள் நினைத்தே பார்ப்பதும் இல்லை.

   இதனால் மாற்றம் என்பதுபற்றி அவைகள் அலட்டிக் கொள்வதே இல்லை.  ஆனால் மாற்றம் என்பது மனித சமூகத்துக்கு மிகவும் அவசி யமானதாகும்.அந்த மாற்றமும் நல்ல மாற்றமாகவே அமைவதும் மிகவும் கட்டாயமாகும். அந்த வகையில் சமூகத்தில் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன அவை சமூகத்துக்கு எப்படியெல்லாம் நல்ல வழியாக அமைந்தன என்பதையெல்லாம் பார்த்தோம்.

   எதை எப்படிச் செய்தால் நன்மைவரும் அல்லது தீமைவரும் என்று அறியும் ஆற்றல் மனிதனுக்கே இருக்கிறது.நல்லபடி வாழ நல்ல மாற்றங்கள்தானே அவசியமானது.அந்த மாற்றங்களை நாமும் எமக்குள் ஏற்படுதிவிடலாம்.

   பயப்படாதீர்கள் ! இன்று - உலகம் போகும் போக்கில் எத்தனையோ மார்றங்கள் ! என்னதான் செய்யமுடியும் என்று நீனைக்கிறீர்களா ! சற்று நின்று நிதானியுங்கள் ! சஞ்சலங்கள் மிகுந்து விட்டதா ? நித்திரையும் வர மறுக்கின் றதா ? எல்லாமே வெறுமையாகத் தோன்றுகிறதா?

     இவையாவும் தீர வழியைத் தேடுகிறீர்களா? நல்ல மருந்தையும் நாடு கிறீர்களா? யாவற்றுக்கும் - நல்ல மருந்தும், மாற்று வழியும், உங்கள் அருகி லேயே இருக்கிறது.அது ஏன் இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லை என எண்ணுகிறீர்களா? நீங்கள் இன்னும் அந்த இடத்தின் அருமையைப், பெருமை யை அறியவில்லை.அதனை நாடவில்லை! தேடி ஓடவில்லை !

    கவலைப்படாதீர்கள் ! அந்த இடம் எங்கும் இல்லை. உங்கள் இருப்பிடத் துக்கு அருகிலோ அல்லது சற்று தூரத்திலோ அமைந்திருக்கும் " கோவில்கள் " தான்.கோவில்களுக்கு இன்னுமொரு சிறந்த பெயர்தான் " சாந்திநிலையம் " அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், பாசம், நேசம், சாந்தி, சமாதானம், அமைதி, அடக்கம், ஆனந்தம், ஆரோக்கியம், அத்தனையையும் இலவசமாக வழங்கி நிற்கும் இடம் கோவிலக்ள்தான்.

  கோவிலுக்குச் சென்றால் மனப்பாரம் குறையும்.சஞ்சலங்கள் மறைந்துவிடும். மூர்க்க குணங்கள் அடங்கிவிடும்.மற்றவர்மீது பற்றும் பாசமும் ஏற்படும்.தாய்மை ஊனர்வு உருவாகும்.தாழ்மை உணர்வு ஏற்படும்.சகோதரத் துவம் வந்துவிடும்.உயர்வு தாழ்வு ஓடிவிடும். போட்டியும் பொறாமையும் தவிடு பொடியாகிவிடும்.

   போலிக் கெளரவம் பொசுங்கிவிடும்.மனமெல்லாம் தூய்மையான உணர்வு எழுந்துநிற்கும்.அமைதி தானாவந்து நிற்கும்.அங்கு ஒருவித ஆனந்தம் பொங்கிப் பிரவாகிக்கும்.

   இந்தப்பிரவாகத்தில் தினமும் நாம் நம்மை இணைத்துக் கொண்டால் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிடும்.மாறிவிடுவதை உணரு கின்ற வேளை - எம்முள் இன்பவெள்ளம் பாயும்.அதுதான் இறைவனின் பெருங்கருணை.இந்த உணர்வைத்தான் பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் அடைந்தர் என அறிகிறோம்.

  " தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே "

இது ஒரு நல்ல மாற்றம் அல்லவா? மனம் மாற்றம் அடைய உடலும் மாற்றம் அடைந்து செயற்பாடும் மாற்றம் அடைந்து - தூய்மையும் இறையும் ஒன்றாகும் இடம் கோவில்தான்.

  இன்னுமே மாற்றம் அடையாது இருப்பவர்களே- அனைவரும் வாரு ங்கள் ! கோவிலுக்குச் செல்லுவோம் ! மனம் மாற்றம் ஏற்படுத்தும் மாமருந்து கோவிலில்த் தானிருக்கிறது.ஆலயத்தைத் தொழுவோம் ! ஆண்டவனை நினைப்போம் ! சமயவழியில் செல்லுவோம் ! மாறாத மனமெல்லாம் நிச்சயம் மாற்றம் அடையும்.மாற்றம் என்பது நடந்தே தீரும் ! அதுவும் நல்ல மாற்றம் என்பதே நல்ல வாழ்வுக்கும் தேவை யாகும்.அதனைத் தந்தது சமயமும் கோவில்களும்தான். இன்றளவில் தந்து கொண்டிருப்பதும் சமயமும் கோவில்களுமேயாகும். ஆகையால் த்தான் "ஆலயந் தொழுவது சாலவும் நன்று "  , " கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " என்னும் எண்ணம் எமது   முன்னோர்கள் சிந் தனையில் உதித்திருக்குமோ என எண்ணக் கூடியாதாய் இருக்கிறதல்லவா !

 


No comments: