இந்திய அணி வீரர்கள் அளித்த இந்த பரிசுக்கு நன்றி. ஆஸி வீரர் நாதன் லயன் வெளியிட்ட புகைப்படம்.

Jan 28, 2021, 10:54AM IST 

இந்திய அணியை கொடுத்த இந்த பரிசுக்கு மிகவும் நன்றி என நாதன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த கையெழுத்திட்ட ஜெர்ஸ்ஸியின் புகைப்படத்தில் அனைவரும் கையெழுத்திட்டு இருக்க அதில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் மட்டும் கையெழுத்திட்டு ஒரு ஸ்மைலி வரைந்து வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி இத்தொடரை முழுவதுமாக இழக்கும் என்று கூறிய நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. அதிலும் குறிப்பாக 32 ஆண்டுகள் கழித்து பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.
இந்திய அணி பெற்ற இந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை மட்டுமே வைத்து ரஹானேவின் தலைமையில் இந்த போட்டியை கைப்பற்றியது பெரிய அளவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் கடைசி டெஸ்ட் போட்டியான அந்த போட்டி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதனுக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும்.

எனவே போட்டி முடிந்ததும் அவருக்கு நினைவு பரிசாக இந்திய அணியின் கேப்டன் ரஹானே இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆட்டோகிராப் வழங்கிய ஒரு ஜெர்சியை அவருக்கு நினைவு பரிசாக போட்டி முடிந்ததும் பரிசளிப்பு விழாவின் போது வழங்கியிருந்தார். இந்த தொடரில் இந்திய அணி வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து பலரும் வார்த்தைகளால் விமர்சித்தாலும் இந்திய அணி வீரர்களின் இந்த செயல் அனைவரையும் வியக்கவைத்தது.


ஒரு கேப்டனாக, ஒரு ஜென்டில்மேனாக ரகானே அவருக்கு அளித்த இந்த பரிசு அப்போதே சமூக வலைத்தளத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் ரஹானேவிற்கும் மற்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாதன் லயன் வெளியிட்டுள்ள பதிவில் : இந்திய அணியின் வீரர்கள் கையெழுத்துடன் எனக்கு கொடுத்த ஜெர்சி மிகப்பெரிய பரிசு. உங்களுடைய உயர்ந்த குணத்தை இந்த பரிசு காண்பிக்கிறது.

இந்திய அணியை கொடுத்த இந்த பரிசுக்கு மிகவும் நன்றி என நாதன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த கையெழுத்திட்ட ஜெர்ஸ்ஸியின் புகைப்படத்தில் அனைவரும் கையெழுத்திட்டு இருக்க அதில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் மட்டும் கையெழுத்திட்டு ஒரு ஸ்மைலி வரைந்து வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி Crictamil


No comments: