JOHN LOGIE BAIRD - - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணே சர்.

 .

இன்று நாம் வீட்டுக்கு வீடு வைத்திருக்கும் தொலைக்காட்சி மூலம் பல விந்தைகளைக் கண்டு வியக்கிறோம். எமது வாழ்வின் அன்றாட விஷயங்களில் இருந்து பிரிக்க முடியாததாக தொலைக்காட்சி இன்று அமைந்து விட்டது.ஆனால் இதை ஆக்கிய தந்தையான Logie Baird தனது ஆக்கங்களைப் பார்த்து வியப்பதற்கு உயிரோடு இருக்கவில்லை.

Logie Baird Scotland 
நாட்டின் Helensburgh  கைச் சேர்ந்த இளைஞர். இந்த இளைஞனின் கல்வி, பொழுது போக்கு, கனவு யாவும் ஒலி அலைகளை Radio Waves மூலம் வெகு தூரத்துக்கு அனுப்புவது எவ்வாறு என்பது பற்றியதாகவே இருந்தது. அலைகளை வெகு தூரத்துக்கு அனுப்பி அதனைப் பார்க்கவும் கூடியதாக ஆக்க முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

இரவு பகலாக இவன் இதற்காக உழைத்தான். மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது இதற்காகக் கடுமையாக உழைத்தான் Logie.

ஒரு நாள் ஓர் உயர்ந்த கம்பத்தின் மேலேறி சில சோதனைகளைச் செய்ய முற்பட்ட போது, பலத்த மின் தாக்குதலுக்கு உட்பட்டு தூக்கி வீசப்பட்டான். இதன் பயனாக நோய்வாய்ப்பட்டு ஆறு மாதங்கள் வரையில் படுக்கையில் இருக்க நேர்ந்தது. இதன் போது அவனது கனவெல்லாம் தவிடுபொடியாகியது. இதனால் மிகவும் வருந்திப் புலம்பினான்.





இவனை வைத்தியசாலையில் பராமரித்த தாதி இவனது நிலையைக் கண்டு, இரங்கி, அவனது கனவு நனவாக உடன் இருந்து உதவுவதாக வாக்குறுதி அளித்தார். அவனது வாழ்க்கையில் இதன் மூலம் வசந்தம் வீசத் தொடங்கியது. Margaret Albu என்பது அந்த Nurse இன் பெயர். இப் பெண் இவனது எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுத்ததுடன் அவனில் காதல் கொண்டு அவனைத் திருமணமும் செய்து கொண்டார்.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் Television  கண்டுபிடிப்பில் வெகு மும்மரமாக  ஈடு பட்டனர். இவர்களின் அந்தக் கனவு ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி 1925ல் நனவானது. முதலாவது கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி உருவானது. இந்த வெற்றியில் தம்பதியினர் மகிழ்ந்தனர்.

 
இதனை அறிந்த Scotland அரசு அவர்களுக்கு உதவ முன் வந்தது.அதன் மூலமாக முதலாவது தொலைக்காட்சி நிலையம் ( TV Station) நிர்மானிக்கப்பட்டது. அதே நேரம் இரண்டாம் உலகப் போரும் மூண்டது. அதனால் இம் முயற்சி தடைப்பட்டது.

எனினும் Logie உம்  Margaret உம் மனம் தளரவில்லை.அவர்கள் வர்ண அலைகளை எவ்வாறு படமாக்குவது என்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இதிலும் வெற்றி கிட்டியது.

இது இவ்வாறிருக்க Scottish அரசு 2ம் உலக மகா யுத்தத்தில் Germany யினை வெற்றி கொண்டதை வெற்றிவிழாவாகக் கொண்டாட நாள் ஒன்றை நியமித்தது. இந்த வெற்ரி விழாவையே  முதலாவதாக வர்ணத் தொலைக்காட்சியில் காட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக Logie கடுமையாக உழைத்தார். இரவு கடுமையாக உழைத்த Logie மறு நாள் எழுந்திருக்கவே இல்லை.


தனது 57வது வயதில் மாறாத் துயிலில் அவன் ஆழ்ந்து விட்டான். மறுநாள் வெற்றி விழாவிற்குப் பதிலாக Television இன் தந்தையான Logie யின் இறுதி ஊர்வலம் சகல அரச மரியாதைகளுடன் ஒரு வெற்றி வீரனுக்கு அளிக்கும் இறுதி மரியாதையாக நடந்தேறியது..




Logie
யின் வெற்றிக்கு அயராது உழைத்த Margaret கண்ணீர் சிந்த, Scotland மக்கள் இந்த மாவீரனுக்கு சிரம் தாழ்த்தி தம் அஞ்சலியைச் செலுத்தினர்.

 


No comments: