அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் சீன கப்பல்
சீரடி பாபா ஆலயத்துக்கு இராஜகோபுரம் அமைப்பு
இலங்கை பிக்குமார்களுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு
சட்டமீறலில் கைது செய்யப்பட்ட ரிஷாட் - அப்துல்லா மஹ்ரூப் சீற்றம்
ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ரிஷாட் பதியுதீன் கைது! கண்டனத்தை வெளியிட்ட த.தே.ம.முண்ணனி
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் சீன கப்பல்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் வந்த சீன கப்பலை அங்கிருந்து விரைவாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அறிவித்துள்ளது.
கோளாறு காரணமாக நேற்று (20) இரவு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு குறித்த கப்பல் நுழைந்ததாகவும், தற்போதுவரை துறைமுகத்திற்கு வெளியே குறித்த கப்பல் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீன கப்பல், சீன அணுசக்தி வலு உற்பத்தி நிலையத்திற்கான யுரேனியத்தை கொண்டு செல்வதாக, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கதிரியக்க பொருட்களுடன் கப்பலொன்று வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது பற்றி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
சீரடி பாபா ஆலயத்துக்கு இராஜகோபுரம் அமைப்பு
இன்று அடிக்கல் பிரதிஷ்டை; புஷ்பா பசில் ராஜபக்ஷ பங்கேற்பு
ஸ்ரீ சத்ய சாயி பாபா மகான் சீரடி சாயி பாபா அவதாரங்களின் ஆலயத்தின் 52 ஆவது ஆண்டை முன்னிட்டு கொழும்பு, புதுச்செட்டித் தெருவிலுள்ள சாயி நிலையத்தின், சீரடி ஆலயத்துக்கு இராஜகோபுரம் கட்டப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று காலை 08.00 மணியளவில் சிவாச்சாரியார்கள் சகிதம் நடைபெறும்.
இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் பாரியார் சட்டத்தரணி புஷ்பா ராஜபக்ஷவும் கலந்துகொண்டு அடிக்கல் பிரதிஷ்டை செய்வார்.
நன்றி தினகரன்
இலங்கை பிக்குமார்களுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, ஜனாதிபதி மாளிகையில் இலங்கை பெளத்த பிக்குகளின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளில் சிறந்த உறவுகளை பேணி வருவதால் பாகிஸ்தான் இலங்கையுடனான தனது உறவை மிகவும் மதிக்கிறது என்றும் பாகிஸ்தான் இலங்கையை ஒரு சிறந்த பங்காளியாகவும் நண்பராகவும் கருதுவதாகவும் இதன்போது ஜனாதிபதி ஆல்வி தெரிவித்தார்.
தூதுக்குழுவை வரவேற்று உரையாற்றும் போது, பாகிஸ்தான் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் பிறப்பிடமாகவும், புத்தரின் பெருமை வாய்ந்த மிக புனிதமான சில நினைவுச்சின்னங்களை தன்னகத்தே கொண்ட இடமாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் வேறு எந்த நாட்டையும் விட மிக அதிகமான பெளத்த நினைவுச்சின்னங்கள் காணப்படுவதால் பாகிஸ்தானில் உள்ள பெளத்த மத இடங்களை பார்வையிட இலங்கை பெளத்த பிக்குகளையும், மக்களையும் ஊக்குவிக்குமாறு அவர் தூதுக்குழுவிடம் வேண்டிக்கொண்டார். நன்றி தினகரன்
சட்டமீறலில் கைது செய்யப்பட்ட ரிஷாட் - அப்துல்லா மஹ்ரூப் சீற்றம்
25/04/2021 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அப்பட்டமான சட்டமீறல் நிகழ்ச்சியே முறையாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வழிநடாத்தப்படாமலும் சபாநாயகரின் அனுமதியின்றிய கைதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நன்றி IBC Tamil
ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ரிஷாட் பதியுதீன் கைது! கண்டனத்தை வெளியிட்ட த.தே.ம.முண்ணனி
25/04/2021 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிக்கின்றது என அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில்,
இந்த கைது இடம்பெற்ற விதம் – பொலிஸ் ஆட்சியிலுள்ள கட்சியின் ஒரு பகுதியாக இயங்கும் நாட்டில் இடம்பெறும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலான கைதுகளை போன்றே இது இடம்பெற்றது என்பதனை வெளிப்படுத்தும் அனைத்து வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிஒருபோதும் வழங்கப்படாது என்பதை தயக்கமின்றி தெரிவிக்க முடியும்.
மாறாக நாடு அநீதியின் பாராம்பரியங்களுடன் விடப்படும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் நீதிநடவடிக்கைகள் குறித்த அனுபவங்கள் ஆதாரங்கள் அற்ற நபர்களை தண்டிப்பதற்கான கருவியாக அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment